மது தனக்குள் யோசிக்க தொடங்கினாள்.ஸ்ருதியை யார் கடத்தி இருப்பார்கள்?ஸ்ருதிக்கு யாரேனும் பகைவர் இருக்கிறார்களா?இல்லை ஷெட்டி பகைவர்கள் யாரேனும் கடத்தி இருப்பார்களா? ம் ,கண்டிப்பாக ஷெட்டி எதிரிகள் யாரேனும் தான் கடத்தி இருக்க வேண்டும்.ஸ்ருதிக்கு அங்கு பாதுகாப்பு கிடையாது.ஸ்ருதி கிடைத்து விட்டால் இனிமேல் அவள் அங்கே தங்க கூடாது. முதல் வேலையாக அவளை அங்கு இருந்து சென்னை கூட்டி வந்து விட வேண்டும் என்று மது மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.
ஷெட்டி மங்களூர் நெருங்கும் சமயம்,அப்பொழுது முருகன் கோவில் கோபுரம் தெரிந்தது.
முதல் முறையாக அந்த கோவிலை கை எடுத்து கும்பிட்டு”நான் இதுவரை உன்னை எப்பவும் வந்து வணங்கியது கிடையாது.முதல் முறையா உன்கிட்ட ஒன்னு கேட்கிறேன்.நான் செய்த தவறுக்கு என்ன தண்டனை வேண்டுமானால் எனக்கு கொடு.ஆனால் அவளுக்கு கொடுத்து விடாதே..என்று வேண்டி கொண்டான்.
உள்ளே குதித்த முரட்டு உருவம் யாருடையது?ஸ்ருதி காப்பாற்றப்படுவாளா?
மூன்று comment வந்த பிறகு தான் போட வேண்டும் என்று நினைத்தேன்.ஆனால் இரண்டு comment தான் வந்துள்ளது இருந்தும் போடுகிறேன்.
உள்ளே குதித்த உருவத்தை பார்த்து ஒரே நேரத்தில் சம்பத் அதிர்ச்சி அடைய,ஸ்ருதி மகிழ்ச்சி அடைந்தாள்.
இவன் எப்படி உள்ளே வந்தான்?என்று சம்பத் திடுக்கிட ,வந்தவன் காலால் ஒரு எத்து விட சம்பத் உருண்டு கீழே விழுந்தான்.சேலையை எடுத்து ஸ்ருதியிடம் கொடுத்து”நீ கட்டிக்கோ தங்கச்சி”என்றான் நஞ்சுண்ட கவுடா.
என் தங்கச்சி மேலேயடா கை வைக்கிற என்று மேலும் ஒரு உதை விட்டான்.
சம்பத்திற்கும் , நஞ்சுண்டாவிற்கும் ஒரு துவந்த யுத்தமே ஆரம்பம் ஆகியது.மாத்திரையின் பவர் கூடுதல் வலுவை கொடுத்ததால் நஞ்சுண்டாவின் முரட்டு உடம்பிற்கு இணையாக சண்டை போட்டான் சம்பத்.கைகளாலும்,கால்களாலும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.சண்டையில் பெரும்பாலும் மாறி மாறி இருவரும் முன்னிலை பெற்றனர்.சம்பத்துக்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்ற கோபத்தில் மூர்க்கத்தனமாக சண்டை போட்டான்.நேரம் ஆக ஆக சம்பத் கை ஓங்கியது.சம்பத்தின் தாக்குதல்களை சமாளிக்கவே நஞ்சுண்டாவிற்கு போதும் போதும் என்று இருந்தது.ஒரு கட்டத்தில் நஞ்சுண்டாவின் காலை கால்பந்து உதைப்பது போல் ஓங்கி உதைக்க அவன் முட்டி போட்டு மடங்கி உட்கார்ந்தான்.இதை பயன்படுத்தி கொண்டு புஜங்களால் நஞ்சுண்டாவின் கழுத்தை கிடுக்கிபிடி போட்டு பிடித்தான் சம்பத்.இதில் நஞ்சுண்டாவுக்கு மூச்சு விட முடியாமல் திணறி கண்கள் இருட்டி கொண்டு வந்தது.நஞ்சுண்டாவின் கைகள் சம்பத்தின் கைகளை எவ்வளவு முயன்றும் தளர்த்த முடியவில்லை.
