பூ பூக்குதே – Part 2 93

அகிலாவுக்கு வெட்கம் புடுங்கியது… எப்படி என்பது போல் அவனை பார்க்க….

“மேடம் நாங்க டி வி பார்த்தாலும் பார்ல நின்னாலும் எங்கள் கண் எப்பவும் எங்க கெஸ்ட் மேல தான் இருக்கும் அவங்க சைகக்கு தான் காத்து இருப்போம்…. நீங்க ரசிச்சு சாப்பிட்டதை நானும் பார்த்தேன்… my adavance congratulations…..”
சொல்லிவிட்டு நகர்ந்தான் அவன்….

அகிலா…சொல்ல முடியாத ஒரு உணர்வு அவள் உடல் முழுவதும் பரவு வதை உணர்ந்தாள்….

மொபைல் அடிக்க.. எம் டி தான்

“அகிலா WHAT IS THIS THE PROJECTOR IS NOT WORKING PROPERLY WHERE ARE U NOW…. COME FAST……” கரிஜித்தார்

அதிர்ந்தாள்…அடப்பாவிகளா என்ன ப்ண்ணித் தொலைச்சாங்க. இவனுக.. பர பரப்பாய் ஓடினாள்…..

அங்கே…போடியம் ல் நின்று G. M Sales…பேசிக் கொண்டிருந்தார்.. முன்னால் இருந்த டேபிளில் புரஜக்டர்.. வேலை செய்யாமல்.. ஸ்கிரீன்
ஒயிட் ஆக …

மோகன் அங்க வயர செக் பண்ணிக் கொண்டுருந்தான்… ஒரு நிமிடம் இரண்டு நிமிடம்.. இரண்டு வயர்களை புடுங்கினான்.. தன் கையில் கொண்டு வந்திருந்த தோள் பைய எடுத்தான்.. அதிலிருந்து புதுசா ஒரு கேபிள் எடுத்தான்…. பவர் கேபிளை மாத்தினான்.. மறு நிமிடம் சர்ர்ர்ர்ர் என்ற சத்ததுடன் இயங்க தொடங்கியது…..

“ம்ம்ம் லூஸ்ஸ் காண்டாக்ட்… சாரி சார் இப்ப சரியாயிடுச்சு…” அவள் உள்ளே நுழையவும்.. ப்ரொஜக்டர் ப்ளீரென ஸ்க்ரீனில் படம் விழவும் சரியாக இருந்தது.. எம்..டி… அவளைப் பார்த்தார்….

“தாங்க்ஸ் அகிலா… நான் என்னமோன்னு நினச்சேன்.. நீ மோகனும் வரனும் சொன்னப்ப… கரெட் சாய்ஸ்… உஷார் பேர் வழி போல…அவனுக்கு தேவை இல்லாதது இது ஆனாலும் முன் ஜாக்கிறத்தையா.. ஆர்டினரி பவர் கேபிள் இதுக்கு செட் ஆகாது.. இது வேற மாதிரி இருக்கும்.. 1% இந்த மாதிரி ஆகலாம்… அத கூட எடுத்திட்டு வந்திருக்கான்… நைஸ் கைய்.. ” சொல்லி விட்டு நகர்ந்தார் எம் டி

அங்கிருந்த வாரு மோகன் அவளைப்பார்க்க.. அவள் கண்களால் நன்றி சொன்னாள்…அவன் அங்கிருந்து ஹேய் சும்மா இருடின்னு இதுக்குப் போய் ஏன் பதட்டப்படுற….. சொல்லுரமாதிரி மெல்ல கையசைத்தான்…..அப்படித்தான் சொல்லி இருப்பானோ…மனசு தவித்தது….

அதன் பிறகு ஏதும் நடக்காமல்.. லஞ்ச்பிரேக்…எல்லோரும் ஒரே கூட்டமாக… மொய்க்க… மோகன் தனியாக ஒரு தட்டில் எடுத்து கொண்டிருந்தான்… அகிலா பதறி விட்டாள்.. பாவி கெடுத்தானே… அவனுக்காக எடுத்தாலும் சரி.. இல்லை தனக்காக எடுத்தாலும் சரி யாராவது பார்த்தால் என்ன நினைபார்கள்… எப்பவும் அவர்கள் கடைசியாகத்தான் சாப்பிடுவார்கள் ஆர்கனைசர்கள்… அவர்கள் வேலை மற்றவர்களுக்கு எல்லாம் ஒழுங்காக கிடைக்கிறதா…. அதாவது கொடுக்குற காசுக்கு ஹோட்டல் காரன் ஒழுங்கா சப்ளை பண்ணுரானா…எல்லோரும் சாப்பிடுராங்களா… இதையும் கவனிக்கனும்.. இப்ப இவன் சாப்பிட்டான்.. நான் செத்தேன்… பாவி.. சத்தம் போட்டு சொல்ல கூட முடியாது இவ்வள்வு சத்ததில கேக்கவும் செய்யாது… என்ன பண்ண…. மொபைல எடுத்தாள் அவன் நம்பர் டயல் செய்தாள்….

பெல் அடித்தது அவன் எடுக்கவில்லை.. கூட்டத்தில் அவனை தேடினாள் அகிலா…அதோ பார்த்து விட்டாள் அவனை.. இரண்டு கைகளில் இரண்டு தட்டை எடுத்துக் கொண்டு அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான்.. முகத்தில் ஒரு புன்னகையுடன்….அதிர்ச்சியுடன் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்… அவள் அருகில் வந்தவன்…

“ம்ம்ம்ம் கூப்பிட்டாயா அகி… இரு இதை எம் டி கிட்ட கொடுத்திட்டு வந்திடுறேன்…” சொன்னவன் மெல்ல அவளைக்கடந்து சென்றவன்…அவள் பின்னால் கொஞ்சம் தள்ளி ஓரமாய் ஒரு டேபிளில் எம் டி மற்றும் ஜி எம் இருவரும் அமர்திருந்த டேபிளில் போய் வைத்தான் மோகன்… எம். டி அவனைப் பார்த்தார்.. தட்டை பார்த்தார்…

1 Comment

  1. What a lovable story…

Comments are closed.