பூ பூக்குதே – Part 2 93

அவன் பேசியதின் சமாசாரம் இது தான்…..

நமது சேல்ஸ் நண்பர்கள் கடுமையாக உழைத்து… விற்வனை செய்து.. அத காசாக்கி… கம்பனிக்கு லாபம் சம்பாதிது கொடுகின்றனர்…அவர்கள் வேலை விற்பனை அப்புறம் பண வரவு… இத்துடன் முடித்து விடுகிறார்கள்.. நம் கம்பனியின் விற்பனை முக்கால் வாசி..அடுத்த மாநில விற்பனை தான்… அதிலும் முழுவதும் concessional rate of tax விற்பனை செய்கிரோம்.. ஆனால் அதற்குண்டான படிவம் ( declaration forms ) இன்னும் இரண்டு வருடங்களாக நமக்கு வரவில்லை…. அதன் மொத்த மதிப்பு 10 கோடி ஆகும்… இவைகளை நாம் அவர்களிடம் இருந்து பெறா விட்டால்.. நாம் 20 கோடி மற்றும் அபராதம், வட்டி என்று கம்பனி கட்ட வேண்டியது இருக்கும்….எனவே அனைத்து சேல்ஸ் நண்பர்களும்… இதை முழு மூச்சாக எடுத்து இன்னும் ஒரு மாத்ததில் அனைத்து ப்டிவங்களையும் வாங்கி கொடுத்தால் இந்த வருடம் நாம் 10 கோடி உண்மையிலேய லாபம் சம்பாதிப்பதற்கு சமம்…..உங்கள் அன்பான ஒத்துழைப்பு அவசியம் வேனும்..

அவன் பேசி முடித்ததும் முதலில் கை தட்டியவர் எம்.டி தான் எழுந்து வந்து அவனிடம் கை குலுக்கியவர்….

“ம்ம்ம் கரைட்டான பாய்ண்ட் புடிச்ச , பாரு நான் கூட இது பத்தி யோசிக்கல.. குட் ஷோ”. சொன்னவர்

உடனே மைக் பிடித்தார்…” ம்ம்ம் இன்னில இருந்து இன்னும் 30 நாட்களுகுள்ள எல்லாம் படிவங்களும் வரவழைக்க வேண்டியது விற்பனையின் பொறும்ப்பு…. ” அறிவித்து விட்டு போய் சீட்டில் உட்கார்ந்து கொண்டார்…..

ஜி. எம். , டி.ஜி எம். சேல்ஸ் முகத்தில் ஈ ஆட வில்லை… அடப்பாவி.. இது வரை யாரும் தொடாத இடத்தில் கைய வச்சிட்டான்…..இனி சேல்ஸ் எங்க பாக்க…இரவு டின்னரிலேயே வந்திருக்கும் டீலரகளிடம் பேச ஆரம்பித்து விட வேண்டியது தான்… அவனவன் மனசுக்குள்ள ஓடியது.

அப்போது தான் நுழைதாள் அகிலா…எம்.டி.. மோகனிடம் கை குலுக்குவதும்… அறிவித்ததும்.. கேட்டு அப்படியே நின்று விட்டாள்….நமக்கு இன்னிக்கு கிடையாதே.. நாளைக்கு தான ப்ரெசெண்டேசன்.. குழம்பினாள்.. அவள்…ம்ம் என்ன பேசினான்.. ஏன் இப்படி சேல்ஸ் டீம் அரண்டு கிடக்குது…அகிலா அவன் அருகில் சென்றாள்…மெள்ள இருவரும் ஹாலை விட்டு வெளியே வந்தனர்…..

“என்னடா என்ன ஆச்சு.. என்ன பேசின இப்படி எல்லார் முகமும் இருளடிச்சு போய் உட்காந்து இருக்கிராங்க….”

“இல்ல அந்த டாக்ஸ் மேட்டர்…forms கலைட் பன்னனும்ல… நாம எத்தனையே ரிமைண்டர்.. மெயில் அது இதுன்னு அனுப்புச்சோம் ஒருத்தனும் பதில் சொல்லலை… போட்டு உடைச்சிட்டேன்.. 20 கோடி வரா கடன்ங்கிற மாதிரி.. எம்.டி யே அரண்டு போயிட்டார்….முதல்ல அந்த வேலைய செய்யுங்கடான்னு.. சொல்லாமல் சொல்லிட்டார்… அது தான் அவனவன் அப்படியே ஆடி போய் உக்காந்திருக்காங்க….கமிசன் வராது அது கொடுக்காம……ஆப்பு வச்சாச்சு… நல்லா ” சொல்லி சிரித்தான்….

“அடப்பாவி இப்படி பட்டவர்த்தன்மா போட்டு உடைச்சிட்ட…. ம்ம்ம்ம் அதுவும் நல்லதுக்கு தான்.. நாளைக்கு நம்மல கேக்க மாட்டாங்க”….

அகிலா அவன் கருத்த ஆமோதித்தாள்… எப்படிடா இப்படி நீ மட்டும் குறுக்க சால்ல போற…..இது தாண்டா எனக்கு உன்னிடம் மிகவும் பிடிச்சிருக்கு…பிடிச்சிருக்கு… பிடிச்சிருக்கு… … பிடிச்சிருக்கு… . பிடிச்சிருக்கு… … பிடிச்சிருக்கு… … பிடிச்சிருக்கு… மனசில் சொல்லிக் கொண்டவள்…அந்த கடைசி முறை வாய் விட்டு முனுமுனுத்தாள்…..

என்ன பிடிச்சிருக்கு அகிலா…. மோகன் கேட்டதும் தடுமாறித்தான் போனாள்.

“இல்லை.. இந்த ஹோட்டல்.. ஹாஸ்பிட்டாலிட்டி… நல்லா கோ- ஆபரேட் பண்னுராங்க…. அது தான்..”.. சமாளித்தாள்…

1 Comment

  1. What a lovable story…

Comments are closed.