ஸ்ருதி Part 15 37

அவ்வளவு தான் தன் மேல் இருந்த அவனை பலம் கொண்டு தள்ளி விட்டு எழுந்து ஓட முயற்சிக்க ,சம்பத் அவள் கால்களை எட்டி பிடிக்க,மீண்டும் ஒரு உதை அவன் அடி வயிற்றில் எட்டி ஒரு உதை உதைக்க அங்கேயே அடி வயிற்றை பிடித்து கொண்டு சுருண்டு விழுந்தான்.

கண்மண் தெரியாமல் எதிரில் என்ன இருக்கிறது என்று கூட தெரியாமல் இருட்டில் ஸ்ருதி எழுந்து ஓடினாள்.ஓடிய ஸ்ருதி எதிரே வந்த நபர் மீது முட்டி கொண்டு கீழே விழ இருந்தவளை அவள் இடுப்பில் கை வைத்து அவள் நாணல் தேகத்தை தாங்கி பிடித்தான்.இருட்டாக இருந்தாலும் அப்பொழுது உதயமான நிலா வெளிச்சத்தில் தனக்கு நன்கு பழக்கமான முகம் தெரிய,பாய்ந்து அவனை கட்டி தழுவிகொண்டாள்.அவனும் அவள் நெற்றியில் அழுத்தமாக ஒரு முத்தம் வைத்து அவளை இறுக்க கட்டி கொண்டான்.அந்த நபர் யாரும் அல்ல,காரை ஓட்டி வந்த நபர் தான்.

காரில் யார் வருகிறார்கள் என்று கூட தெரியாமல் இப்படியா விழுந்தடித்து ஓடுவது?இன்னும் கொஞ்ச தூரம் ஓடி இருந்தால் கர்நாடக பார்டர் தாண்டி கேரளா பார்டரே வந்து விட்டு இருக்கும்!என்று அவள் காதில் அவன் கிசுகிசுக்க,
ச்சீ போடா,என்று வெட்க்கபட்டு அவன் மார்பில் அவள் நிலவு முகத்தை புதைத்தாள்.

யார் அந்த நபர்?இதை விட எளிதான கேள்வி இருக்க முடியாது