வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் பத்து 49

காலையில் 8 மணிக்கு அவனே என்னை எழுப்பினான், சூடான டீயுடன். சீக்கிரம் குளிச்சிட்டு வா, 9.30 க்குள்ள மீட்டிங் ஆரம்பிக்கனும். சாப்ட்டு போக கரெக்ட்டா இருக்கும்.

மனதின் நிறைவாலோ என்னமோ, மிகவும் ஃப்ரெஸ்ஸாக உணர்ந்தேன். சீக்கிரம் குளித்து விட்டு, நல்லதொரு உடையில் வந்தேன். அது நாள் வரை உடையில் அதிகம் கவனம் காட்டாதவள், மேக்கப் செய்யாமல் சிம்பிளாக வந்தவள், அன்று கொஞ்சம் கவனம் எடுத்துக் கொண்டேன்.

என்னை மேலும் கீழுமாக பார்த்தான். வெளிப்படையாகவே ரசித்தான். என்னதான், அவனுக்காக இதை நான் செய்தாலும், அவன் ரசிக்கும் போது வெட்கமாய் இருந்தது. மனம் பொய்யாய் கோபம் கொண்டது.

என் கோபத்தை அலட்சியம் செய்தவன், சீக்கிரம் சாப்ட்டுட்டு, நீ முன்னாடி போ! நான் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்.

எனக்கு கோபம் வந்தது. ஏன் ஒண்ணாத் தங்குனோம்ல, ஒண்ணாப் போனா, ஸ்டேட்டஸ் கொறைஞ்சிடுமோ? ஏனோ, நேற்றைய இரவுக்குப் பின், எனக்கு அவனுடன் சேர்ந்து செல்ல வேண்டும் போல் இருந்தது.

அவன் முறைத்தான். நீதான் இந்த மீட் முழுக்க ஆர்கனைஸ் பண்ற ஆளு. கரெக்ட்டா எல்லாம் இருக்கான்னு நீ முன்னாடியே போய் செக் பண்ற மாதிரி பாரு.

நான் வர்றப்ப, எதுவும் சரியா இல்லீன்னா, உனக்குதான் சங்கடமா இருக்கும். அதுக்குதான் சொன்னேன்.

நான் நாக்கைக் கடித்துக் கொண்டேன். சரிதான்! எனக்காக அவ்ளோ பாக்குறீயாடா!

எனக்கு ஏன் இவ்ளோ கோவம்? அதுவும் இவனிடம் என்றால் ஓவராதான் போறேன்! இவன் அக்கா இவனைத் திட்டவே மாட்டேங்கிறான்னு சொல்லிட்டு, நான் எதுக்கெடுத்தாலும், இவனையே குற்றவாளியாக்கி திட்டிகிட்டு இருக்கேன். என்னை ரொம்ப கெடுத்து வெச்சிருக்கான்…

அடிப்பாவி, நேத்து சும்மா இருந்தவனை சீண்டி விட்டுட்டு, அவன் கூடவே படுத்து எந்திரிச்சிட்டு, இப்ப அவன் என்னமோ கெடுத்துட்டான்ன்னு யோசிச்சிட்டிருக்க?

அவன் மேலுள்ள காதலால், என் மனம் கண்டபடி பிதற்றிக் கொண்டிருந்தது.

நான் சீக்கிரம் சென்று எல்லாவற்றையும் செக் செய்து விட்டு அவனுக்கு அழைத்தேன்.

எல்லாம் ரெடி! வா!

அன்றைய நாள் முழுக்க, அவன் பார்க்காத சமயத்தில் அவனை நான் ரசித்துக் கொண்டே இருந்தேன். என் மனம் மிக சந்தோஷத்தில் இருந்தது.

இரவு நெருங்கியது!

இரவு நெருங்க நெருங்க, என் மனம் படபடப்பு அடைந்தது. இன்று இரவும் என்னை நெருங்குவானா? என்ன செய்வான்?

அவன் ஏதேனும் செய்ய வேண்டும் என நினைக்கிறேனா, செய்யக் கூடாது என்று நினைக்கிறேனா?

அவன் சாப்பிட்டு விட்டு லேப்டாப்பில் ஏதோ நோண்டிக் கோண்டிருந்தான். எனக்கு, என்ன செய்ய வேண்டுமென்று புரியவில்லை. நானும், அமைதியாக நாளைக்கு என்ன செய்வது என்று வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால், மனம் அதில் இல்லை.

கொஞ்ச நேரத்தில் அவன் வேலையை முடித்தவன், என்னை பார்த்தான்.

தூங்கலை?

ம்ம்.. தூங்கனும்!

என்னையே பார்த்தான். நான் அமைதியாக இருந்தேன். பின் எழுந்து என்னருகில் வந்தான்.

சரி வா, தூங்கப் போகலாம்.

எனக்கு என்ன சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை. அமைதியாக நானும் எழுந்து நின்றேன்.

என்னை விஷமமாகப் பார்த்து புன்னகை செய்தான். மெல்ல என் இடுப்பில் கை கொடுத்து என்னை அருகே இழுத்தான்.

போலாமா?

எனக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. நான் மவுனமாக தலையைக் குனிந்து கொண்டேன். அப்படியே, என்னை, அவனது அறைக்கு அழைத்துச் சென்றான்.