வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் ஒன்பது 56

கொஞ்சம் இடைவெளி விட்டவன், பெருமூச்சு விட்ட படி சொன்னான். உள்ளுக்குள்ள கொஞ்சம்… ரொம்பவே பயந்துட்டேன்… ஆனா நீ என்னான்னா, ஹாயா, இங்கியே ஓரமா உட்கார்ந்துகிட்டு இருக்க! எனக்கு எப்புடி இருக்கும்?!

நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன், இப்போதும், என் மேலான அக்கறையில், இருக்கிறான். எனக்கு ஏதாவது ஆகி விடுமோ என்று பதைக்கிறான்!

என் மனம் அவன் மேலான காதலில் வெறி கொண்டது! என்னையே கடிந்து கொண்டது.

இதற்கு மேலும், இவனைத் தவிக்க விட்டால், நானே என்னை மன்னிக்க மாட்டேன்.

மெல்ல, அவன் கையைத் தொட்டேன்.

சாரி மதன். நான் கொஞ்ச நேரம் தனியா இருக்கலாம்னு தோணுச்சு. அவ்ளோதான். ஃபோன் சைலண்ட்ல போட்டிருந்தேன் போல. நீ, தேடுனது எல்லாம் எனக்கு தெரியாது! சாரி! வெரி சாரி! நான் வேணும்னுல்லாம் பண்ணலை.

ப்ச்… விடு! நீ சேஃபா இருக்கிறதே போதும். நீ போயி ரெண்டு மணி நேரம் ஆகுது. போனவ ஸ்வெட்டரோ, ஓவர் கோட்டோ எடுத்துட்டு போயிருக்க வேண்டியதுதானே? உனக்குதான் குளிர் ஆகாதுல்ல???

அப்போதுதான் நான் அதை உணர்ந்தேன். என் உடல் மிகவும் சில்லென்று இருந்தது. குளிரில், என் உடல், என்னையறியாமல் மெல்ல நடுங்கிக் கொண்டிருந்தது. இவ்வளவு நேரம் அவனது உணர்வுகளில் மூழ்கிக் கொண்டிருந்தவளுக்கு இது எதுவும் தெரியவில்லை. இப்பொழுது, அவன் சொன்னவுடன் தெரிகிறது.

என்ன மாதிரியான காதல் இது? என் உணர்வுகளில், அவன் தடுமாறுகிறான். அவன் நினைவுகளில், நான் என் நிலை மறக்கிறேன்?!

இப்போது சுயநிலை வந்தவுடன், குளிர் எனக்கு நன்றாக உறைக்க ஆரம்பித்தது. குளிர் மெல்ல மெல்ல என் உடலில் ஏறிக் கொண்டிருந்தது.

வெளியே ஓரளவு இருட்டியிருந்தது. நவம்பர் மாத ஊட்டி குளிர் எனக்கு கொஞ்சம் கொஞ்சமாய் நடுக்கத்தைக் கொடுக்க ஆரம்பித்தது.

நான் கைகளை தேய்த்துக் கொண்டேன். மெல்ல என்னை நானே கட்டிக் கொண்டேன். உதடுகளை அழுந்தப் பற்றிக் கொண்டேன்.

ஆனால், ஏற்கனவே என் உடலில் ஏறியிருந்த குளிரும், இப்பொழுது அதிகமாகும் குளிருக்கும் அது போதவில்லை!

நான் என்னை சாமாளிக்க முயற்சி செய்து கொண்டே, அவனைப் பார்த்தேன்.

ஆனால், அவனுக்கு புரிந்து விட்டது, என்னுடைய தடுமாற்றமும், செயலும் தெளிவாகச் சொல்லியது என் நிலையை!

டக்கென்று, பெட்டில் இருந்த கம்பளியை எடுத்து என் மேல் போர்த்தியவன், என்னைப் பிடித்து அவன் பெட்டில் உட்கார வைத்தான். பின் வேகமாகச் சென்றவன், ஃபிளாஸ்க்கில் இருந்து, சூடாக டீயை கொண்டு வந்து கொடுத்தான்.

அது ஓரளவு குளிருக்கு இதமாய் இருந்தாலும், ப்ளாங்கட் எனக்கு கதகதப்பை கொடுத்தாலும், உள்ளுக்குள் ஏறியிருந்த குளிர், இன்னும் என் உடலை நடுங்க வைத்துக் கொண்டிருந்தது.

டீயை குடித்தவுடன் வாங்கி டேபிளில் வைத்தான்.

இப்ப பராவாயில்லையா? அவன் குரலில் அக்கறை!

ம்ம்… பராவாயில்லை. சொல்லும் போதே என் உதடுகள் தந்தியடித்தது.

ம்க்கும்… நான் டாக்டர் இருக்காங்களான்னு கேக்கட்டுமா என்று நகர முயன்றவனை எனது கைகள் தடுத்தது!

கொ… கொஞ்சம் பக்கத்துலியே இரேன்!

நான் சொன்னது அவனுக்கு ஆச்சரியத்தைத் தந்தது. மெல்ல என் அருகில் அமர்ந்தான். நான் அவன் கையை விடவில்லை.

இப்போது அவன் கோபம் குறைந்திருந்தது.

ப்ச்… இதுக்குதான் சொன்னேன், தனியா, ஸ்வெட்டரு இல்லாம போகாதன்னு! இப்பப் பாரு, இப்படி குளிருது உனக்கு. நான் சொல்ற பேச்சை மட்டும் கேக்க மாட்டேன்னு சபதம் எடுத்திருக்கியா என்ன?

அவன் குரலில் சலிப்பு இருந்தாலும், அவனது கோபமும், சலிப்பும் கூட என் மேல் கொண்ட அக்கறையால் என்பது, ஏற்கனவே அவன் மேல் நான் அவன் கொண்டிருந்த காதலைக் கூட்டியது.

அவனையே, சிறு புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். எனது புன்னகையும், பார்வையும், அவனையே கொஞ்சம் குழப்பியது! இருந்தும் சலிப்புடன் சொன்னான்…

இந்தப் பார்வைக்கு மட்டும் கொறைச்சலே இல்லை. சொல்ற பேச்சையும் கேக்குறதில்லை. பக்கத்துல வந்தாலும் முறைக்கிறது. ஆனா, ஏதாச்சும் சொன்னா மட்டும், ஒண்ணுமே தெரியாத மாதிரி இப்பிடி பாக்…

அவனது பேச்சு பாதியிலேயே நின்றது. அவன் கண்கள் விரிந்தது. மனமோ குழம்பியது!

ஏனெனில், அவனையே பார்த்துக் கொண்டிருந்த நான், என்னை கோபமாக திட்டியவனின் மடியிலேயே சாய்ந்து கொண்டேன்! அவன் மடியில் நான் படுத்த உடன் அவன் பேச்சு நின்றது!

ஏய், என்ன ஆச்சு? இதுவரை நானாக, அவனை நெருங்காதவள், அவன் என் பக்கம் வரும்போதும், கோபம் காட்டியவள், இன்று நானாக மடி சாய்ந்ததும் குழம்பினான். பதறினான்!

ப்ச்… ஒண்ணுமில்லை. நீ பக்கத்துலியே இரு!

இருந்தாலும், அவன் பதற்றம் குறையவில்லை. ரொம்ப குளிருதா? டாக்டரை கூப்பிடட்டுமா?

1 Comment

  1. Sejal mail pannu valavanmadhan gmail yen mail

Comments are closed.