வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் பத்து 49

லாவண்யாவின் வீட்டில், திடீரென, அவளது சித்தி, தன்னுடைய ஒன்று விட்ட தம்பிக்கு அவளைக் கட்டி வைத்துவிடலாம் என்று திட்டம் போட, அவள் மேல் பாசம் இல்லாத தந்தையும், செலவில்லாமல் அவளுக்கு கல்யாணம் செய்ய நினைத்து, ஓகே சொல்லியிருந்திருக்கிறார்.

விஷயம் கேட்ட நொடியிலேயே, முடியாது என்று லாவண்யா மறுக்க, மற்றவர்கள் வற்புறுத்த ஆரம்பித்தனர். போகும் போக்கு சரியில்லாததால், அவள் முதலில் உதவிக்கு, அவள் ஃபிரண்டான, மதனின் அக்காவை அழைத்து, எனக்கு ஒரு ஹெல்ப் வேணும். நேர்ல பேசணும். பெங்களூர் வரட்டுமா என்று கேட்டிருக்கிறாள்.

மோகனின் டார்ச்சரில் மாட்டி இருந்த அவனது அக்காவோ, எப்படி உதவுவது என்று யோசிக்கையில்,

மோகனோ, சும்மா அந்தப் பொண்ணையும் கூப்பிடு, வீட்லியே தங்க வை. ஒருத்தருக்கு ரெண்டு பேரா இருந்தா எனக்கும் நல்லா இருக்குமில்ல என்று அசிங்கமாகச் சொல்லியிருக்கிறான்.

இந்த நிலையில் அவள் வரக் கூடாது என்று நினைத்தவள், அடுத்த முறை ஃபோன் செய்யும் போது, சும்மா சும்மா என்னை டிஸ்டர்ப் பண்ணாத, ஏதாவதுன்னா மதன்கிட்ட போயி கேளு என்று வேண்டுமென்றே முகத்திலடித்தாற் போல் பேசியிருந்திருக்கிறாள்.

அவள் அவசரப்பட்டு இங்கு கிளம்பி வந்து மாட்டிக் கொள்ள கூடாதே, என்று வேண்டுமென்றே அப்படி பேசியிருந்திருக்கிறாள்.

காதலை வேண்டாம் என்று சொன்னவனிடம், இதற்காக போய் நிற்க வேண்டாம் என்று நினைத்திருந்த லாவண்யா, இப்பொழுது வேறு வழியில்லாமல், அவனுடைய நம்பருக்கு அழைக்க அது அணைத்து வைக்கப்படிருந்தது.

ஏனெனில், அதுதான், மதன், தன் கம்பெனியில் மிகவும் பிசியாக இருந்த நேரம். அஃபிசியல் கால்ஸ் அதுவும், அவனுடைய செக்ரட்டரி வழியாக அனுமதிக்கப்பட்ட கால்கள் மட்டுமே அவன் பேசினான். தேவையில்லாமல், யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்றும் சொல்லியிருந்தான்.

லாவண்யா முதலில் அவன் செக்ரட்டரிக்கு பேசியிருந்திருக்கிறாள்.

இல்லை, தேவையில்லாம டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் என்று பாஸ் சொல்லியிருக்கிறார் என்று சொன்னவளிடம்,

நான் லாவண்யான்னு சொல்லுங்க, என் பேரைக் கேட்டா, அவர் மாட்டேன்னு சொல்லமாட்டாரு! என்று மிகுந்த நம்பிக்கையுடன் சொல்லியிருக்கிறாள்.

அவளது நம்பிக்கையைக் கேட்ட செக்ரட்டரியும், மதனிடம் சொல்லப் போனாள்.

இங்குதான் விதி வேலை செய்தது!

அது, லாவண்யா என்ற பெயரை, செக்ரட்டரி, அந்த நேரத்தில் ஏற்பட்ட தடங்கல் காரணமாக, சரண்யா என்று காதில் வாங்கிக் கொண்டாள்.

மதனோ, செக்ரட்டரியிடம், அவிங்ககிட்ட, பேச தனக்கு ஒன்றுமில்லை என்று சொல்லியிருக்கிறான்.

லாவண்யாவால், அதை நம்பமுடியவில்லை.

அப்போது ஃபோனை வைத்தாலும், மீண்டும் அடுத்த நாள் அழைத்து, நீங்கத் திரும்ப அவர்கிட்ட பேசுங்க, ரொம்ப முக்கியமான விஷயம்னு சொன்னதாச் சொல்லுங்க என்று அடித்துப் பேச, அப்பொழுதும், அவன், எவ்ளோ முக்கியம்னாலும், அவிங்களைப் பார்க்கவோ, பேசவோ விருப்பமில்லை என்று சொல்லியிருக்கிறான்.

லாவண்யாவால் அப்பொழுதும் நம்ப முடியவில்லை. அடுத்த நாள், நேராக அலுவலகம் சென்றிருக்கிறாள்.

அதே செக்ரட்டரியிடம், நான் ஃபோன்ல பேசினேனே! ஏதோ மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்னு நினைக்கிறேன். நான்னு சொன்னா, கண்டிப்பா மதன், என்னை பாக்க முடியாதுன்னு சொல்ல மாட்டான். நான் அவனைக் கண்டிப்பா பாத்துட்டுதான் போவேன் என்று சொல்லியிருக்கிறாள்.

தன்னுடைய பாஸை, அதுவும் அனைவரும் கண்டு பயப்படும் ஒருவரை, இவள் மிக கேஷூவலாக, அவன், இவன் என்று சொல்வதைக் கண்ட மதனின் செக்ரட்டரி,

மேடம், நீங்க சொல்றது புரியுது. பட், பாஸ் வந்து, இந்த 6 மாசமா கம்பெனியை கண்ட்ரோலுக்கு கொண்டுவர, டே அண்ட் நைட் ஒர்க் பண்றார். அதுனால, சமயத்துல பயங்கர டென்ஷனா இருக்காரு. சில சமயம் அவர்கிட்ட பேசவே எனக்குல்லாம் டென்ஷனா இருக்கும். அப்டி இருந்தும் போன தடவைச் சொன்னப்பவே, காய்ச்சி எடுத்துட்டாரு. இப்ப போயி சொன்னா…

ப்ளீஸ் எனக்காக, இந்த ஒரு தடவை ட்ரை பண்ணுங்களேன். இனி நான் வர மாட்டேன் என்று லாவண்யா சொல்ல, வேறுவழியில்லாமல், அவளது செக்ரட்டரி அவளை சோஃபாவில் உட்காரவைத்து விட்டு, மதன் ரூமூக்குச் சென்று சொல்லியிருக்கிறாள்.

சார், ரெண்டு நாளா ஃபோன் பண்ணியிருந்தாங்கன்னு சொல்லியிருந்தேனே, அந்த லேடி, உங்களைப் பார்த்தே ஆகனும்னு வெளிய வெயிட் பண்றாங்க சார். உங்களை நல்லாத் தெரியும், முக்கியமான விஷயம்னு சொல்றாங்க சார் என்று தயங்கித் தயங்கிச் சொன்னாள்!

கதவு கொஞ்சம் திறந்திருந்ததால், செக்ரட்டரி சொன்னது வெளியே இருந்த என் காதிலும் விழுந்தது.

வாட்… நாந்தான் ஏற்கனவே சொல்லியிருக்கேன்ல, அவிங்களை நான் பார்க்க விரும்பலைன்னு? பின்ன என்ன?