வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் ஒன்பது 56

குமாரை மன்னிச்சிடலாம். மணிக்கு என்ன தண்டனை கொடுக்குறதுன்னு நீயே சொல்லு. நீ கம்ப்ளெயிண்ட் கொடுத்தா அவனை வேலை விட்டு கூட டிஸ்மிஸ் பண்ணலாம். என்ன சொல்ற?

மணியின் முகத்தில் அப்பட்டமான பயம் தெரிந்தது.

அதைப் பார்த்த லாவண்யாவோ, மன்னிச்சு விட்டுடலாம் என்றாள்.

எனக்கு கடுப்பானது. என்ன பெரிய தியாகியா நீ?

இப்போது என் கண்களைப் பார்த்தாள்.

இவன் தன்மானம் இருக்கிறவனா இருந்தா, மான, ரோஷம் இருக்கிறவனா இருந்தா வேலையை விட்டு இவனே போயிடுவான்.

திறமை இருக்கிறவனா இருந்தா, இந்த வேலை இல்லாட்டி இன்னொன்னுன்னு திமிரா இருப்பான்.

ஆனா, இவன், எதுக்கும் உதவாத, சுயமரியாதையும் இல்லாத கோழை. அதான் பயப்படுறான்.

இவனை மன்னிச்சு விட்டு, இவன் முன்னாடி, நான் பழைய மாதிரியே நடமாடுறதுதான், இவனுக்கான தண்டனை. ஆனா, இனி, இது மாதிரி பேசனும்னு நினைச்சாக் கூட, பளார்னு அறைதான் கொடுப்பேன், என்றாள்! முடிஞ்சா, இவன், இதே கம்பெனியிலியே இன்னும் மூணு வருஷம் ஒர்க் பண்ணனும்னு அக்ரிமெண்ட் போடுங்க!

மணிக்கு வேலையை விட்டு அனுப்பியிருந்தாலே தேவலாம் போலிருந்தது! அவ்வளவு அசிங்கமாய் இருந்தது!

நான் அவளை மெச்சுதலாகப் பார்த்தேன். குட்!

பின் அவர்களிடம், கெட் லாஸ்ட் என்று சொல்லி விட்டு என் ரூமிற்குள் சென்றேன்! என் பின்னாலேயே அவளும் வந்தாள்.

தாங்க்ஸ் டா!

டா வா! அவள் எப்போதும் எனக்கு மரியாதை கொடுத்ததில்லை! நானும் எதிர் பார்த்ததில்லை. நீ, வா, போ தான் பெரும்பாலும். அதுவும், அதீத கோபத்திலோ, இல்லை ரொம்ப சந்தோஷத்திலோ இருந்தால் ’டா’ தான்!

இங்கு வேலைக்குச் சேர்ந்த பின், அலுவலகத்தில் பெரும்பாலும், கொஞ்சம் மரியாதையாகத்தான் பேசுவாள். தனியாக இருக்கும் சமயத்தில் மட்டும் ஒருமையில்தான் பேசுவாள்!

அப்படிப்பட்டவள் இப்போதுதான் ’டா’ என்கிறாள்!

நான் திரும்பி அவளை முறைத்தேன். செருப்பைக் கழட்டி அவனை ரெண்டு அடி அடிச்சிருக்க வேண்டியதுதானே? என்கிட்ட வந்து கம்ப்ளெயிண்ட் பண்ணிட்டிருக்க? என்ன குழந்தையா நீ?

இன்னிக்கு தெளிவா பேசுன மாதிரி, எப்பியும் இருக்கிறதுக்கென்ன?

இப்ப நீ பக்கத்துல இருந்த! (அவள் முணுமுணுத்தது என் காதில் மிக லேசாக விழுந்தது)

நீதாண்டி ரொம்ப படுத்துற என்னை!

அவள் அமைதியாக வெளியேறி விட்டாள். ஆனால், முகம் மலர்ந்து இருந்தாள்!

அலுவலகத்தில், அவள் என் கண் பார்வையிலேயே இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு விதத்தில் மன நிறைவைத் தந்தது.

அவளுக்கும், எவ்வளவு கோபமாகக் காட்டிக் கொண்டாலும், என்னை தினமும் பார்த்தபடி இருப்பது மிகவும் சந்தோஷமாக இருந்தது போலும். பல சமயங்களில் என்னை ரசித்தாள்.

என்னதான் பிரச்சினை அவளுக்கு என்று யோசித்தேன்.

அடுத்த ஒரு வாரத்தில் இயர்லி வெண்டார் (Vendor) சந்திப்பு நடக்கப் போகிறது. ஊட்டியிலுள்ள எங்களுடைய ஒரு ரிசார்டில்தான் நடத்துவதாக திட்டம்! அதற்கான ஏற்படுகள் முழுக்க அவளுடைய கையில். கிளம்புவதற்கு இரண்டு நாட்கள் முன்பு கேட்டாள்,

நானும் வரனுமா?

நான் அவளையே பார்த்தேன். அவளோடு முழுதாக ஒரு வாரம் இருக்கப் போகும் வாய்ப்பை இழக்க நான் விரும்பவில்லை. அவளுடைய கோபத்திற்க்கான காரணத்தை கண்டு பிடித்தேயாக வேண்டும்! அதனாலேயேச் சொன்னேன். நீதான என் செக்ரட்டரி? தவிர ஏற்பாடுல்லாம் நீதான பண்ண? நீயில்லாம எப்படி?

1 Comment

  1. Sejal mail pannu valavanmadhan gmail yen mail

Comments are closed.