வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் ஒன்பது 56

நான் எதிர்பார்த்த மாதிரியே, சாப்பிடும் போது, குமார், மணி மற்றும் லாவண்யா மட்டும் அந்த இடத்தில் இருந்தனர்.

நான் இருந்ததை அறியாத மணி, லாவண்யாவை அசிங்கமாக, அவன் ஃபிரண்டிடம் ஜாடை பேசினான், அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாக.

அவர்கள் சாப்பிட்டு முடிக்கும் சமயத்தில், அந்த டேபிளுக்கு சென்றேன்!

ஹலோ மிஸ்டர் மணி, ஹாய் குமார், லஞ்ச் ஆச்சா? என்றவாறே அருகில் அமர்ந்தேன்.

மணிதான் அசிங்கமாகப் பேசுபவன், குமார் சும்மா கேட்டுக் கொண்டிருப்பவன்.

அப்புறம் குமார், எப்படி இருக்கீங்க? வேலை எப்டி போகுது?

அவர்களெல்லாம் அவ்வளவு எளிதில் என்னிடம் நெருங்க முடியாது, அப்படியிருக்கையில், நானே வலியப் போய் பேசும் போது அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை! கொஞ்சம் தள்ளி சாப்பிட்டுக் கொண்டிருந்த சிலர் கூட, இதை அதிசியமாகப் பார்த்தார்கள்.

நல்லா போகுது சார்!

கால் மீ மதன்! நோ சார்!

எஸ் சார்… சாரி மதன்!

ஹா ஹா. அப்புறம் குமார், உங்க அப்பா, நீங்க காலேஜ் படிக்கிறப்பவே இறந்துட்டாருல்ல?

நான், அவனுடைய பெர்சனல் விஷயங்களைக் கூடத் தெரிந்து வைத்திருப்பது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது!

எஸ் சார்….!

இப்போது மணியிடம் கேட்டேன். ஆனாலும் மிஸ்டர் மணி, காலேஜ் படிக்கிறப்பங்கிறது ரொம்ப சின்ன வயசு இல்ல?

ஆமா சார்.

என்னா, உங்க அப்பாவுக்கு 45 வயசு கூட ஆகியிருக்காது! பாவம்தான்! அப்படியிருந்தும் உங்கம்மா உங்களை கஷ்டப்பட்டு வளர்த்திருக்காங்களே, பெரிய விஷயம்தான்!

அவர்கள் மவுனமாயிருந்தார்கள்! ஆனால் ஆச்சரியமாய் பார்த்தார்கள்!

மணி உங்க க்ளோஸ் ஃபிரண்டா? வீட்டுக்கெல்லாம் வருவாரா?

ஆமா சார், க்ளோஸ் ஃபிரண்டுதான். வீட்டுக்கு நிறைய தடவை வந்திருக்காரு!

என்ன, மிஸ்டர் குமார், ரொம்ப அப்பாவியா இருக்கீங்களே?

என்ன சார் சொல்றீங்க?

இந்த உலகம் ரொம்ப மோசமானது மிஸ்டர் குமார்! மணி மாதிரியான ஆளுங்கல்லாம் இந்த உலகத்துலதான் இருக்காங்க!

உங்களுக்குதான் தெரியுமே, மணி மாதிரி ஆளுங்களுக்கு, சின்ன வயசுலியே புருஷனை தொலைச்ச பெண்களை மடக்குறதெல்லாம் ரொம்ப ஈசி! எந்த நம்பிக்கையில இவரை வீட்டுக்குல்லாம் கூட்டிட்டு போறீங்க? உங்க அம்மா வேற….

சார்… திஸ் ஈஸ் டூ மச். இருவரும் கோபத்தில் கத்த ஆரம்பித்தனர்!

கூல் கைஸ்… நான் பொறுமையாதானே பேசிட்டிருக்கேன். ஏன் டென்ஷன் ஆகுறீங்க? சுத்தி எல்லாம் பாக்குறாங்க. அவிங்களுக்கெல்லாம் கேட்டா உங்கம்மாவுக்குதானே அசிங்கம்!

சார், நீங்க பேசுறது என் அம்மாவைப் பத்தி! நீங்க தப்பா பேசுனா, எங்கம்மாவுக்கு என்ன அசிங்கம்? நீங்க என் பாஸ்னு கூட பாக்க மாட்டேன், பாத்துக்கோங்க. கோபத்தில் குமார் படபடத்தான்.

ஓ, அப்ப, வேற பொண்ணைப் பத்தி, இதே மாதிரி பேசுனா, நீ கம்முனு கேப்ப, உன் அம்மாவைப் பத்தி பேசுனா மட்டும் கசக்குதா?

அவன் கண்கள் விழியகலப் பார்த்தான்!

மணி மாதிரி ஆளுங்கல்லாம் சாக்கடை, அப்படித்தான் இருப்பாங்க! ஆனா, உனக்கு, ஒரு பொண்ணு, அதுவும் யார் சப்போர்ட்டும் இல்லாத பொண்ணு, கஷ்டப்பட்டு மேல வர்றது, எவ்ளோ கஷ்டம்னு தெரியும்ல? அவன் பேசுனப்ப, அதுவும் லாவண்யா காதுலியே விழுற மாதிரி பேசுனப்ப, நீதானே முதல்ல அவனைத் தடுத்திருக்கனும்?! உங்க அம்மாவும், இது மாதிரி, எத்தனை பேரு பேச்சைக் கேட்டிருப்பாங்களோன்னு தோணலை?

சாரி சார்!

என்கிட்ட ஏன் சொல்ற? பாதிக்கப்பட்டவங்ககிட்ட போய் சொல்லு!

லாவண்யாவைப் பார்த்தேன். அவள் விழியகல, இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்து பக்கத்தில் வருமாறு தலையசைத்தேன்.

அவளும் வந்தாள். குமார், சாரி லாவண்யா என்றான்.

இட்ஸ் ஓகே! இனி இந்த மாதிரி தப்பு செய்யாதீங்க!

மணி ஒரு மாதிரி பயத்திலும், அவமானத்திலும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். கொஞ்சம் தள்ளி இருந்தவர்கள், அவனை மிகக் கேவலமாக பார்ப்பது போல் தோன்றியது!

1 Comment

  1. Sejal mail pannu valavanmadhan gmail yen mail

Comments are closed.