நேருக்கு நேர் – கிளைமாக்ஸ் 144

நிவேதா 15 நாள் பயணமாக, புனே சென்றிருந்தாள்! முக்கிய நாளில் கூட, தனக்காக யாரும் இல்லை என்ற வெறுமை உணர்வில், சிவா வீடு திரும்பிய போது, மணி 12ஐ தாண்டியிருந்தது!

வீட்டிற்குள் நுழையப் போனச் சமயத்தில் அவனது உள்ளுணர்வு சொல்லியது, ஏதோ சரியில்லை என்று! வெளியிலிருந்தே விஜய் இருக்கும் எதிர் ஃபளாட்டைப் பார்த்தவனுக்கு, உள்ளிருந்து வரும் வாசமும், வீடு இருக்கும் நிலையும், அவனது உள்ளுணர்வைச் சரி என்றது!

மிக, மிக அத்தியாவசிய காரணங்களின்றி, சிவாவும், விஜயும், இன்னொருவருடைய வீட்டுக்குச் செல்வதில்லை! ஆனால், அஞ்சலியும், நிவேதாவும் அதை கண்டுகொண்டதே இல்லை!

தயங்கியபடியே, விஜய்யின் படுக்கையறையை அடைந்தவனுக்கு வாசத்திற்கான காரணம் புரிந்தது! அந்தக் காட்சி, படு பயங்கர அதிர்ச்சியை, சிவாவிற்கு கொடுத்தது! ஏனெனில்,

அறையில் பீர் பாட்டில் உடைந்து, அறையெங்கும் வழிந்து ஓடியிருந்தது! அந்த பீர் பாட்டிலை, விஜய் அடித்து உடைத்திருக்கிறான் என்பது பார்த்தவுடன் புரிந்தது!

உடைந்த பீர் பாட்டில், விஜய்யின் கையையும் கொஞ்சம் கிழித்திருந்தது. அது கூட உணராமல், அவன் மயக்கத்தில் அல்லது போதையில் இருந்தான்

அதிர்ச்சிக்கு இன்னொரு மிக முக்கியக் காரணம், சிவாவிற்கு நன்கு தெரியும்! விஜய்க்கு தண்ணி அடிக்கும் பழக்கமே கிடையாது என்பது!

இருவருக்கும் இடையே பகை என்றாலும், பல விஷயங்களில் இருவருக்கும் ஒற்றுமை அதிகம்! இருவரும் தண்ணி அடிக்க மாட்டார்கள். யாரையும் எதிர்க்கும் தைரியம் கொண்டவர்களெனினும், ரவுடித்தனம் செய்வதை விரும்ப மாட்டார்கள்! பெண்கள் விஷயத்தில் நல்லவர்கள். விஜயின் பேரைக் கெடுத்தது கூட, சிவாவின் நண்பர்கள்தானேயொழிய, சிவா நேரடியாக அவனைப் பொம்பளைப் பொறுக்கி என்று நினைத்ததில்லை!

உண்மையில் அவர்களுக்கிடையே நேரடி பிரச்சினை எதுவுமில்லை! இருவரது நண்பர்களுக்கிடையேயான சண்டை, அவர்களிடையே பகையை மூட்டியிருந்தது! அவ்வளவே! ஆனால், விஜய்யைப் பொறுத்த வரை, எந்த விஷயத்தில் மன்னித்தாலும், தன்னை பொம்பளைப் பொறுக்கி என்று சொன்ன போது, அதை அமைதியாக வேடிக்கை பார்த்தானே என்று, சிவாவின் மீதான கோபத்தை விடத் தயாராய் இல்லை! தன்னுடைய ஒழுக்கத்தை குற்றம் சாட்டியவர்களின் மேல் எழும் நேர்மையானவனின் கோபம் அது!

சிவாவைப் பொறுத்த வரை, அவன் நண்பர்கள் சும்மா பேசுகிறார்கள் என்றிருந்தவன், அது இந்தளவு பெரிய விஷயமாகி, அதனாலேயே அவன் ஜெயிப்பான் என்று எதிர்பார்க்கக் கூட இல்லை! ஒரு வகையில் ஜெயித்த பின், அவனுக்கு ஒரு வித குற்ற உணர்ச்சியே உண்டாகியிருந்தது! ஏனெனில், விஜய்யின் கிராமத்து பிண்ணனி, அவன் புத்திசாலித்தனம், நேர்மையான பண்புகள் அனைத்தும், அவன் மேல் ஒரு மரியாதையை சிவாவிற்கு கொடுத்திருந்தது!

முதல் கோணல், முற்றிலும் கோணல் என்பது போல் ஆரம்பத்தில் முட்டிக் கொண்டவர்கள், கடைசி வரை எதிரியாகவே மாறியிருந்தார்கள்! அபார்ட்மெண்ட்டில் அவனைப் பார்த்த பின்பும், குற்ற உணர்ச்சியால் சிவா பேசாமல் இருக்க, கோபத்தில் விஜய் பேசாமல் இருந்து விட்டான்!

அப்படிப்பட்டவன், இன்று இப்படி குடி போதையில், அதுவும் இரத்தம் வருவது கூட தெரியாமல் என்றால், அவனுக்கு என்ன பிரச்சினை? எனக்குதான், நிவேதாவுடன் பிரச்சினை! இவனுக்கு என்ன? குழந்தை பெற்ற பின் ஏன் இப்படி பண்றான்?

விஜய்யின் நிலையைக் கண்டு வருந்தியவன், அவனை இன்னொரு அறையில் படுக்க வைத்து, கைக்கு கட்டு போட்டு, அறையைக் க்ளீன் செய்தவன், அவனை அப்படியே விட்டுச் செல்ல மனமில்லாமல், ஹால் சோஃபாவிலேயே படுத்து உறங்கினான்!

அதிகாலையில் கண் விழித்த விஜய், சுற்றும் முற்றும் பார்த்து அதிசியித்தவனுக்கு, சிவாவைப் பார்த்ததும் காரணம் புரிந்தது. உள்ளுக்குள், இவனுக்கு எப்படி தெரிந்தது என்று ஆச்சரியமாக இருந்தது.

சிறிது நேரத்தில் எழுந்த சிவாவும், நான் என் வீட்டுக்குப் போறேன் என்று கிளம்ப முயன்றான்.

காஃபி குடிச்சிட்டு போ சிவா!

1 Comment

  1. Loving wife so much that he can’t even scold her but he will ask a stranger to force his wife…Shhh. Habba… Mudiyala, no logic or whatever it is…

    Also, in the first part, that guy is enjoying forcing his friend’s wife and even ejaculated inside… Oh dear, couldn’t stop laughing…

Comments are closed.