பூ பூக்குதே – Part 2 93

“சார் வெயிட் பன்ணுங்க… அவங்களை அனுப்புறென்…..”

மீட்டிங்க் ஹால் போனான்….அகிலாவை சைகை காட்டி அவன் அருகில் அழைத்தான்…
வந்தவளிடம்…..

“என்ன நான் சாப்பிட்டா மட்டும் போதுமா…. அகிலா…. போங்க.. உங்களுக்கு பொங்கல் வச்சிருக்கேன்.. நீங்க சாப்பிட்ட லட்சனம் தெரியும்… போ போய் சாப்பிட்டு வா.. நான் பாத்துக்குறென்….. ”

மரியாதை ஆரம்பித்து அப்புரம் உரிமையில் குறைந்ததை அகிலா கவனித்தாள் அகிலா எதுவும் பேசாமல் அந்த ரூமில் நுழைந்தாள்.டீப்பாயில் இருந்த பொங்கலை மெல்ல எடுத்து… சாப்பிட ஆரம்பித்தாள்….

பக்கத்தில் மோகன் சாப்பிட்டு மிச்சம் வைத்த கொஞ்சம் தோசை இருந்தது… மெள்ள சுற்றும் முற்றும் பார்த்தாள்… சூப்பர் வைசர்…டிவி பார்த்துக் கொண்டிருந்தான்… மோகன் எச்சில் தட்டில் இருந்த அந்த தோசைய மெள்ள எடுத்து சாப்பிட்டாள் அகிலா…மனம் சிலிர்த்தது… எவ்வளவோ சாப்பிட்டிருக்கிறோம்… இது மட்டும்… இவ்வளவு சுவையாய்…. ஏன் அவன் எச்சில் இதில் இருப்பதாலா…இல்லை இங்க தோசை நல்லா இருக்குமா… மனம் விழித்தது….
அதே நேரம் ஏதோ கேட்க மெதுவாய் கதவு திறந்து வந்த.. மோகன்….அகி அவன் தட்டில் இருந்து எடுத்து சாப்பிடுவதை…பார்த்ததும்..அவன் மனம் ஆனந்த கூத்தாடியது….

அடி என் காதலியே அகி…. நீ நீ… என்னை என்னை.. விரும்புகிறாயா…. ம்ம்ம் நிசமா.. நான் பார்பது… இல்லை தோசை நல்லா இருக்குன்னு ச்ச்ச்சீ மடையா.. அவள் ஆர்டர் பன்ணினா… ரெஸ்டாரண்டே இங்க வரும்…. அவ…அவ… என் காதலி… என் காதலி..என் மனைவி….மனசு
ஆர்பரித்தது……உடல் நடுங்க ஆரம்பித்தது…

மெள்ள கதவைசாத்தியவன்… அப்படியே திரும்பினான்… மோகன்….

அகிலா சாப்பிட்டுவிட்டு… சூப்பர்வைசரை அழைத்தாள்…..

வந்தவன்…” மேடம் நீங்க தப்பா நினக்கலைன்னா ஒன்னு சொல்லட்டுமா….”

“என்ன பரவாயில்ல சொல்லுங்க…..”

“எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்… நீங்கள் வாழ்கையில் நினத்தது நடக்க…. “சொன்னவனை ஆச்சரியத்துடன் பார்த்தாள்….

“நீங்க இரண்டு பேரும் made for each other mam….. என்ன அப்படி பாக்குறீங்க .. நான் இந்த வேலைல இருக்கும் போது எத்தனையோ ஜோடிகளை பார்த்திருக்கேன்.. பல விதமா… ஆனா உங்க இருவரையும் மாதிரி நான் பாக்கலை… நல்ல ஜோடி நீங்க இருவரும்….”

ம்ம்ம் இல்லை நான்…. ”

“ம்ம் நீங்க இன்னும் அவர் கிட்ட ப்ரபோஸ் பன்னலன்னா.. உடன சொல்லிடுங்க.. வேற யாராவது கொத்திக்கிட்டு போயிட போறாங்க..”

“எப்படி .. நீங்க….”

“மேடம் உங்க ரெண்டு பேர் கண்ணிலும் காதல் நல்லாவே தெரியுது… நீங்க என் தங்கை மாதிரி இருக்கீங்க அதனால சொல்லுறென்…இங்க சாப்பிட வந்ததும் அவர் என்ன சொன்னார் தெரியுமா…”

“என்ன சொன்னார்…..”

நீங்களும் தான் சரியா சாப்பிடல்ன்னு வருத்தப்பட்டார்….அதனால தான் பொங்கலை மட்டும் தனியா எடுத்து வச்சார்..நீங்க அவர் சாப்பிடலைன்னு என்னிடம் சொல்லி டிபன் அரேஞ் பண்ணீங்க… ஒரு கெஸ்டா நான் உங்களை பார்கலை…என் தங்கையா பாக்குறென்…. சொல்லனும்னு தோணுச்சு.. சொல்லிட்டேன்… தப்பா இருந்தா.. மன்னிச்சுக்கங்க… பிளீஸ்…..அப்புரம் தோசை நல்லா இருந்துதா… ” அவன் கேட்க….

1 Comment

  1. What a lovable story…

Comments are closed.