நஞ்சுண்டா பலமான முடிச்சு போட்டு துணியை கீழே இறக்க அது ஏறக்குறைய தரையை தொட்டது.
ஸ்ருதி நீ முதலில் கீழே இறங்கும்மா,
ஸ்ருதி மெதுவாக துணியை பிடித்து கொண்டு கீழே இறங்க நஞ்சுண்டா கெட்டியாக துணியை பிடித்து கொண்டான்.
ஸ்ருதி கீழே இறங்கி முடிக்கும் நேரம்,இம்முறை நஞ்சுண்டாவின் பின் மண்டையில் அடி விழுந்தது.அடித்தது சம்பத் தான்.
நஞ்சுண்டா மயங்கி சரிய,”இருடி நான் கீழே வரேன் நீ எங்கேயும் தப்பி போக முடியாது”என்று சம்பத்தும் துணியை பிடித்து கொண்டு கீழே இறங்க தொடங்கினான்.
ஸ்ருதி கம்பௌண்ட் கேட்டை திறந்து கொண்டு சாலையில் ஓட துவங்க,தன்னை கடத்திய கார் மண் சாலையில் எதிரே தூரத்தில் வருவதை பார்த்து”அய்யோ அனுபமா வேறு எதிரில் வருகிறாள்,சம்பத்தும் பின்னாடி துரத்தி கொண்டு வருகிறான்.இருவரிடம் மாட்டினால் அவ்வளவு தான் நம் கதி என்று மண்சாலையில் இருந்து பிரிந்து,பக்கத்தில் உள்ள புதர் மண்டிய காட்டு பகுதியில் ஓட துவங்கினாள்.
ஷெட்டி தன் கிராமத்தில் ஹெலிகாப்டரில் இறங்க போலீஸ் டிஜிபி தயாராக இருந்தார்.
என்ன ஆச்சு,என் மனைவியை கண்டுபிடித்து விட்டீர்களா?
இல்ல சார்,ஆனா நிறைய விவரங்கள் கிடைத்து இருக்கு,வாங்க காரில் பேசிக்கொண்டே போகலாம்.
டிஜிபி காரில் ஷெட்டியை பார்த்து,”சார் இது கிராமம் ஆதலால் பெருசா சிசிடிவி footage கிடைக்கல.ஆனால் இன்ஸ்டிட்யூட் இருந்து இந்த footage கிடைச்சு இருக்கு பாருங்க.
ஸ்ருதியும் ஒரு பெண்ணும் வெளிவருவதை வீடியோவில் பார்த்தார்கள்.
அந்த பொண்ணுக்கு சிசிடிவி எங்கே இருக்கு என்று தெளிவாக தெரிஞ்சு இருக்கு சார்.அதனால் சிசிடிவி இருக்கிற இடத்தில் எல்லாம் தெளிவா தன்னோட முகத்தை காட்டவே இல்லை.வெளியே நின்று இருக்கும் கார் உங்களோடது தான் சார்.அதில் தான் இருவரும் ஏறுகிறார்கள்.அப்புறம் கொஞ்ச நேரத்தில் ஒரு bike அந்த கார் பின்னாடி போய் இருக்கு.அதில் போகிறவர் உங்க எதிரி நஞ்சுண்டப்பா தான் சார்.அவரோட bike பாதி வழியிலேயே நிக்குது.அவரோட மொபைலும் கொஞ்ச தூரத்தில் விழுந்து கிடந்தது.அதையும் கைபற்றி விட்டோம்.அவரும் மிஸ்ஸிங்.ஒருவேளை அவர் கடத்தி இருக்கலாம் என்ற கோணத்தில் நாங்க விசாரணை செய்ஞ்சுட்டு இருக்கோம் சார். அவர் சம்பந்தப்பட்ட இடத்தில் எல்லாம் தேடி துருவிட்டோம் சார்.இன்னும் எதுவும் தகவல் கிடைக்கல.
சரி என் மனைவி மொபைல் என்கிட்ட பேசும் போது தான் cut ஆச்சு.அதை trace பண்ணீங்களா?
