பூ பூக்குதே – Part 2 93

அவன் வற்புருத்தலில் ஒரு இட்லியை எடுத்து சாப்பிட்டவள்…..அப்படியே வைத்துக் கொண்டு அவனைப் பார்த்தாள்….

“எனக்கு பிடிக்கலை மோகன்….”

“என்ன பிடிக்கலை இட்லியா அப்ப பொங்கல் சாப்பிடு.. இல்ல தோசை ஆர்டர் பன்னுரென்….”

எதிர் சீட்டு வெள்ளைக்காரன் இப்பத்தான் இட்லி சாம்பாரை முடித்து காபி ருசிச்சு சாப்பிட்டான்… அவன் சாப்பிடும் விதத்தை பார்த்தால்….மோகனுக்கு நெட் ல் படித்த ஓன்று ஞாபகம் வந்தது…

இரண்டு பிசினஸ் மேன் இருவரும் சைனாகாரகள்… ஆளுக்கு ஒரு டீ ஆர்டர் பன்ணி விட்டு… 1மணி நேரம் பேசி முடித்து….
அந்த பிசினஸ் டீல் முடியும் மட்டும் சிப் சிப்பா அந்த ஒரு டீ ய குடிச்சு…. டீல் முடிஞ்சு கிளம்பும் போது டீ கப்பை காலி செய்வார்களாம்… அதாவது ஒரு டீ ல ஒரு பிசினஸ் பேச்சு… ( நம்ம ஆளுக அதுக்குள்ள ஒரு புல் பாட்டில முடிச்சுட்டுவான்…ரயில்ல பண்ணின மாதிரி.. பாவிகளா ..) ஒரு மணி நேரமோ இரண்டு மணி நேரமோ.. டீ ஒன்று தான்….

அது மாதிரி அந்த வெள்ளைக்காரன் தனது காபிய ரசிச்சு ரசிச்சு குடித்தான்….அவனுக்கு வேற வேலை இல்லை ஆனா மோகனுக்கு…

அதற்குள் போன் அடிக்க.. அகிலா எடுத்தாள் எம். டி தான்.. அரெஞ்மெண்ட் ப்ற்றி விசாரித்தார்…. பட்டென்று எழுந்தவள் கை கழுவி விட்டு.”. நீ சாப்பிட்டு வா மோகன் நான் மீட்டிங்க் ஹாலுக்கு போறென்…” கிளம்ப…அவளுடன் அவனும் நடந்தான்…

“என்னடா சாப்பிடலையா….”

“இல்லை வா நான் அப்புரம் சாப்பிடுறென்… வா போலாம்…..”

“சாப்பிடுடா.. பிளீஸ்……”

“வா அகி..நேரமானா… எம் டி உன்னைத்தான் திட்டுவார்.. வா.. நான் இல்லாமல் அங்க ஒரு வேலையும் ஆகாது.. வா….”

மோகன் முன்னால் நடந்தான்… அவள் தயங்கி தயங்கி சங்கடமாய் அவனை பின் தொடர்ந்தாள்…..

மனசு சங்கடமாய்.. நான் கொஞ்சம் முன்னால் கிளம்பிருந்தால் சாப்பிட்டிருப்பேல்ல….உனக்கு சாப்பிட நேரம் கிடைச்சிருக்கும்ல்ல….மனசு அவளை குத்தியது.. இந்த அலங்காரம்… அவனுக்காகதான்.. ஆனால் அது அவனை பட்டினி போட்டது தான் அவளுக்கு.. கசந்தது….
எம் டி என்னத்தானாடா திட்டுவார்…உனக்கு என்ன… அவர் என்ன திட்டினா நீ தாங்க மாட்டியாடா… ம்ம்ம் சொல்லு….மனம் அவனுக்காக கசிந்தது… அவள் அவனை பின் தொடர்ந்து நடந்தது அனைவரின் கண்களையும் உருத்தியது…

.சில இளவட்டங்கல் மட்டும் அதை ரசித்தது… ம்ம்ம் நல்ல ஜோடி மச்சி…. பாரேன் அவன் பொண்டாட்டி மாதிரி அவன் கூப்பிட்டதும் அவன் பின்னால ஓடுறா…. ம்ம்ம்ம்ம் நடத்து மாப்பிள்ளே நடத்து.. நாங்க இருக்கோம்….. உனக்கு… வாழ்த்தியது…..அவர்கள் மனம்….அது தான் வாலிபம்..

மீட்டிங்க ஹால்… இருவரும் நுழைந்தனர்….

மோகன்… உடனே தன் வேலய ஆரம்பித்தான்…..சீட் அரஞ்ச்மெண்ட்…. மைக் அரேஞ்ச்மெண்ட்… அப்புரம் ஸ்டேஜ்…. ப்ரொஜெக்டடர்….அதனுடன் லாப் டாப்…. இணைப்பு… டெஸ்டிங்…. மணி… 9.45… ஒவ்வொருவராய் வர ஆரம்பித்தனர்…..

9.50.. எம் . டி வந்துட்டார்.. அவர் எப்பவுமே ஷார்ப்… டைம்….

1 Comment

  1. What a lovable story…

Comments are closed.