தெரியும்டா மாப்பிள்ளை,உன் பொண்டாட்டியை காணோம்,நீ தேடிட்டு இருக்கே,அவ இருக்கும் இடம் பற்றி உனக்கு தகவல் சொல்லலாம் என்று call பண்ணா ரொம்ப தான் கிராக்கி பண்றீயே
ஏய் அனுபமா,உனக்கு ஸ்ருதியை பற்றி என்ன தெரியும்!சீக்கிரம் சொல்லு.உனக்கு எவ்வளவு பணம் வேண்டுமானால் தரேன்.ஷெட்டி கெஞ்சினான்.
அப்பா ,பொண்டாட்டி மேல தான் எவ்வளவு பாசம்! நீ அங்க துடிப்பதை பார்த்து எனக்கே இங்கே படபடப்பா ஆகுது.ஆனா ஒரு விசயம் இப்போ உன் பொண்டாட்டி உனக்கு கிடைச்சாலும் அவ கற்பொடு இருக்க மாட்டா.இந்நேரம் ஒருத்தன் அவளை சின்னாபின்னமாகி இருப்பான் பரவாயில்லையா?
ஐயோ பரவாயில்லை அனுபமா,எனக்கு அவ உயிரோடு கிடைச்சாலே போதும்.
அப்போ சொல்றேன் கேட்டுக்கோ,உனக்கும் எனக்கும் சம்பத்தப்பட்ட இடத்தில் தான் இருக்கா.முடிஞ்சா யோசித்து கண்டுபிடி.இன்னொரு விசயம் சொல்றேன் அதையும் கேளு.அவளை கடத்தி ஒருத்தன் கிட்ட மாட்டி விட்டதே நான் தான்டா.என்று கூற
ஷெட்டி நரம்பு புடைக்க,அனுபமா உன்னை சும்மா கூட விட மாட்டேன்டி என்று போனில் கத்தியதை பார்த்து ஒரு நிமிஷம் அங்கு இருந்த அனைவருமே பயந்தனர்.
கத்தியே நீ செத்துடாதடா,போய் மிச்சம் மீதி உள்ள உன் பொண்டாட்டி உசிரையாவது காப்பாற்று போ என்று சிரித்து கொண்டே போனை அணைத்தாள்.
சார் என்ன ஆச்சு சார் ,என்று போலீஸ் DGP வந்து கேட்க,
அது ஒண்ணுமில்ல நீ போய்யா,என்னை கொஞ்சம் தனிமையில் விடு
ஷெட்டி மனதிற்குள் யோசிடா யோசிடா உனக்கும் அனுபமாவிற்கும் சம்பந்தப்பட்ட இடம் என்ன?என்று யோசித்து கொண்டு இருக்கும் பொழுது சர்ச் மணி ஒலித்து மணி 6 என்றது.ஸ்ருதி கடத்தப்பட்டு இரண்டு மணி நேரம் ஆகி இருந்தது.
ஷெட்டி மூளைக்குள் உடனே பல்ப் எரிந்தது.ச்சே இதை எப்படி தவற விட்டோம்.என்னோட பண்ணை வீட்டிற்கு பக்கத்தில் அல்லவா சர்ச் இருக்கு.ஸ்ருதி phone அணைவதற்கு முன் தெளிவாக சர்ச் bell ஓசை கேட்டதே!எல்லா இடத்திலும் தேடுவோம்.ஆனா என் வீட்டில் தேட மாட்டோம் என்று எவ்வளவு கிரிமினலா இவ யோசிச்சு இருக்கா.உன்னை வந்து கவனிச்சுகிறேன்டி இரு என்று ஷெட்டி மின்னலென காரை கிளப்பி கொண்டு போனான்.
சார் உங்க wife மொபைல் கட் ஆன டவர் எது என்று தெரிந்து விட்டது?என்று டிஜிபி கத்தி கொண்டே ஓடிவர,அதற்குள் ஷெட்டி அவர்கள் கண் பார்வையில் இருந்தே மறைந்து இருந்தான்.
பக்கத்தில் இருந்த இன்ஸ்பெக்டர் மொபைலுக்கு யாரோ அழைக்க இம்சை அரசன் 23ம் புகிகேசி ரிங்டோன் வந்தது.
ஏண்டா எதுனா புதிய செய்தியை கொண்டு வருவாய் என்று பார்த்தால் இறந்து புதைத்த செய்தியா கொண்டு வருவாய் என்று ரிங் ஆகியது.இதை கேட்டு அங்கு இருந்த கிராம மக்கள் அனைவரும் சிரித்தனர்.
புதர் மண்டிய காட்டு பகுதியில் ஸ்ருதி ஓடுவதை பார்த்து விட்ட சம்பத் வெறித்தனமாக அவளை துரத்த தொடங்கினான். உதிர்ந்து காய்ந்த இலைகள் இவர்கள் கால்கள் மிதிபட்டு காட்டின் நிசப்தத்தை கலைத்தது.
