ஸ்ருதி Part 15 35

வேற வழியே இல்லை,போய் அசைவம் சாப்பிடுவதை நிறுத்து,மனசை சமநிலைக்கு வைக்க யோகா பண்ணு.முடிஞ்சா சபரிமலைக்கு மாலை போடு.

அய்யோ கடைசி மட்டும் வேண்டாம் சாமி!நான் மாலை போட்டு ஏதாவது எசகுபிசகு ஆகி விட்டால் பெரிய பிரச்சினை ஆகி விடும்.முதல் இரண்டை மட்டும் செய்யறேன்.

சரி போய் தொலை.

ஷெட்டி வெளியே வந்து கிளம்ப,சித்த மருத்துவரின் மகன் ஷெட்டியை நிறுத்தினான்.

சார் நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா?

என்ன வேணும் கேளுப்பா சொல்றேன்.

ஏன் சார் உங்களுக்கு இந்த வயசிலேயும் ரெண்டு பொண்டாட்டியா சார்.

ஷெட்டி குரலை தாழ்த்தி கொண்டு”ரெண்டு இல்ல மூணு.இதை சொன்னா உங்க அப்பா திட்டுவார்.அதனால் தான் ரெண்டு என்று சொன்னேன்” என்று சொல்ல

யோவ் இதெல்லாம் உனக்கு நியாயமா இருக்கா?அவனவன் ஒண்ணே கிடைக்காமல் சாமியார் மாதிரி திரியறான்.உனக்கு மூணு பொண்டாட்டியா?

என்ன பண்றது?எல்லாம் விதி.ஒருத்தி அப்படியே ஜெனிலியா மாதிரி இருப்பா,இன்னொருத்தி காஜல் அகர்வால் மாதிரி இருப்பா,கடைசியாக வந்தவ இவங்க ரெண்டு பேரை அப்படியே அழகில் ஓரங்கட்டி அசினை உரிச்சி வைச்சு இருப்பா!

டேய் தகப்பா,இங்க பாருடா உள்ளே உட்கார்ந்துக்கிட்டு என்னய்யா மருந்து ஆட்டி கொண்டு இருக்கிற. இந்த மாதிரி ஒரு பொண்ணை பார்த்து எனக்கு கல்யாணம் பண்ணி வைப்பதை விட்டு என்னை சாமியாரக்க பாக்குறீயே!

ஷெட்டி அவனை மேலும் சற்று வெறுப்பேற்ற எண்ணி “தம்பி,கடைசியாக வந்தாள் இல்ல,அவ அழகை பற்றி ஏதேனும் சொன்னேன்!..”

இல்லையே சார்!

சொல்லட்டுமா!

சொல்லி தொலைய்யா!

அவ ஆடினால் பூஜா ஹெக்டே

அய்யோ முடியலடா சாமி என்று மருத்துவரின் மகன் புலம்பினான்.

நிறத்துல ஐஸ்வர்யா ராய்

பாடினா பிரியங்கா மோகன்

ஒடுனா கீர்த்தி ஷெட்டி

படுத்தா …..

யோவ் போதுமய்யா ,உன்கிட்ட கேட்டதே தப்பா போச்சு.இந்த வயசுல நான் கல்யாணம் பண்ணி அனுபவிக்க வேண்டியதை எல்லாம்,இந்த ஆள் அனுபவித்து விட்டு வெறுப்பு ஏத்துறான்.டேய் முதலில் இமய மலைக்கு டிக்கெட் போடுடா,இவனுங்க கிட்ட மாட்டிகிட்டு பட முடியல என்று ஓடினான்.

அனுபமா சம்பத்தை பார்த்து,”சம்பத் நல்லா கேட்டுக்க,ஷெட்டி ஊரில் இல்லாத நேரம் நமக்கு அவளை தூக்குவதற்கு சரியான நேரம்.அவ பேர் என்ன சொன்ன?”

“ஸ்ருதி”

ஆங் ஸ்ருதி ஸ்ருதி …அவ ரெண்டு மணிக்கு கிளாஸ் உள்ளே போவா,ரெண்டு மணிநேரம் தான் கிளாஸ்,அதற்குள் எதையாவது சொல்லி அவளை வெளியே கொண்டு வர வேண்டியது என் பொறுப்பு.அவன் டிரைவர் வருவதற்கு முன் அவளை தூக்க வேண்டும் சரியா?

சரி எப்படி தூக்குவது அனுபமா?

அதற்கும் நான் ஏற்பாடு பண்ணி விட்டேன்.இது அவன் வச்சு இருக்கிற ஒரு காரோட கீ.கார் வெளியே தான் நிக்குது.அங்கே இருக்கிற வேலையாள் மூலமா எடுத்து வர செய்து இருக்கேன்.அவன் காரை பார்த்தா தான் அவ வண்டியில் ஏறுவா.இப்போ நீ என்ன பண்ற ? மாறு வேடத்தில் டிரைவராக வந்து நில்லு.நான் எப்படியாவது வெளியே கொண்டு வரேன்.அப்புறம் நாம அவளை இங்கு இருந்து கடத்தி போறோம்.சரியா.

சரி.கடத்தி கொண்டு சென்னை போய் விடலாம்,அங்கே போய் விட்டால் போதும்.அப்புறம் என்னை யாரும் அங்கே தொட கூட முடியாது.

முட்டாள் முட்டாள்,அவ கடத்தப்பட்டு விட்டால் என்பது அவளை நாம் கடத்திய ஒரு மணி நேரத்தில் அவளை தினமும் அழைத்து செல்லும் டிரைவர் மூலமாக அவனுக்கு நியூஸ் போய்விடும்.அந்த குறுகிய காலத்தில் நாம் இந்த மாவட்டத்தை கூட தாண்டி முடியாது.அப்புறம் நம் இருவரையும் கோழி அமுக்குவது போல் போலீஸ் மூலம் நம்மை பிடித்து விடுவார்கள்.போலீஸ் மட்டும் இல்ல அவனோட அடியாட்கள் இந்த மாவட்டம் முழுவதும் பரவி இருக்காங்க.அப்புறம் சொல்லவே வேணாம்,நம்ம ரெண்டு பேரோட நிலைமை. ரெண்டு பேரோட தோலை உரிச்சு உப்பு கண்டம் போட்டு விடுவான்.

என்ன அனுபமா இப்படி பயமுறுத்தற,பின்ன அவளை எங்கே தான் கூட்டி போவது?