உன்ன என்னமோன்னு நினைச்சேன் – Climax 139

இதை என்கிட்ட முன்னமே சொல்லியிருக்கலாமே?

இயல்பான காதலியான்னு சொன்னேனே?

நீ ரொம்ப நல்லவன் மாமா! என் மனசுக்கு புடிச்சவரு எப்பிடி இருக்கனும்னு நான் நினைக்கிறேனோ, அதுக்கும் அதிகமாவே நீ இருக்க? நாம காதலிக்காம இருந்திருந்தாளோ, இல்லை உன் காதலுக்கு நான் முடியாது, அண்ணனாத்தான் நினைக்கிறேன்னு அன்னிக்கு சொல்லியிருந்தாக் கூட, நான் இந்த பிரச்சினையிலிருந்து வெளிய வர ஹெல்ப் பண்ணியிருப்ப.

கல்யாணத்துக்கு அப்புறம் நீ காட்டக் கூடிய அன்பு உண்மையா இருந்தாலும், அதுல கொஞ்சம் கடமையும் இருக்கும். நான், எந்தக் கடமையும் இல்லாம, பந்தமும் இல்லாம, ரொம்ப இயல்பா உன் காதலை அனுபவிக்கனும்னு நினைச்சேன்! அதே அன்பை உனக்கு கொடுக்கனும்னு நினைச்சேன்!

எந்த எதிர்பார்ப்பும் இல்லாம என்னை புரிஞ்சிகிட்டு, எனக்காக எப்ப பேசுனியோ, என் வேலைக்காக ஏற்பாடு பண்ணப்பவே, என் மனசுல எங்கியோ நின்னுட்ட மாமா. ப்ரேம் என்னை மதிக்காதது, என் கல்யாண வாழ்க்கையில பிரசினை இருக்குரது எல்லாம் தெரிஞ்சும், தப்பா ஒரு பார்வை என்னை பார்த்ததில்லை. அது ஒண்ணு போதும், நீ எப்பேர்பட்டவன்னு சொல்லும்.

ப்ரேமை கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம், ரொம்ப நாளைக்குப் பின்னாடி நான் செக்யூர்டா ஃபீல் பண்ணது, உன் கூட இருக்குறப்பதான்! ரொம்ப, ரொம்ப சந்தோஷமா இருந்தது, இந்த வீட்ல உன் கூட நான் இருந்தப்பதான். அந்த சந்தோஷத்தை, ஒரு காதலியா, இன்னும் கொஞ்சம் அனுபவிக்கனும்னு நினைச்சேன்!

மத்தபடி இந்த ஊர் சொல்றதெல்லாம் எனக்கு ரெண்டாம் பட்சம்தான். மனசளவுலியும் நான் எப்பவோ, உன் மனைவியாயிட்டேன். எப்ப, உன்னை மாமான்னு கூப்பிடச் சொல்லிட்டு, எங்க அப்பாவுக்காக, உங்க அப்பாவைக் கூட்டிட்டு வந்து என்னை ஆசீர்வாதம் பண்ண வெச்சியோ, அப்பவே உனக்கு மனைவியாயிட்டேன்!

இவ்வளவு நேரம் தலை குனிந்து பேசியவளில் பேச்சில், நான் பேச்சற்றுப் போயிருந்தேன். என் மவுனத்தை தாங்க முடியாதவள், நிமிர்ந்து என்னைப் பார்த்தாள்.

எ… என்னை தப்பா நினைக்கலீல்ல?

அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். என்னதான் எனக்கு அவள் மேல் பயங்கரக் காதல் இருந்தாலும், இந்த மாதிரியெல்லாம் யோசித்திருக்க வில்லை. இந்த மாதிரியெல்லாம் பெண்களால் மட்டும்தான் யோசிக்க முடியுமா? நான் இயல்பாகச் செய்த விஷயம், இவளுக்கு அவ்வளவு முக்கியமா? நான் அவள் மேல் வைத்திருக்கும் காதலை விட, அவள் என் மேல் வைத்திருக்கும் காதல் அதிகம் என்று மறைமுகமாக சவால் விடுகிறாளா? பல்வேறு எண்ணங்களுடன் அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

என் தோள்களை தயக்கமாய் தொட்டாள்.

மாமா! அவள் கண்களில் இன்னும் தவிப்பு இருந்தது, என்னைப் புரிந்து கொள் என்று!

நீ தப்பா நினைக்கலீல்ல?!

நான் ஆவேசமடைந்தேன்!

அவளை இறுக்கி அணைத்து, மிக மிக ஆவேசமாக அவளது உதடுகளில் முத்தமிட்டேன். சில நொடிகளில் விலகியவன், அவளைப் பார்த்து சொன்னேன்.

3 Comments

  1. இந்த எழுதியவரின் அனுபவமாக இருக்கலாம் அனுபவிச்சி எழுதிய கதை போல இப்படி ஒரு அருமையான கதை தந்தற்க்கு நன்றிகள் வேறும் காமம் அல்லாமல் சமூக சிந்தனை இன்றைய இளம் பெண்கள் ஆண்கள் நாகரீகம் என்ற பெயரி ஐடி கம்பெனியில் நடப்பதை
    எழுதி இருக்கிறார் கதாசிரியர்

  2. Excellent!

Comments are closed.