பூ பூக்குதே – Part 2 110

அங்க எக்ஸ்டிரா சீட் போடுற வழக்கம் இல்லை போல.. இது என்ன சரவண பவனா… உடனே ஒரு சேரை கொண்டு வந்து போட….இருவருக்கும் சேர்த்து ஆர்டர் பன்னிட்டு சும்மா அப்படியே நின்றான்….

அகிலாக்கு அவன் செய்கை ஒவ்வொன்றும் பிடித்திருந்தது… ம்ம்ம்ம் என்னடா… என் அழக யாரும் பார்க்க கூடாதா… அவ்வளவு..பொஸசசிவ் ஆ நீ.. ம்ம்ம்… சாரி… நான் உனக்காத்தான் இந்த மாதிரி டிரஸ் போட்டேன்…. இப்படி இவனுக கார்த்திகை மாத நாய் மாதிரி பார்பாங்கன்னு தெரிஞ்சிருந்தா… கண்டிப்பா இப்படி டிரஸ் பன்னி இருக்க மாட்டேன்… சாரி டா… மனம் அவனிடம் மன்னிப்புக்கேட்டுக்கொண்டது….

எதிர் சீட்டு வெளி நாட்டுக்காரன் அப்பத்தான் இட்லி சாம்பார ருசிச்சு சாப்பிட்டு கொண்டு இருந்தான்…

அதற்குள் அவன் ஆர்டர் பண்னியது வரவும்.. அகிலாவிடம்

“அகிலா நீ சாப்பிடு.. நான் அப்புரம் சாப்பிடுரென்….”

“வாடா நீயும் அப்படியே …”

“என்ன கையேந்தி பவன்ன்னு நினைச்சியா… இங்க ஒரு மரியாத இருக்கு… காப்பாத்திக்கனும்…நீ சாப்பிடு.. நான் வெயிட் பன்னுரெண்”….அவள் அருகில் நின்று கொண்டான்…அவள் கொஞ்சம் இட்லி எடுத்து சாப்பிட… அவன் அவளையே பார்த்துக் கொண்டு….. இருந்தான்…..
அவளுக்கு கொஞ்சம் கூட பிடிக்க வில்லை சாப்பிட.. அதுவும் மோகனை விட்டு விட்டு… எனக்காக எப்படி நிக்கிறான்.. என்னை பாதுகாக்க வந்த காவலன் மாதிரி.. ம்ம்ம்ம்…அவ்வளவு பிடிக்குமா என்னை உனக்கு… ம்ம்ம்ம்.. மனசு அலை பாய.. விரல்கள் இட்லி சாம்பாரில் அலைந்து விளையாடிக் கொண்டிருந்தன….

“என்ன அகிலா சாப்பிடு.. சீக்கிரம் இன்னும் 10 நிமிசத்துல நாம அங்க இருக்கனும்… இவனுகளுக்கு முன்ன நாம அங்க இருக்கனும்…
சாப்பிடு.. “

1 Comment

  1. What a lovable story…

Comments are closed.