பூ பூக்குதே 382

“சார் வெல்கம் ட்ரிங்க்ஸ் போன வுடன்…
breakfast … non payable… then puffat lunch…. cultural programme 7.00 to 9.00…. we will be ready 7.30 for dinner & cocktile…..in between tea and snacks as you require…..”

இதற்குள்.. கார் ஹோட்டல் வந்து விட்டது… பஸ் இன்னும் வரலை… காரை விட்டு இறங்கியதும் இரண்டு பெண்கள் வந்து பூச்செண்டு ஒரு ஒற்றை ரோஜா.. கொடுத்து வரவேற்றனர்….

ரிசப்சன்.. அருகே இருவரும் போய்… ரூம் அலாட்மண்ட்.. லிஸ்ட் எடுத்து கொடுக்க…பஸ் வந்து நின்றது….

எல்லரையும் கூல் டிரிங்க்ஸ் கொடுத்து சாவி கொடுத்து.. …..ப்ரெக்ஃபாஸ்ட்.. ஃப்ரிப்பா… அங்க போய் சாப்பிடுங்க…
ரூம்ல சாப்பிட்டா.. உங்க கணக்கு.. சொல்லி சாவி கொடுத்தான் மோகன்…..

“என்ன மோகன் அவனுக ரூம்ல சாப்பிட்டா என்ன… ”

“அகி.. அங்க ரெஸ்டாரண்டுல சாப்பிட்டா.. அது ஃப்ரி.. ரூம்ல ஆர்டர் பண்ணினா… தாளிச்சிடுவான்….
மெனு பாத்தேன்… பொங்கல் 250/- ரூபாய் பார்த்தேன்… நான் நினக்கிறேன் 50 ரூபா.. பொங்கல்…200 ரூபா
சர்வீஸ் சார்ஜ்… பாரேன் ஒவ்வொறு ரூமும் எவ்வளவு தூரத்தில இருக்குன்னு…..அது ரூம் இல்லை வீடு…
வீடு மாதிரில்ல கட்டி விட்டிருகான்…..”

“ரூமுக்கும் இங்க ரெஸ்டாரண்டுக்கும் 1/2 கிமீ இருக்கும் போல.. ..”.சொன்னால் அகிலா…

“ஆமா மலை மீது.. இருக்குற இடத்துல எல்லாம் கட்டி இருக்கிறான்… ஒன்னு கூட மாடி இல்லை எல்லாம் தனித் தனி வீடு மாதிரி..நல்லா இருக்குல்ல… நல்ல செலக்ட் பண்ணிருக்க அகிலா… ”

“என்ன மோகன் என்ன நினக்கிற… நீ”

“இல்லை என் ஹனி மூன இங்க கொண்டாலாமான்னு நினக்கிறேன்…”. பட்டென்று சொன்னான் மோகன்…அகிலாவை பார்த்தவாரு….சிறு புன்னகையுடன்…

அகிலா முகம் சிவந்தாள்… மனசுக்குள் பொறுக்கி அத ஏண்டா என்ன பார்த்து சொல்லுற…ராஸ்கல்… நான் என்ன சொன்னாலும் கேப்பியாடா.. குடிக்கலை நீ சந்தோசமா இருக்குடா… கேப்பியா நான் என்ன சொன்னாலும்… ம்ம்ம்..ம்ம்ம். சொல்லு….மனதிற்குள் சொல்லி கொண்டவள்.. அந்த கடைசி வார்த்தை அவளை அறியாமல் வெளியே விழுந்தது…..

“ம்ம்.. சொல்லு …”

மோகன்.. முகத்தில் புன்னகையுடன்…” ம்ம்ம் என் காதலியுடன் இங்க ஹனி மூன கொண்டாலாம்னு நினைகிறேன்….”

திருப்பி அழுத்தாமாய் சொன்னதும் தான் அகிலா இந்த உலகுக்கு வந்தாள்….

“என்ன சொன்ன…..”

“நீ என்ன செவுடா…. எத்தனை தடவை சொல்லுறது……”

அகிலாவுக்கு அவன் சொன்னது இனித்தது… ம்ம்ம்ம்ம் படவா நீ அப்படி நினச்சி தான் இங்க வந்தியா…. நான் யார்னு தெரிஞ்சும்
இன்னும் ஏண்டா சொல்லாம இருக்குற….சொல்லுவானா…. ம்ம்ம் இல்லை நான் சொல்லனுமா… நான் எப்படி அவன் கிட்ட
நானா சொல்லுறது… அவன் சொல்லட்டும்… தெரியாத மாதிரி இன்னும் நடிப்போம்.. எப்ப சொல்லுரான்னு பாப்போம்…..
பட்டிகாட்டுல இருந்து வந்த உனக்கு இவ்வளவுன்னா.. நான் இங்கயே பட்டனத்தில் குட்டி கரனம் போட்டவள்… ம்ம்ம் என் கிட்டயா….உனக்கு தண்ணி காட்டுறென் பார்.. அவள் மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்….

மோகன்..”. என்ன யோசனை.. நீயும் அப்படித்தான் நினக்கிறாயா.. அகிலா…..”

“சேச்சே இந்த இடத்திலயா… போடாங்க்……நான்… நான்….”

அவள் சொல்லி முடிக்குமுன் செல் போன் அலறியது… எம்.டி…. செல்போனை காதில் வைத்தபடி அவனைப் பார்த்து சீக்கிரம் குளித்து சாப்பிட வா.. என்பது போல் சைகை செய்து விட்டு… அவள் தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் சென்றாள்…..

ஒரே வீடு மாதிரி ஆனால் நாலு வாசல்கள்… ஒவொவ்ன்றும் ஒரு திசை பார்த்து.. ஒவ்வோறு அறையும் ஒரு பெட் ரூம் ஒரு ஹால்….மற்றும் குளியல் அறை… பாத் டப்புடன்…. முன்புரம் பூச்செடிகள்.. அப்புரம் ஒரு புல் வெளி அதில் ஊஞ்ச்ல்.. மற்றும் டேபிள் மாதிரி மற்றும் நாற்காலி… ஒரு பார்ட்டி கொண்டாடும் அளவிற்கு….அந்த வீட்டில் தங்கும் அனைவரும் பங்கு கொள்ளும் விதமாக…

இப்படியே ஒவ்வோறு வீடும்…. கொஞ்சம் தள்ளி நீச்சல் குளம்…. சில வெளி நாட்டினர்.. குளித்துக் கொண்டும் சன் பாத் எடுத்துக் கொண்டும் இருந்தனர்…..அகிலாவின் அடுத்த அறையே அவனுக்கும்… அவனுடன் சின்ன லெவலில் மார்கட்டிங்கில் உள்ள ஒரு அச்சிஸ்டட் சேல்ஸ் மேனஜர்…தன் டிராலி ரூமுக்கு வந்ததும் பாட்டில்களை பத்திரமாக செக் பன்னி அங்கிருந்த அலமாறியில் வைத்து பூட்டினான்…..மோகன்..

1 Comment

  1. Lovable story…

Comments are closed.