பூ பூக்குதே 382

‘ நீங்க அழகாவே இருக்கீங்க….”
“அது யாரு உங்ககூடவே ஒரு தடியன்…உங்க கூட ஒட்டிக்கிட்டு வந்தான் A2B ல….’
‘உங்க லவ்வரா… ம்ம்ம்ம் ஆள் சுமார்ட்டா தான் இருக்கான்(ர்)..’
‘எனக்கு பொறாமையா இருக்கு…அவன பாத்தா’
‘ஏங்க ஆன் லன்லயே வர மாட்டீங்களா..’
அனுப்பிவிட்டு அதை ஆன் லன்லயே வச்சிட்டான் மோகன்…. அவள் வரவில்லை… ஆப் லைன் தான் காட்டியது…

கொஞ்ச நேரத்தில் ஹர்சினி ஆன் லன் ல வரவும்.. இவளை ஆப் லைன்ல போட்டுட்டு
ஹர்சினியிடம் சாட் பண்ண தொடங்கினான்…. ஒரு 1/2 மணி நேரம் ஓடியது…

திடீரென்று.. ஈஸ்வரி…யிடம் இருந்து மெசஸ்ஜ்…. ஆனால் அவள் பெயரில் ஆப் லன் தான் காட்டியது.. கள்ளி என்ன ஆப்
லன்ல போட்டுட்டு அங்க யாரிடமோ கதை பேசுகிறாள்.. மெசஸ்ஜ் பாத்து பதில் போடுறாள்…

‘நான் ஆன் லன்ல இருந்தா என்ன ஆப் லன்ல இருந்தா என்ன…’
‘உனக்கு மெஸஜ் வருதா அத மட்டும் பாரு…’
‘நான் எங்கயும் போகலை வீட்ல தான் இருந்தேன் ‘
‘நீ யாரிகிட்டயோ நல்லா அடி வாங்க போறப்பா பாத்து உடம்பு ஜாக்கிறதை..’

அடிப்பாவி இப்படியா புழுகுவீங்க .. ம்ம்ம் … எல்லாரும் இப்படித்தானோ….மோகன் அதற்கு பதில் போடவில்லை… போட்டால் அவள் புரிந்து கொள்வாள்… நீயும் அப்படித்தானே என்று திருப்பிக் கேட்டால்…..அனைத்துவிட்டு தூங்க சென்றான்….

நாட்கள் பறந்தன…

ஒரு மீட்டிங்க அதுவும் ஆல் இந்தியா ல்வெல்ல பன்னுரது எவ்வளவு கஷ்டம்னு அப்பதான் மோகனுக்கு புரிந்தது….ஒரு பெரிய லிஸ்ட் எடுத்து அவங்க கம்பனியுடன் வைத்த turnover.. மற்றும் கொள்முதல்.. அதை சரி செய்து லிஸ்ட் கொடுத்து அதுல மாற்றம், அப்புரன் செக்;லிஸ்ட்… அப்புறம் அது முடிவடைந்து இறுதி வடிவம் கொடுக்க…
இன்விடேசன் அடிக்க… யார் யார் வராங்க அவங்களுக்கு மெயில் அனுப்பி கன்ப்ர்ம் பண்ணி, ரூம் புக் பண்ணி… மெனு செக் பண்ணி

என்ன என்ன புராடக்ட் கொண்டு போகனும் லிஸ்ட்…. அதுக்கு தேவையான மற்ற உப கரணங்கள்… ete..etc… ஒரு வாரம் பெண்டு நிமித்தி விட்டது மோகனுக்கு.. இதற்கிடையில் சாட்டாவது ஒன்னாவது.. எல்லாம் பரன்ல தூக்கி போட்டாச்சு…
அந்த நாளும் வந்தது…..அது ஒரு வியாழக்கிழமை…. இரவு 9.30 பாண்டியன் எக்ஸ்பிரஸ்… எல்லாருக்கு 3 டயர் ஏ சி.. கோச்…எல்லாம் நம்ம
கிட்டத்தட்ட 60 பேர்… மீதம் உள்ள சிலர் நேரடியாக மதுரை வருவதாக சொல்லி இருந்தனர்…சிலர் மறு நாள் மாலை நேரடியாக ஹோட்டலுக்கு
வருவதாக சொல்லி விட்டனர்..

அகிலா தன் பேக்கை தூக்கி கொண்டு வர பின்னால் பியூன் ஒரு பெரிய ட்ராலி பேக்க இழுத்து கொண்டு வந்தான்..அகிலா அந்த டிராலி பேக்கை கொடுத்து இது உன் பொறுப்பு என்றாள்..

இழுத்து பார்த்தான் செம கனம்…

என்ன அகிலா இது பொனம் மாதிரி கனக்குது…

ஆமா அத ரெம்ப அடிச்சாலும் பொனம் தான்…

என்னது…

ஆமாடா… ஃபுல்லா பாட்டில் எல்லாம் ஃபாரின் அயிட்டம்…எம் டி கொடுத்து வுட்டார்… பொறுப்பா அங்க கொண்டு வந்துடு..
மவனே இடைலை யாராவது கைய வச்சா.. அவ்வளவு தான்.. நீ குடிப்பியா..

மோகன்.. மண்டைய ஆட்டினான்..

என்ன ஒன்னு ஆமான்னு ஆட்டு இல்லை இல்லைன்னு ஆட்டு பொத்தம் பொதுவா ஆட்டினா என்ன அர்த்தம்…

இல்லை எப்பவவாவது….

சரி தான் பாலுக்கு பூனை காவல்… சிரித்தாள்…

எல்லாரும் வந்தாச்சான்னு பாரு… டிக்கெட் இந்தா… சொல்லி விட்டு அவளுக்கு என்று இருந்த பெர்த்தில் போய்
உட்கார்ந்து கொண்டாள்… அவளுடன் இன்னொருத்தி சேல்ஸ் ல உள்ளவ.. அவளுடன் இணைந்து கொண்டாள்…

வண்டி கிளம்பியது… ம்ம்ம் செக்கிங்க் முடிந்து… பாண்டியன் செங்கல் பட்டு தாண்டியது…..இரவை கிழித்துக் கொண்டு…

வந்தார் G.M. Sales… என்ன மோகன் சரக்கு எங்க என்றார்..

சார் அந்த டிராலில இருக்கு சார்..

போ மோகன் போய் ஒரு பாட்டில் எடுத்துட்டு வா.. மெல்ல கொண்டு வா சத்தம் போடாம ..ம்ம்ம்

நான் வாசல் கிட்ட் இருக்கேன்… கதவை திறந்து வாஷ் பேசின் பக்கம் போய் நின்று கொண்டார்….

போனான் எடுத்தான் வந்தான்.. கையில் ஒரு BECCADY…. WHITE RUM… அவ்ர் கையில் கொடுத்தான்..

இரு மோகன் இதோ வந்துடுறென்.. மீண்டும் உள்ளே போனார்…மமோகன் வாஷ் பேசன் கிட்ட நிற்க…

இப்பத்தான் சனி விளையாடியது…. ஏ சி கதவு திறந்தது.. வந்தவள்.. அகிலா…

பாத்ரூம் போக வந்தவள் மாட்டிக் கொன்டான்… கையில் பாட்டில் … முழித்தான்…

1 Comment

  1. Lovable story…

Comments are closed.