பூ பூக்குதே 420

காலை மணி 9.00… அவசர அவசரமாய் ஆபீஸ்க்குள் நுழைந்தான் மோகன் கம்யூட்டர் ஆன் பண்ணி… விட்டு ரெஸ்ட் ரூமுக்குள் புகுந்தான்…

அதற்கு முன் ஒரு சின்ன முன்னோட்டம்…. மோகனை பற்றி….. 27 வயது… அழகன் என்று சொல்லாவிட்டாலும் ஓரளவு அந்த வயதுக்கே உரிய துடிப்பு… சுறு சுறுப்பு…..இந்த பன்னாட்டு கம்பனிக்கு வந்து ஒரு மாதம் தான் ஆகிறது….அதற்கு முன் வேறு கம்பனியில் ஒரு 5 வருட அனுப்வம்…அதனால் கிடைத்த வாய்பு இந்த கம்பனியில் மானேஜர்…. கமர்சியல்… ம்ம்ம் பேரு தான் மேனஜர்… ஆனா எல்லா உதவியாளர் வேலயும் பார்க்க வெண்டும் இன்னும் ஒரு ஆறு மாதம்…. இது ப்ரொபெசன்… பீரியட்… அப்புரம் அப்ப்ரைசல்… அப்புரம் சம்பள உயர்வு.. பதவி உயர்வு. இத்யாதி இத்யாதி…இப்போதைக்கு இது போதும்…..

மோகன் திரும்பி வந்தான் கம்ப்யூட்டர்.. ஆன் ஆகி இருந்தது….

சட சட வென்று… யாகூ மெசன்சர் லாகின் பண்ணினான்… அவன் பொழுது போக்கு சாட்…. நிறைய ரெக்வெஸ்ட் கொடுப்பான்… எதிர் பார்ப்பான்… சில வரும் சில வராது…. அப்படித்தான் இன்றும்….

டிங்.. சத்தம்… அட யாரோ அவனது அழைப்பை ஏற்று ஆக்சப் பண்ணி … பெயர்.. மின்னியது மஞ்சளாய் ஹர்சினி…. பெண்….

முதல் வாசகம் ஹாய்….. ( எவன் கண்டு பிடிச்சான் )
அவனும் ஹாய்.. அறிமுக படலம்.

மொத்ததில். தெரிந்தது இவ்வளவு தான்…
அவள் பெயர் ஹர்சினி…( புனைப் பெயராக கூட இருக்கலாம் )
வயது 29..( ம்ம் இப்ப எல்லாம் 40 கூட 20 ந்னு சொல்லுது இதுக்கு கொஞ்சம் உண்மையாக கூட இருக்கலாம் )
கல்யாணம் ஆகி விட்டது…. ஒரு குழந்தை… இருப்பது ( இது கூட உண்மை தானோ )
இருப்பது புனே… ( அட இங்க அமிஞ்ச்கரையில் இருந்துக்கிட்டு அட்லாண்டா வில் இருக்கிறேன் என்று புருடா விடுபர்கள் மத்தியில் நான் இந்தியாவில் இருக்கிறென் என்று பாதி உண்மை சொல்லி இருக்கிறாள் )

அவளை நான் பெயர் சொல்லி கூப்பிடலாம் என் சொல்லி விட்டு பை ஆப் லன்…

மோகனுக்கு… காலையில் வந்ததும் இது தான் வேலை…யாரிடமாவது கடலை போட வேண்டும்… கொஞ்ச நேரம்…தான்.. அப்புறம் 9.30 ஆபிஸ் களை கட்ட ஆரம்பித்து விடும்….வேலைப்பளு கண்னைக் கட்டும்…..9.30…..எல்லோரும் வந்தாகி விட்டது… முன் காபினைப் பார்த்தான்… அவள் அவன் சீனியர் …இன்னும் வரவில்லை….