அனுபமா ஏன் திரும்ப காரில் வருகிறாள் என்று சம்பத்துக்கு புரியவில்லை.நாளை தானே வருவதாக சொன்னாள்.சரி வரட்டும்,துணைக்கு ஒரு ஆள் ஆச்சு என்று விடாமல் ஸ்ருதியை துரத்தினான்.ஆனால் காரில் வந்த நபர் அனுபமா அல்ல.இவர்கள் இருவரும் ஒடும் திசையை பார்த்து விட்ட காரில் இருந்த நபரும் காரை நிறுத்தி விட்டு அவர்கள் ஓடிய திசையை நோக்கி விரைந்தான்.
ஸ்ருதி உண்மையில் அவனுக்கு சரியான போக்கு காட்டி கொண்டு இருந்தாள்.சில நேரங்களில் வேண்டுமென்றே வேகம் குறைத்து ஓடுவாள்.இதில் இருவருக்குமான இடைவெளி குறைந்து அவன் கைக்கு சிக்கி விடுவாள் என்று அவனை நினைக்க வைத்து ,மின்னல் போல் வேகத்தை கூட்டி ஒடுவாள்.ஒவ்வொரு தடவை அவள் கைகளில் இதோ சிக்கி விடுவாள், அதோ சிக்கி விடுவாள் என்று சம்பத் நினைத்தால் நடக்கவே இல்லை.மான் எப்படி சிறுத்தைக்கு போக்கு காட்டுமோ அது போல் தான் ஸ்ருதி அவனுக்கு போக்கு காட்டி கொண்டு இருந்தாள். காலேஜில் அவள் தான் ஓட்டப்பந்தய சாம்பியன் ஆயிற்றே.சிறுத்தையோ, புலியோ என்ன தான் வலிமையான மிருகமாக இருந்தாலும் மானை ஓடி வேட்டையாடுவது என்பது இயலாத காரியம்.அதனால் தான் predator தனது prey யை ஒளிந்து மறைந்து தீடீர் பாய்ச்சலில் நிலைகுலைய வைத்து தான் வேட்டையாடுவது வழக்கம்.சம்பத்திற்கும் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க தொடங்கியது.வியர்வை ஆறாக பெருகியது.ஸ்ருதி ஏறக்குறைய சம்பத்தின் சக்தியை உறிஞ்சி விட்டு இருந்தாள்.இவளை ஓடி பிடிப்பது என்பது இயலாத காரியம் என்பது தெளிவாக தெரிந்து விட்டது அவனுக்கு.எனவே மீண்டும் தன் குறுக்கு வழியை உபயோகித்தான்.ஏற்கனவே சூரியன் மறைந்து இருந்ததால் இருள் படர துவங்கி இருந்தது.
சட்டென்று எதிர் வந்த பள்ளத்தில் மறைந்து கொண்டான்.
துரத்தும் போது ஏற்பட்ட இலைகள் ஓசைகள் நின்று போனதை பார்த்து அவன் பின் தொடரவில்லை என உணர்ந்த ஸ்ருதி தன்னை சற்று ஆசுவாசப்படுத்தி கொள்ள ஒரு மரத்தின் நிழலில் சற்று நேரம் அமர,வெளிச்சம் முழுக்க மறைந்து இருட்டி கொண்டே வந்தது.சம்பத் ஓசைப்படாமல் தனக்கும் ஸ்ருதிக்கும் உள்ள இடைவெளியை பதுங்கி பதுங்கி குறைத்து கொண்டே வந்தான்.இருட்டில் ஸ்ருதிக்கு எதுவும் தெரியவில்லை.இன்னும் எட்டும் தூரத்தில் ஸ்ருதி அமர்ந்து இருப்பதை பார்த்து அவள் மேல் தீடீர் என பாய்ந்தான்.இதை ஸ்ருதி சற்றும் எதிர்பார்க்கவில்லை.எல்லாம் நொடிகளில் நிகழ்ந்து விட்டது.
ஏண்டி தேவிடியா,உன்னை அப்படியே விட்டு விடுவேன் என்று நினைத்தாயா?உன் உடம்பை இன்னிக்கு பஞ்சர் ஆக்குறேண்டி என்று சொல்லிக்கொண்டே அவள் ஜாக்கெட்டின் இடதுபக்கத்தை கிழித்தான்.
இதுவரை தன்னை யாரும் கெட்ட வார்த்தையில் திட்டி கேட்டு இராத ஸ்ருதியின் தன்மானத்தை அவன் சொன்ன வார்த்தை தூண்ட அவன் கன்னத்தை நகங்களால் கீறினாள்.
“ஆ”என்று அவன் வலியில் அலற,அவள் கன்னத்தில் மாறி மாறி அறைந்தான்.ஸ்ருதியும் கொஞ்சமும் விடாமல் போராடினாள்.பூமியில் அவள் கைகள் துழாவி கொண்டு இருக்க வகையாக ஒரு கல் கிடைத்தது.
அவள் மார்பில் கை வைத்து ஜாக்கெட்டை கிழிக்கும் நேரம் ஓங்கி அவன் நெற்றியில் கல்லினால் தாக்கினாள்.இதில் சம்பத் வலியில் அலறி ஜாக்கெட்டில் இருந்து கையை எடுக்க
