வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் பத்து 49

ஏன் லாவி, ஒரு வேளை உங்க அப்பாவும், சித்தியும் வந்து மன்னிப்பு கேட்டா நீ ஏத்துக்குவியா?

அவள் நிமிர்ந்து என்னைப் பார்த்தாள். பின் கேட்டாள்.

உங்க அப்பாவையும், சித்தியையும் நீ மன்னிச்சிடுவியா?

நான் மாட்டேன் என்று தலையாட்டினேன்.

நானும் அப்படித்தான். அவிங்க என் மேல அன்பு காட்டாததைக் கூட என்னால மன்னிக்க முடியும். ஆனா, என்னை ஏமாத்திக் கல்யாணம் பண்ணி வெச்சதை என்னால மன்னிக்கவே முடியாது! இனி என் வாழ்க்கைல, என் சைடுல இருந்து உறவுன்னு யாரும் கிடையாது.

அவள் அப்படிச் சொன்னவுடன் எனது அணைப்பு இறுகியது.

ப்ச்… அவிங்களைப் பத்தி எதுக்கு இப்ப பேசனும்? நீ வேறெதாவது கேளேன்.

கொஞ்சம் தயங்கியவன், என்னைப் பார்த்துச் சொன்னான். உன்கிட்ட ஒண்ணு சொல்லனும் லாவண்யா!

என்ன… சொல்லு!

இல்லை… வந்து… அக்கா, அவ பிரச்சினையைச் சொன்னதுக்கப்புறம், எனக்கு பயங்கர கோவம் வந்துடுச்சி. அதுவும் அந்த மோகன் மேல செம கோபம். அவிங்களை எப்படி பழிவாங்குனேன்னு….

மதன் சொல்லச் சொல்ல, அவனது வாயை, என் கையால் மூடினேன்.

நீ ஒண்ணும் சொல்ல வேணாம்!

இல்ல லாவண்யா… வந்து, அது நீ தெரிஞ்சு…

என்ன தெரிஞ்சிக்கனும்? கண்டிப்பா நீ அவங்களை சாதாரணமா அடிச்சிருக்க மாட்ட. வாழ்க்கைல இனி அவன் யார்கிட்டயும், இது மாதிரி நடந்துக்க முடியாத மாதிரிதான் அடிச்சிருப்ப.

எப்ப என் ஃபிரண்டு, நீ இதுக்காக வேலையை விட்டுட்டு, அங்க ரெண்டு மாசத்துக்கும் மேல போயி தங்குனன்னு சொன்னாளோ, அப்பியே தெரிஞ்சிடுச்சி. நீ அவனை மட்டுமில்லை, அவன் ஒய்ஃபையும் எதையோ பண்ணியிருக்கன்னு! அவளும்தான தப்பு பண்ணா?

அப்படி ஒரு அடியைக் கொடுக்கனும்ன்னா, சில நியாய தர்மம்லாம் பாத்துட்டிருக்க முடியாது. அதுனால, அதைப் பத்தி எனக்கு எதுவும் தெரிய வேணாம். சொல்லப் போனா, நீ இவ்ளோ பெரிய அடியை, அவளுக்காக, அவிங்களுக்கு கொடுத்தது, எனக்கு ரொம்ப சந்தோஷம்தான்.

அவ, அன்னிக்கு சொன்னதைக் கேட்டு எனக்கே பயங்கரக் கோபம் வந்துச்சு. உனக்கு எப்படியிருந்திருக்கும்னு எனக்கு தெரியாதா? அந்த மோகன் மட்டும் என் கைல கிடைச்சான்….

அவ எவ்ளோ ஃபீல் பண்ணா தெரியுமா? உனக்குத் தெரியுமா, என் பிரச்சினை காரணமா, நான் அவளுக்கு ஃபோன் பண்ணப்ப, அந்தாளு என்னையும் ஏதோ சொல்லியிருக்கான்.

நக்கலா, உன் ஃபிரண்டையும் வரச் சொல்லுன்னு ஏதோ சொல்லியிருக்கான். அதைக் கேட்டுட்டுதான், இவ என் கூட பேசுறதை கூட நிறுத்திட்டா.

ஆனா, அதுனால எனக்கு நடந்ததைக் கேட்டவ, இன்னிக்கும் உள்ளுக்குள்ள ஃபீல் பண்ணிட்டிருக்கா. தான் ஹெல்ப் பண்ண முடியாததாலத்தான், எனக்கு இந்தப் நிலைமைன்னு நொந்துக்குறா! ஹரீஸ்ஸண்ணா வேற, தனியா, நாந்தான் காரணம்னு ஃபீல் பண்ணாரு.

இப்படி நம்ம எல்லாத்தையும் கஷ்டப்படுத்துன அந்த ஆளை, சாதாரணமால்லாம் நீ விட்டிருந்தா, நானே உன்கிட்ட சண்டை போட்டிருப்பேன். பட், அவ முகத்தைக் கூட மோகனால நிமிர்ந்து பாக்க முடியல, இவளைக் கண்டாலே பயந்துகிட்டு ஓடுறான்னு அவ சொன்னதுல இருந்து, நீ, என்ன பண்ணியிருந்தாலும், அது ரொம்ப கரெக்ட்டுன்னுதான் எனக்கு தோணுது!

என்னுடைய விளக்கத்தைக் கேட்டு அவனுக்கு மனசு கொஞ்சம் இளகியிருந்தது. இருந்தும் கேட்டான்.

சரி, நான் கரெக்ட்டாதான் பண்ணேன்னா, என்ன பண்ணேன்னு தெரிஞ்சிக்கோயேன். எனக்கு, உன்கிட்ட மறைக்கிறது கொஞ்சம் சங்கடமா இருக்கு என்று தயங்கித் தயங்கி சொன்னான்…

அவன் உள்ளுக்குள் எதையோ நினைத்து மிகவும் சங்கடப்படுகின்றான் என்று தெளிவாகப் புரிந்ததால் நிமிர்ந்து அவன் கண்களையே பார்த்துச் சொன்னேன்.

இங்க பாரு, இப்பியும் சொல்றேன். எனக்கு அது தெரிய வேணாம்.

எப்ப இந்த மாதிரி விஷயத்துல நியாய தர்மம் பாக்க முடியாதுன்னு சொன்னேனோ, அப்பியே எனக்கு இன்னொன்னும் தெரியும். நீ, உன் மனசாட்சியை மீறி சில விஷயங்களை கண்டிப்பா செஞ்சிருப்பன்னு. அதுனாலதான் சொல்றேன் எனக்கு தெரிய வேணாம்ன்னு!

இடையில் பேச வந்தவனை அவள் தடுத்து சொன்னாள்.

என்னை முழுசா பேச விடு. ஒரு விஷயத்தை நீ என்கிட்ட சொல்லாம மறைச்சாதான் எனக்கு வருத்தமா இருக்கும். ஆனா, நீ மறைக்கனும்னு நினைக்கலியே? நாந்தானே சொல்ல வேணாம்னு சொல்றேன்?!