இந்த அணைப்பு.. இந்த தடவல்.. இந்த முத்தம்! 4 61

மாலை ஆறு மணி. சந்துரு தன் அம்மா வீட்டுக்குப் போய் விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தான். அவன் பின்னால் லிபிகா உட்கார்ந்திருந்தாள். அதே நேரம் நிருதியும் சுவாதியுடன் வந்து கொண்டிருந்தான். வழியில் இருவரும் சந்தித்துக் கொண்டனர்.. !!

“எங்கப்பா.. ரெண்டு பேரும் ஜாலியா போயிட்டு வர மாதிரி இருக்கு?” என்று நிருதியைக் கேட்டான் சந்ரு.

சட்டென பொய் சொன்னான் நிருதி.
“கடைத் தெருவுக்கு வந்தோம். ஆமா நீங்க ரெண்டு பேரும் எங்க போயிட்டு வரீங்க?”
“எங்கம்மாவை பாக்க போனோம். இப்ப திரும்பி வீட்டுக்கு போறோம்”
“சிஸ்டர் இன்னும் சீரியஸாத்தான் இருக்காங்க போலருக்கு” என்று லிபிகாவைப் பார்த்து சிரித்தபடி கேட்டான் நிருதி.

லிபிகா உடனே சிரித்தாள்.
“இவங்க யாரு?”
“என் பக்கத்து வீட்டு பொண்ணு”
“நல்லாருக்காங்க..”
”அப்படிங்கறீங்க.?”

சுவாதி அவன் முதுகில் குத்தினாள். லிபிகா.. “ஜோடி பொருத்தம் நல்லாருக்கு”
சந்துரு “ஏய்.. உன் வாய வெச்சிட்டு சும்மாருடி” என்றான்.
“ஆனால் அவள் அதை மதிக்கவே இல்லை.
“அவங்க பேரு?”
“சுவாதி”
“ஹாய் சுவாதி”
“ஹாய்.. உங்க பேரு?” சுவாதி கேட்டாள்.
“லிபிகா..”
“நீங்களும் அழகாருக்கீங்க”
“தேங்க்ஸ். இந்த மனுஷன் காதுல நல்லா விழுற மாதிரி சொல்லுங்க. என்னை மதிக்கறதே இல்ல..”

சந்துரு “ஏய்.. வாய மூடுடி”
“பாத்திங்களா? இப்படித்தான். எப்ப பாரு திட்டிட்டேதான் இருப்பாரு. ஒரு கொழந்தை பெத்துட்டா எல்லா புருஷனுகளுக்கும் பொண்டாட்டி மேல இருக்குற இன்ட்ரஸ்ட்டே போயிடுது”
“ஏய்.. ரோட்ல போறப்ப இப்படி பேசி மானத்தை வாங்காதடி சனியனே.”
“பாத்திங்களா.. ரோட்லயே எப்படி பேசுறார்னு? அழகாருந்து என்ன பண்றது? இதான் பொண்டாட்டிகளுக்கு கெடைக்குற மரியாதை”

2 Comments

  1. Marvelous next one

  2. Continue this story, you got à Nice flow, very real and organic conversation between Chandhru and Libicca.. keep doing

Comments are closed.