வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் பத்து 49

என் பதில் அவனுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.

பரவாயில்லை. அவகிட்ட ஃபோன் பேசனும்னு ரெண்டு நாளா சொல்லிட்டிருந்தியே. அதைச் செய். கொஞ்சம் தூங்கி எந்திரி. நானும் ரொம்ப நேரம் இருக்கப் போறதில்லை. சீக்கிரம் வந்துடுவேன். சும்மா எட்டிப் பாக்கத்தான் போறேன்.

அப்புறம் நாம கண்டுக்கலைன்னு ஒரு எண்ணம் வந்துடக்கூடாது பாரு! அதான்.

சரி ஓகே!

அவன் சென்றவுடன், தனிமையில், அவனுடனான காதலை உள்ளுக்குள் ரசித்துக் கொண்டிருந்தேன்.

என் மனம் தாங்க முடியா மகிழ்ச்சியில் இருந்தது. சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தது. அப்படியே உல்லாசமாக புல்வெளியில் சுற்றிக் கொண்டிருந்தேன்.

இன்று மாலை எப்படியும் அவனிடம் மனம் விட்டு பேச வேண்டும் என்று உள்ளுக்குள் முடிவெடுத்திருந்தேன்.

5 மணிக்கு மேலாகியும் அவன் வரவில்லை.

இதான் போனவுடனே வர்றதா? இதான் லவ் பண்ர லட்சணமா? உன் லவ்வர் வெயிட் பண்ணிட்டிருக்கான்னு அறிவு வேணாம்? என்று உள்ளுக்குள் அவனை செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தேன்.

அவனுக்காக நான் தயாராகி இருந்த பின்பும் அவன் இன்னும் வரவில்லை!

போனவன் திரும்பி வரும் போது ஏறக்குறைய இரவு 8 ஆகியிருந்தது. உள்ளே வந்தவனைப் பார்த்து, நானே அதிர்ந்தேன்.

கண்கள் சிவந்து, உடை கொஞ்சம் கலைந்து, முகத்தில் பல்வேறு உணர்ச்சிகளுடன் அவனைப் பார்த்தவுடன் தெரிந்தது, ஏதோ சரியில்லை என்று.

என்ன ஆச்சு மதன்?

என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். பின் மெதுவாகக் கேட்டான்.

ஏன் லாவண்யா, இப்டி பண்ண?

அவன் குரலும், அதிலிருந்த வருத்தமும், அவனது நிலையும் எனக்குச் சொல்லிவிட்டது. அவன் எதைக் கேட்கிறான் என்று! எந்தச் சூழ்நிலையை நான் எதிர்கொள்ள தயங்கினேனோ, அதைப் பற்றிதான் கேட்கிறான் என்று! இருந்தும் தயங்கித் தயங்கி கேட்டேன்.

எ… என்ன சொல்ற மதன்?

நிஜமா உனக்கு புரியலை?

நான் பதில் பேச முடியாமல் தலை குனிந்தேன். தயங்கித் தயங்கி கேட்டேன்.

எ… எப்டி தெரியும்?

இப்பதான் பழைய செக்ரட்டரிகிட்ட பேசிட்டு வர்றேன். இன்ஃபாக்ட் இன்னிக்கு போனதே, அவகிட்ட இது பத்தி கேட்கத்தான். அப்புறம் அக்காகிட்ட பேசிட்டு வர்றேன்.

என்னால் நிற்க முடியவில்லை. என் கண்களில் இருந்து கண்ணீர் வெளிவரக் காத்திருந்தது.

நான், உன்னைப்பத்தி, அப்படி பேசியிருக்க வாய்ப்பில்லைன்னு ஒரு தடவை கூட தோணலையா??? அவ்ளோ சுலபமா விட்டுட்டியா? ம்ம்? அவன் குரலில் கோபத்தை விட வருத்தம்தான் அதிகம் இருந்தது.

அவனது கோபம் என்னை பெரிதாக பாதித்தது இல்லை. ஆனல், அவன் வருத்தங்கள்…?!அவனது வருத்தத்தைக் கண்டு என் கண்களில், என்னை மீறி மெல்லிய கண்ணீர் எட்டிப் பார்த்தது!

அப்படி எல்லாரையும் கஷ்டப்படுத்தும் அந்த ஃப்ளாஸ்பேக்தான் என்ன???