மல்லிகையின் மனம் குப் பென்று வீச… வருகிறாள்… அவள் … அவன் சீனியர்… அகிலா…..
திரும்பிப் பார்த்தான் குமார்… அப்சரஸ் பாத்திருக்கீங்களா… அது மாதிரி…. எவண்டா இவளை பெத்தான் பெத்தான்… என்று பாட வைக்கும் அழகு… பதுமை… எல்லாம் அளவாய் அழகாய், அவ அப்பன் கிட்ட போய் கேக்கனும் இவளை பெத்தீங்களா இல்லை உக்காந்து செய்ஜீங்களான்னு……

மோகன் அவளைப் பார்த்து குட் மார்னிங்க் சொல்ல… ஒரு புன் முருவலை தெளித்து விட்டு அவள் காபினில் நுழைந்தாள் அகிலா…

காபின் என்றால் அறை எல்லாம் கிடையாது அவர் அவருக்கு ஒரு பே ( பிரிவு). பஸ் நிக்கிற மாதிரி.. கொஞ்சம் உறக்க பேசினால் நாலவது சீட்ல இருக்குறவன் முறைப்பான். எவண்டா இவன் பட்டிகாட்டான்னு.

சீனியர் என்றால் ஆபிஸில் மட்டும் தான்.. வயது என்னமோ 24 இருக்கும்… இந்த ஆபிஸில் என்னைப் பொறுத்தவரை அவள் சீனியர்..

வந்த அன்றே சொல்லி விட்டாள்..நீங்க என்ன விட வயது அதிகம்.. தயங்காம என்ன பெயர் சொல்லி கூப்பிடலாம்… அனுமதி கொடுத்து விட்டாள் …காபினில் இருந்து எட்டி பார்த்து..

“மோகன்.. அந்த புது கம்பனி கோட் செக் பன்னி இன்னிக்கு அவங்களுக்கு… பேமண்ட் அக்கவுண்ட்ஸ்ல சொல்லி அரேஞ் பண்னிடுங்க….” சொல்லி விட்டு அவள் வேலைய கவனிக்க ஆரம்பித்தாள்….

கொஞ்ச நேரத்தில்… அவனது பெர்சனல் மொபைல் போன் டிங்க் என்று சொல்ல மெஸஜ். படித்தான்…

.”.ஐ அம் ஆன் லைன் “- ஈஸ்வரி .. மின்னியது….ஆகா.. இது ஒரு பெண்…. இப்பத்தான் கொஞ்ச நாளா…..

அவள் ஆன் லன் ல வந்ததும் ஒரு வெப்…ல இருந்து ஒரு குறுந்தகவல் வரும்… பெயர் இருக்கும் ஆனால் மொபைல் நம்பர் இருக்காது….மோகன் சாட்ல அவன் நம்பைரைக் கொடுத்து வைத்திருந்தான்…..

மெஸஞ்சர் ஒபன் பண்ண.. மஞ்சள் கலரில் மின்னினாள் ஈ ஏ எஸ்…. ( இவன் வைத்துக் கொண்டது )…..
வழக்கமாய் பேச ஆரம்பிக்க… கொஞ்ச நேரத்தில் எம் டி அழைக்க.. ஆப் பன்னிட்டு. அவரை பார்க்க….போய் விட்டான்…..

ஒரு மணி நேரம் கழித்து… வந்து வேலையில் மூழ்கியவன் ஈஸ்வரியை சாட்டில் இருந்ததை மறந்து போனான்…..

மதியம் சாப்பாட்டு நேரம்… பொதுவா…பியூன் வாங்கி வரும் சாம்பார் சாதம் தான் அதை சாப்பிட்டு கொண்டே.. மெசஞ்சரை ஓபன்
பண்ண… ஆப் லன் மெஸ்ஜ்… மின்னியது… ஈஸ்வரி தான்… திட்டி இருந்தாள்…

1 Comment

  1. Lovable story…

Comments are closed.