உன்ன என்னமோன்னு நினைச்சேன் – Climax 139

உண்மையைத்தான் சொல்றேன்! ப்ளீஸ் மாமா! அவள் உணர்ச்சிக் குவியலில் இருந்தாள். இன்னும் புதைந்தாள்!

கொஞ்சம் அவளை விட்டு விலக நினைத்தவனை, அவள் விட வில்லை.

ம்கூம்!

வலுக்கட்டாயமாக பிரிந்தவன், அவளது கன்னங்களை ஏந்தினேன். எனது முகத்தை பார்க்க முடியாமல், கண்களை மூடியிருந்த அவளது நெற்றியிலும், கண்களிலும் முத்தமிட்டேன்.

ஏய்… இங்கப் பாரு!

ம்கூம்!

ஏய்…இங்கப் பாரு. இப்போது அவளை மீண்டும் அணைப்பிற்குள் கொண்டு வந்திருந்தேன். எனது அணைப்பு தந்த பலமோ என்னமோ, அவள் கண்களைத் திறந்து பார்த்தாள். அவள் கண்கள் சிவந்திருந்தது.

ஏன் மைதிலி? என்ன ஆச்சு திடீர்னு?!

ப்ச்… காரணம்லாம் தெரியலை மாமா. ஆனா, இதுதான், நான் உங்களுக்கு கொடுக்கிற ஸ்பெஷல் கிஃப்ட், நீங்க என் வாழ்க்கைல வந்ததுக்கு, எனக்கு செஞ்ச எல்லாத்துக்குமான ட்ரீட். இந்த முடிவை நான் முன்னமே எடுத்திருந்தேன். ஜஸ்ட், இந்த நாளுக்காக வெயிட் பண்ணிட்டிருந்தேன். இவ்வளவு நேரம் வேகமாக பேசியவள், இப்பொழுது தயங்கினாள். தயங்கிக் கேட்டாள்!

நீ… நீங்க, என்னை தப்பா நினைச்சிடலியே மாமா?

ஏய்.. போதும். ரொம்ப ஃபீல் பண்ணாத. உன்னை எப்புடிடி நான் தப்பா நினைப்பேன்?! நீ இந்த முடிவு எடுத்திருக்கன்னா, நீ என்னை எவ்ளோ ஸ்பெஷலா பாக்குறன்னு எனக்கு புரியுது! நீ எவ்ளோ ஃபீல் பண்றன்னு! அதைக் கூட என்னால புரிஞ்சிக்க முடியாதா என்ன?

ஆனா, இது வேணாம் மைதிலி.

இல்லை மாமா… நான் யோசிச்சுதான் இந்த முடிவுக்கு வந்தேன். நீங்க எனக்கு செஞ்ச எல்லாத்துக்கும் சேர்த்து, எனக்காக கல்யாணத்தை தள்ளி வெச்சதுல இருந்து, மத்த எல்லாத்துக்காகவும் தான் இந்த முடிவு. கல்யாணம்லாம், மத்தவிங்களுக்காகத்தான் மாமா. மனசளவுல நான் என்னிக்கோ உங்க மனைவியாயிட்டேன்.

இன்னும் சொல்லப் போனா, நான் கல்யாணத்துக்கு முன்னாடி உங்க சொந்தமாகனும்னு முன்னமே முடிவு பண்ணியிருந்தேன்.

கல்யாணத்துக்கப்புறங்கிறது, கடமை. ஆனா, நீங்க என்கிட்ட கேட்டதையெல்லாம் கொடுக்க, என் காதலைச் சொல்ல, இதை விட பெஸ்ட் டைம், பெஸ்ட் ப்ளேஸ், பெஸ்ட் மெதேட் இருக்குமான்னு எனக்கு தெரியலை. அதுனாலத்தான் இந்த முடிவு.

இந்த வீடு, இந்த ரூம் எல்லாம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல் மாமா. அதுனாலத்தான், இன்னிக்கு, இங்க, இப்பிடி. ப்ளீஸ் மாமா! எனக்கு இதுக்கு மேல என்ன சொல்றதுன்னு தெரியலை!

அவள் எப்போது தலை குனிந்தாள் எனத் தெரியாது. அவளால் என்னைப் பார்க்க முடியவில்லை. ஆனால், அவளது அன்பு, நம்பிக்கை, இந்த முடிவு எல்லாம் என்னை ஆட்டியிருந்தது. இதற்கு மேல் இதை விவாதிக்க என் மனமும் இடம் தர வில்லை, அவளது அருகாமையும், முடிவும் வேறு என்னையும் கொஞ்சம் உசுப்பேத்தியிருந்தது!

3 Comments

  1. இந்த எழுதியவரின் அனுபவமாக இருக்கலாம் அனுபவிச்சி எழுதிய கதை போல இப்படி ஒரு அருமையான கதை தந்தற்க்கு நன்றிகள் வேறும் காமம் அல்லாமல் சமூக சிந்தனை இன்றைய இளம் பெண்கள் ஆண்கள் நாகரீகம் என்ற பெயரி ஐடி கம்பெனியில் நடப்பதை
    எழுதி இருக்கிறார் கதாசிரியர்

  2. Excellent!

Comments are closed.