அனுபமா நீ கொடுத்த மாத்திரை சரியான மாத்திரை தான்டி என்று சம்பத் மனதிற்குள் மெச்சி கொண்டான்.இல்லை என்றால் இந்த முரட்டு உருவத்தை எல்லாம் என்னால் தோற்கடிக்க முடியுமா?என்று தன் பிடியை மேலும் இறுக்கினான்.நஞ்சுண்டாவின் மூச்சு கொஞ்ச கொஞ்சமாக அடங்கி கொண்டே வர
சரியாக அந்த நேரத்தில் சம்பத் பின்மண்டையில் உருட்டு கட்டையால் ஒரு அடி நச்சென்று விழுந்தது.சம்பத் பிடியை தளர விட நஞ்சுண்டா மயங்கி கீழே சாய்ந்தான்.சம்பத் எழுந்து வெறியோடு அடித்த ஸ்ருதியை நோக்கி திரும்ப,இப்பொழுது தலையின் முன்பக்கம் இன்னொரு பலத்த அடி விழ சம்பத் ஸ்ருதியை நோக்கி கையை நீட்டி “உன்னை விட மாட்டென்டி”என்று சொல்லி கொண்டே மயங்கி கீழே விழுந்தான்.
உருட்டு கட்டையை கீழே போட்டு விட்டு நஞ்சுண்டாவை தொட்டு அண்ணா, அண்ணா என்று ஸ்ருதி அழைக்க,நஞ்சுண்டா மூச்சு பேச்சு இல்லாமல் இருந்தான்.ஸ்ருதி NCC இல் இருந்ததால் FIRST AID சிகிச்சை எல்லாம் அத்துபடி.அவன் மார்பில் கை வைத்து இரண்டு மூன்று முறை நன்றாக அழுத்த நஞ்சுண்டாவின் இதய துடிப்பு அதிகரித்து மூச்சு வந்தது.ஸ்ருதி தண்ணிரை தெளித்து எழுப்ப நஞ்சுண்டா இருமிகொண்டே எழுந்தான். அருந்த நீர் கொடுக்க, நஞ்சுண்டா சகஜ நிலைக்கு வந்தான்.
தங்கச்சி உனக்கு ஒன்னும் ஆகவில்லையே?
இல்லை அண்ணா நீங்க தான் சரியான நேரத்தில் வந்து காப்பாற்றி விட்டீர்களே!
சரி வா ஸ்ருதி நாம இங்கிருந்து சீக்கிரம் கிளம்பலாம்.
கீழே போய் கதவை திறக்க முயல,lock ஆகி இருக்கு ஸ்ருதி.இரு நான் மேலே போய் அவன் பாக்கெட்டில் சாவி இருக்கிறதா என்று பார்த்து வருகிறேன்.அவன் பாக்கெட்டில் தடவி பார்த்தும் சாவி எங்கேயும் இல்லை.
நஞ்சுண்டா கீழே வர,ஸ்ருதி அவனை பார்த்து,”அண்ணா சாவி கிடைச்சுதா?”
இல்லை ஸ்ருதி அவன் எங்கு வைத்து தொலைத்தோனோ தெரியலையே என்று நஞ்சுண்டா புலம்பினான்.
சரி கிடைப்பதை எல்லாம் கொண்டு இருவரும் கதவை உடைக்க தொடங்கினார்கள்.பழங்கால வீட்டின் கதவு மிகவும் வலுவாக இருக்க,கொஞ்சம் கூட அசைக்க முடியவில்லை.
ஆமா நீங்க எப்படி வந்தீங்க அண்ணா,
உன்னை கோச்சிங் கிளாஸில் இருந்து கூட்டி போவதை பார்த்தேன் ஸ்ருதி, வழியில் bike off ஆகி விட்டது.வேற வழி இல்லாம தொடர்ந்து ஓடி வந்தேன்.அப்போ இந்த மண் சாலையில் கார் இப்போ வந்ததற்கான தடம் தெரிந்தது.அதை பார்த்து இங்கே ஓடி வந்தால் உன் சத்தம் கேட்டு pipe ஐ புடிச்சிட்டு மேலே ஏறி வந்தேன்.
இப்போ வெளியே எப்படி அண்ணா போறது?
வேற வழியே இல்ல தங்கச்சி,முதல் மாடி பால்கனியில் இருந்து துணி கட்டி கீழே இறங்க வேண்டியது தான்.நஞ்சுண்டா விறுவிறுவென ஆங்காங்கு இருந்த ஸ்கிரீன் துணிகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து கட்டினான்.வா ஸ்ருதி இது போதும்,இதை பால்கனியில் கட்டி இறங்கி விடலாம்.
மீண்டும் சம்பத் மயங்கி கிடந்த பால்கனி அறைக்கு செல்லும் போது நஞ்சுண்டாவின் கால்கள் இடறி ஸ்ருதி கீழே வைத்து இருந்த தண்ணி பாட்டிலை தட்டிவிட,பாட்டிலில் இருந்த நீர் வழிந்து நேர்கோடாக சம்பத் முகத்தை நோக்கி பயணித்து கொண்டு இருந்தது.