சார் அதையும் try பண்ணிக்கிட்டு இருக்கோம் சார்,அவங்க use பண்ற நம்பர் தமிழ்நாட்டு நம்பர் என்பதால் சென்னையில் உள்ள சர்வரில் தான் டவர் லொகேஷன் எல்லாம் பதிவு ஆகுது.சென்னை போலீஸ் மூலமா details கேட்டு இருக்கோம்.அது முழுக்க வேற division என்பதால் சில formalities எல்லாம் கேட்டாங்க,அதை எல்லாம் செய்து கொடுக்க கொஞ்சம் late ஆகி விட்டது.
என்னய்யா போலீஸ் நீ,சென்ட்ரல் மினிஸ்டர்க்காக என்று சொல்லி கேட்க வேண்டியது தானே!
சொன்னோம் சார்,ஆனா அவங்க formalities தான் முக்கியம் என்று சொல்லிட்டாங்க.இன்னும் கொஞ்ச நேரத்தில் எந்த டவர் என்று தெரிந்து விடும்.
இரு இரு எல்லாம் நேரம் பார்த்து விளையாடுறாங்க,நான் அவங்களை அப்புறமா பார்த்துக்கிறேன்.
அந்த நேரம் டிஜிபி செல்ஃபோன் தன் ரீங்காரத்தை பாட,DGP எடுத்து ஹலோ என்றார்.அப்படியா? என்றார்.சூப்பர் என்றார்.சார் ஒரு GOOD நியூஸ்
சொல்லுய்யா,என் மனைவி கிடைத்து விட்டாளா?ஆர்வமாக ஷெட்டி கேட்க
இல்லை சார், ஆனா உங்க மனைவி போன கார் கிடைத்து விட்டது .
மீண்டும் ஷெட்டி முகம் சுருங்கியது.
இப்பதான் என் மனைவி போன காரையே கண்டு பிடிக்கிறீங்களா?வாங்களேன் போய் பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் டின்னர் சாப்பிட்டு விட்டு அப்படியே goa ஒரு ட்ரிப் போய் வந்து விட்டு ஒரு நாலு நாள் கழித்து தேடலாம்?என்று ஷெட்டி முறைத்து கொண்டே கேட்டான்.
இல்ல சார்.
நீ எதுவும் பேசாதேய்யா,உன்னை நம்பினா வேலைக்கு ஆகாது. நீ முதலில் கார் இருக்கும் இடத்திற்கு வண்டியை விடு.நானே மற்றதெல்லாம் பார்த்துக்கிறேன்.
அதற்குள் ஸ்ருதி இருக்கும் இடம் தெரிந்து கிராம மக்கள் அனைவரும் கார் இருக்கும் இடத்திற்கே வந்து விட்டனர்.எல்லோரும் கவலை தோய்ந்த முகத்துடன் காத்து கொண்டு இருந்தனர்.
படுபாவி,அந்த பொண்ணு முகத்தை பார்த்தா யாருக்காவது கடத்தி போக தோணுமா,அவன் கை கால் விளங்காம போக என்று ஒரு பெண் சாபம் விட
அந்த பொண்ணு எல்லோரிடமும் கொஞ்சம் கூட ஈகோ இல்லாமல் எவ்வளவு ஆசையா பழகி கொண்டு இருந்தது.எப்படியாவது அந்த பொண்ணு நல்லபடியாக வந்து விட வேண்டும் என்று மற்றவர்கள் வேண்டி கொண்டு இருந்தனர்.
ஷெட்டி அமைதியாக வந்து காரை நோட்டமிட,உள்ளே ஸ்ருதி handbag இருந்தது.அதை எடுத்து பார்க்க அவன் கண்களில் கண்ணீர் வந்தது.சாவி காரிலேயே விடப்பட்டு இருந்தது.அப்பொழுது கிராம மக்களின் வேண்டுதல் பலித்தது.
அனுபமா படுகுஷியில் இருந்தாள்.இந்நேரம் எப்படியும் ஸ்ருதி , சம்பத்திற்கு சொந்தமாகி இருப்பாள்.இன்னும் மகிழ்ச்சியை இரட்டிபாக்கி கொள்ள ஷெட்டிக்கு ஃபோன் செய்தாள்.
என்னடா மச்சான் எப்படி இருக்கே?
யாரு அனுபமாவா?
ஆமாடா மச்சான்.
அனுபமா ஒழுங்கா போனை வச்சிடு,நான் செம கோபத்தில் இருக்கேன்.
