பூ பூக்குதே – Part 2 93

“ம்ம்ம்ம்ம் குட்….எனக்குப் பிடித்த அயிட்டங்கள் எடுத்து வந்திருக்க… ஆமா மோகன் நீ எப்பப்பா இந்த் ஹோட்டல்ல வேலைக்கு சேர்ந்த…. “சொல்லி விட்டு சிரித்தார்….

“இல்லை சார் அங்க நிறைய கூட்டமா இருக்கு இப்ப… நீங்க பசி தாங்க மாட்டீங்கன்னு அகிலா சொன்னாங்க… அது தான்…..சார்…நானே…….” சொல்லிவிட்டு எம் டி கிட்ட ஒரு தட்டையும்… ஜி எம் கிட்ட ஒரு தட்டையும் நீட்டினான்… மோகன்….

“ம்ம் நல்ல ஹாஸ்பிட்டாலிட்டி அப்படியே எல்லாரும் நல்லா சாப்பிடுராங்களான்னு பாருப்பா… ஆமா நீ சாப்பிடலையா…”

“இல்லை சார் நாங்க அப்புறம் கடைசில சாப்பிட்டுகிடுறோம்…. அகிலா சொல்லி இருக்காங்க….”. சொல்லி விட்டு மற்றவர்களை கவனிக்க தொடங்கினான்….கவனித்திக் கொண்டிருந்த அகிலா அப்படியே உறைந்து நின்றாள்.. ஒரு பொம்பளை தனக்கு கூட தோனாதது… அவனுக்கு தோணியிருக்கு.. மெல்ல ஒரு புன் சிரிப்பு வெட்கம் கலந்த புன் சிரிப்பு நின்றது அவள் இதழ்களில்.

எம். டி கையசைத்து அகிலாவை கூப்பிட்டார்…. அகிலா அவர் அருகில் வந்தாள்

“சார்… சொல்லுங்க சார்….”

“அகிலா.. ம்ம்ம் பையன் நல்ல செலக்ட் பன்னியிருக்க…..”

“என்ன சார் சொல்லுரீங்க…..”

“இல்லைம்மா.. பையன் பயங்கர சுமார்ட்… ம்ம்ம் உன் செலக்சன் பிரமாதம் அகிலா…. நல்லா வருவான்…one of the assest of the company…keep him with you….. நான் பசி தாங்க மாட்டேன்னு கூட அவன் கிட்ட சொல்லி வச்சிருக்கிறா.. குட் குட்…”. சொல்லி சிரித்தார்…..

ஜி எம் மும் அவர் சொன்னதுக்கு தலை அசைத்தார்…..

“”தாங்க்ஸ் சார்..
மெல்ல நகர்ந்தாள் அவரிடமிருந்து.. நான் எப்படா உன் கிட்ட சொன்னேன்… எப்பவோ ஒரு முறை பேச்சு வாக்கில் சொன்னது… இன்னும் என்ன இருக்குடா உன்னிடம்… என்னப் படுத்திருயே படுவா….இப்பவே உன் கிட்ட சொல்லனும் போல இருக்குடா…. என்ன சொல்ல….பிடிச்சிருக்குன்னா… ச்ச்சி… நீயா செய்யிர எல்லாத்தையும் நான் தான் செய்யச் சொன்னேன்னு…சொல்ல.. மனசு வேனும்டா.. செல்லம்…
அது உன் கிட்ட நிறைய இருக்குடா…இல்லை என்னை இம்பிரஸ் பண்ண இதை எல்லாம் செய்யிரியா… நான் தான் எப்பவோ உன் கிட்ட மயங்கி கிடக்கிறேனே… இன்னும் என்ன இருக்கு இம்பிரஸ் பண்ண்.. மனசு அலறியது.. அவளுக்கு கேட்டது….

லஞ்ச் நல்ல முறையில் முடிந்தது… கடைசியில்… தான் அகிலாவும்…மோகனும் சாப்பிட்டனர்….அப்புரம்… டீ பிரேக்… அது முடிந்ததும்… அகிலா மோகனிடம்…

“மோகன் நான் ரூமுக்கு போய்ட்டு அப்படியே அட்மின்ல கொஞ்சம் வேலை இருக்கு அத முடிச்சுட்டு வந்துடுரேன்… நீ பாத்துக்கடா சொல்லி விட்டு நகர்ந்தாள்….

அவள் போய் 10 நிமிடம் கூட இருக்காது எம். டி… போடியத்தில் இருந்து மைக்ல ” இப்போது கமர்சியலில் இருந்து அவங்க தரப்ப விளக்குவாங்க ”

“சார் அகிலா.. கீழ போயிருக்காங்க.. சார்…”

அதனால் என்ன நீ பேசு தயாராதான வந்திரிப்பீங்க ” சிரித்தபடி அவனைப் பார்த்தார். மோகன் தடுமாறிய படி…

“ஒகே சார்….” பட்டென்று பேக் எடுத்தான் பென் டிரவ் எடுத்து லாப் டாபில் சொருகினான்… மைக் அருகில் வந்தான்….

1 Comment

  1. What a lovable story…

Comments are closed.