பூ பூக்குதே – Part 2 93

10.00 மணிக்கு மீட்டிங்க் தொடங்கியது……

இனி கொஞ்சம் ரிலாக்ஸ்… இன்னும் 1 மணி நேரம்.. பேச்சு நடக்கும்.. அப்புரம் .. ஒவ்வொருவரும் தங்கள் கருத்தை சொல்ல ஒரு நேரம்.. அப்புறம் டீ… அப்புரம் மறுபடியும்…. அப்புறம் 1.15 லன்ச்… பிரேக்… மறுபடியும் 2.30க்கு அரம்பம்…. 5.30க்க் முடியும்….

4.30 க்கு அகிலா ஒரு ப்ரசண்டேசன் பண்ணனும்….

ஹாலில் ஹோட்டல் சூப்பர் வைசர் மோகனை அழைத்தார்…

“சார் கொஞ்சம் வரீங்களா…..”

“என்ன….”

“வாங்க ஒரு முக்கியமான விசயம்… ”
அகிலாவைப் பார்த்தான்…. போ.. என்பது மாதிரி கண்ணக் காட்ட… அவர் பின்னால் போனான்….

பக்கத்தில் இருந்த ஒரு ரூமை திறந்தார் … உள்ளே அழைத்துச் சென்றார்….அது ஒரு வாடிக்கையாளர்கள் தங்கும் அறை தான்.. ஆனா இப்ப யாரும் இல்லை.. காலியாக இருந்தது… அங்கிருந்த டீப்பாயில்… இட்லி பொங்கல்.. தோசை..வடை….காபி…

“என்ன சார் இது….”

“நீங்க காலைல சாப்பிடலைன்னு மேடம் சொன்னாங்க.. அது தான் இங்க எடுத்திட்டு வந்திட்டோம்…அங்க சாப்பிடறத் இங்க சாப்பிடுங்க…”

என்ன சார்….””

“நார்மலா இப்படி பண்ண மாட்டோம் சார்… ஆனா மேடம் எங்களுக்கு ஸ்பெசல்…… அவங்க தான் சார் கடைசில பில் செட்டில் பண்ணனும்… அது தான் அவங்க சொன்னா எதுவும் செய்ய எங்களுக்கு ஆர்டர்….”

“அவங்களும் தான் சரியா சாப்பிடலை.. நேரம் ஆச்சுன்னு.. பாதிலயே கிளம்பிட்டாங்க.”…

“சார்.. நீங்க சாப்பிடுங்க… முதல்ல…. ”

“சரி எனக்கு இட்லி தோசை போதும்… பொங்கல் தனியா எடுத்து வச்சிடுங்க… மேடம் வரச் சொல்லுறென்….”
சாப்பிட ஆரம்பித்தான்..

மனதில்….அகி… என்ன விரும்புராயாடி…எதுக்குடி இந்த கவனிப்பு.. நான் சாப்பிடாமல் இருந்தால் உனக்கு வலிக்குதா… அடிப் பாவி… மாசத்துல பாதி நாள் இப்படித்தானடி பேச்சுலர் லைஃப் ஓடுது… அது தெரிஞ்சா.. என்ன பண்னுவ பா… ம்ம்ம்ம்
அவசரமா எந்திருச்சு.. குளிச்சு… சாப்பிட நேரம் இருந்தா டிபன்.. இல்லை மதியம் சேர்த்து வைத்து கட்டிறது.. இது தான எங்க
வழக்கம்… இது என்னம்மா புதுசா….. புருசனை சாப்பிட வைக்கிற மாதிரி….. நான் அந்த அளவுக்கு கொடுத்து வைத்தவனா அகி…உன் அன்பைப் பெற……ம்ம்ம்ம்ம்ம்….

10 நிமிடத்தில் சாப்பிட்டவன்.. காபி குடித்து எழுந்தான்….

1 Comment

  1. What a lovable story…

Comments are closed.