நேருக்கு நேர் – கிளைமாக்ஸ் 144

காஃபி குடித்து முடிக்கும் வரை என்ன பேசுவது என்று தெரியாமல், இருவரும் அமைதியாகவே இருந்தனர். ஆனால், விஜய்யின் கண்களில் தெரிந்த ஒரு வெறுமை, சிவாவை உடனே நகர விடவில்லை! ஏனெனில், அதே வெறுமையை, தன் கண்களிலேயே, அவன் கண்ணாடியில் கண்டிருக்கிறான்! மனம் தாங்காமல், கேட்டே விட்டான்.

எப்ப இருந்து விஜய், இந்தப் பழக்கம்? மத்தவிங்க தண்ணி அடிச்சாலே திட்டுவ? இப்ப நீயே இப்டி? அதுவும், கையை கிழிச்சுகிட்டது கூடத் தெரியாம, அப்படி என்ன பழக்கம்?

ப்ப்ச்… நேத்துதான் முத தடவை அடிக்கப் பாத்தேன்.

அப்டி என்னடா பிரச்சினை உனக்கு? அஞ்சலியும், உன் குழந்தையும் எங்க?

அவ வீட்டுக்கு போயிருக்கா?

நீயும் போக வேண்டியதுதானே? அப்டியே, உன்னோட வீட்டுக்கும் போயிட்டு வர வேண்டியதுதானே?! நீ என்ன, என்னை மாதிரியா? உனக்குதான் எல்லாரும் இருக்காங்களே? அப்புறம் ஏன் இப்டி பண்ற?

ப்ச்ச்… யாரும் இல்லாம இருக்கறது மட்டும்தான் கவலையா? எல்லா சொந்தமும் இருந்தும், யாருக்கும், எதுவும், செய்ய முடியாம இருக்குறது, எவ்ளோ கொடுமை தெரியுமா? யாரும் இல்லாட்டி கூட, நமக்கு வாய்ச்சது இதுதான்னு மனசு ஏத்துக்கும். ஆனா, என் நிலைமை, நரகம்டா!

என்னடா இப்டி சொல்ற? உனக்கு என்னடா குறை? நல்லா படிச்சிருக்க, நல்ல வேலையில இருக்க, ஊர்ல வீடு கட்டியிருக்க, குடும்பத்தை முன்னுக்கு கொண்டு வந்துட்ட, ஒரு ஆன் சைட் போனின்னா, சென்னைல ஒண்ணு வாங்கிடலாம், இன்னும் என்ன?!

நீ வேற கடுப்பேத்தாதடா? என்ன படிச்சாலும் நான் பட்டிக்காடுதானாம். அவ ஸ்டேட்டசுக்கு என்னைக் கல்யாணம் பண்ணிகிட்டதே பெரிய விஷயமாம்!

அஞ்சலியாடா இப்படி சொன்னா? அவளைப் பாத்தா அப்படில்லாம் தெரியலியேடா?

ப்ப்ச்…

டேய், சொல்றதை கொஞ்சம் முழுசாதான் சொல்லேன்!

ப்ப்ச்… திமிருடா, முழுக்க பணத் திமிரு! அவங்கப்பா கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவரு, என் ஊருதான் அவரோட சொந்த ஊருங்கிறதுனாலத்தான், என்னை அவரு பொண்ணுக்கு கேட்டாரு. நான் கூட, பெரிய இடம்னு யோசிச்சப்ப, பணம் காசு முக்கியமில்லை தம்பி, தன்னோட குடும்பத்தை முன்னுக்கு வந்தீங்க பாருங்க, அதுதான் தம்பி முக்கியம். உங்கக் குடும்பத்தையே அப்படி பாத்துக்கிறவரு, என் பொண்ணை எப்படி பாத்துக்குவீங்க?!

என் பொண்ணுக்கு பணக்கார மாப்பிளை அமையறதை விட, உங்களை மாதிரி, ஒரு ஒரு நல்ல, குணமான மாப்பிள்ளை அமையறதுதான் தம்பி எனக்கும் சந்தோஷம்! ஒத்தைப் பொண்ணு பாருங்க, அவளை உங்ககிட்ட ஒப்படைச்சுட்டா, எனக்கு மனசு நிம்மதியா இருக்கும்னு ரொம்பத் தன்மையா பேசுனாரு!

அவரைப் பாத்துட்டு, பொண்ணையும், பொண்ணோட அம்மாவையும் கண்டுக்காம விட்டுட்டோம்! கல்யாணத்தன்னிக்கே, அவங்கம்மா ஏகப்பட்ட அடாவடி! யார் பொண்ணு வீடு, யார் மாப்பிள்ளை வீடுன்னே தெரியாத அளவுக்கு அதிகாரம்! ஏசி கூட இல்லியா, கார் இல்லியானு ஏகப்பட்ட பேச்சு. நான் கார் வாங்குனது கூட அவளுக்காகத்தான். ஆனா, அதுலியும், ஏகப்பட்ட குத்தம் சொன்னாங்க!

அவிங்க அம்மாவைச் சொன்னா, இவளுக்கு கோவம் வந்துடுது, கண்ட படி கத்துறா! ஆனா, அவளும், அவங்கம்மாவும், எங்கப்பா, எங்கம்மா, அக்கான்னு எல்லாரையும் மட்டம் தட்டி பேசுறது, அவிங்களுக்கு தப்பாவே தெரியலை! ஆனா, ஊனா அவ ஊருக்கு போயிடுவா! ஆனா, என் வீட்டுக்கு வான்னா மட்டும் வரமாட்டா. வசதி கம்மியா இருக்கிற இடத்துக்கு ஏன் கூப்பிடுறீங்கன்னு அவளுக்கும் முன்னாடி, அவிங்கம்மா பதில் சொல்றாங்க!

எங்க வீட்ல, நான் படுற கஷ்டத்தை பாத்துட்டு, அவளைச் சந்தோஷமா பாத்துக்க தம்பி, நீ சந்தோஷமா இருந்தா போதாதான்னு தள்ளி நிக்குறாங்க!

1 Comment

  1. Loving wife so much that he can’t even scold her but he will ask a stranger to force his wife…Shhh. Habba… Mudiyala, no logic or whatever it is…

    Also, in the first part, that guy is enjoying forcing his friend’s wife and even ejaculated inside… Oh dear, couldn’t stop laughing…

Comments are closed.