தீரா தாகம் – Part 2 162

இல்லை கொஞ்சம் வெளில வெயிட் பண்ணு ராகவ் கன்ஃபார்ம் பண்ணதும் போலாம் ….

ஓகே டாக்டர் நான் வெளில வெயிட் பண்றேன் ….

என்னடா இவன் இவளோ ஃபார்மலா பேசுறானேன்னு பார்த்தா அப்பத்தான் அந்த

பேஷன்ட் உள்ள வந்துகிட்டிருக்கு …

ம்! உஷார்தான் ….

சிறுது நேரத்தில் அவர்கள் வென்றுவிட ஷாம் உள்ளே நுழைந்தான் ….

ம்! சொல்லு ஷாம் அப்புறம் ….

அப்புறம் என்ன ஸ்டெத்தஸ்கோப் பத்தி தெரிஞ்சிக்கலாம்னு பாத்தா டூ மச்

டிஸ்டர்பன்ஸ் ….

ஹா ஹா அது தெரிஞ்சி நீ என்ன பண்ணப்போர ?

ஒரு ஜெனரல் நாலேஜ் தான் …

ஓகே ஓகே அப்ப டெய்லி வந்துடு கோர்ஸ் ஆரம்பிச்சிடலாம் ….

ஆகா அழகா பண்ணிடலாம் ….

சரி சரி கோர்சுக்கு ஃபீஸ் என்ன ?

ம்! உங்களுக்கு டைம் பாஸ் ஆகுதுல்ல அதான் ஃபீஸ் ….

ஹலோ அது காம்பன்செஷன் …

அப்டியா நான் உங்களுக்கு டிரைவிங் கத்து தரேன்ல அதுக்கு இது ஒகே வா ?

ம்! பாதி ஓகே மீதி அப்புறம் பாக்கலாம் ….

சரி ரம்மி இந்த நாடி பாக்குறீங்களே அது என்ன ?

கொஞ்சம் கொஞ்சமா கத்துக்க ஒரே நாள்ல எல்லாம் கத்துகிட்டா மறந்துடும் ….

ஸ்லோ அண்ட் ஸ்டடியா ?

ம்! அது …. மீண்டும் செல் ரிங் ஆனது … ராகவ் தான் ….

ஹலோ !

ஆங் புக் பண்ணிட்டேன் …

காலைல 5 மணிக்கு கிளம்பிடுவோம் ….

மதியம் 2 மணிக்கு தரிசனம் ….

ஓகே ஓகே நான் ஷாமுக்கு போன் பண்ணி சொல்லிடறேன் …

நான் இத சொல்லிக் கொண்டிருக்கும் போது கஸ்தூரி உள்ள வந்துட்டா ….

நான் ஷாம எதிரில் உக்கார வச்சிகிட்டு போன் பண்ணி சொல்லிட்றேன்னு சொன்னதை

கண்டிப்பா கேட்ருப்பா ….

ச்ச இவகிட்ட போயி மாட்டிகிட்டோமேன்னு எரிச்சலில் என்ன கஸ்தூரி ?

மேடம் பேஷன்ட் ….

வெயிட் பண்ண சொல்லு …

அவள் சென்றுவிட ஷாம் காலைல 5 மணிக்கு கிளம்பனுமாம் … 2 மணிக்கு தரிசனம் …

ஓகே கம்மிங் சனி ….