வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் ஒன்பது 56

அவனுடைய சீற்றங்கள் எல்லாம், ஒரு சின்னப் பார்வையில் ஒன்றுமில்லாமல் போய்விடுகிறதென்ற தலைக்கனம்!

என் அழகைக் காட்டாமல், அன்பினையும் காட்டாமல், ஏன் எதையும் செய்யாமலேயே, அவனை எனக்கு அடிமையாக வைத்திருக்கிறேன் என்ற திமிர் என்னுள் ஏறியது!

என் மேல் அவ்ளோ லவ்வாடா? நான் எது சொன்னாலும் கேப்பியா?

அதென்ன போறப்ப, இனி நீ என் சொந்தம்னு சொல்லிட்டு போற? எந்த மாதிரி சொந்தம்? நான் என்ன உன் பொண்டாட்டியா? ம்ம்?

லூசு, என்னை மாதிரி ஒருத்தி டிரஸ்ஸில்லாம இருக்கிறப்பியும், ஃபீல் பண்ணிகிட்டு திரும்பி நிக்குது! இவனை வெச்சுகிட்டு என்ன பண்ண? குறைந்த பட்சம், அப்புடியே என்னைச் சமாதானம் பண்றேன்னு பக்கத்துல உக்காந்துருக்க வேணாம்?

இத்தனைக்கும் நானே, என்னை எடுத்துக்கோன்னு சொல்றேன். ஆனா, இவன் என்னமோ ரொம்பத்தான் ஃபீல் பண்றான்.

உண்மையில் நான் எப்படிச் சொன்னேன், அவன் எதற்காக திரும்பினான் என்பதெல்லாம் என் மனதிற்கு தோன்றவேயில்லை. என் மனம், என் மணாளனுடன், அவனை திட்டுவது போல் கொஞ்சிக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக அவன் காதல் நினைவுகளில் மூழ்கிக் கிடந்தது!

அவன் என் உணர்வுக்கு மரியாதை கொடுத்து திரும்பி நின்றதில் பெருமைப்பட்ட அதே மனம், காதல் என்று வந்தவுடன், ஏண்டா திரும்பி நின்ன என்று அவனிடமே செல்லச் சண்டையிடத் தொடங்கிவிட்டது!

சமயங்களில், காதலிலும், காமத்திலும், நியாயம் மிகப்பெரிய அநியாயமாகிறது! அநியாயம், மிகச் சரியான நீதியாகிறது!

அவனுடனான நினைவுகளில் எவ்வளவு நேரம் மூழ்கிக் கிடந்தேன் என்று எனக்கு தெரியவேயில்லை! சொல்லப்போனால், நான் உலகத்தையே மறந்து, அவன் நினைவுகளுடன் ஒரு தனி உலகத்திற்குள் இருந்தேன்.

உதடுகளில் புன்சிரிப்பும், மனதிற்குள் மகிழ்ச்சியும் குடி கொண்டிருந்தது!

திடீரென்று யாரோ என்னை வேகமாக உலுக்கினார்கள்!

தூக்கத்திலிருந்து திடீரென்று எழுந்தவள் போல் திடுக்கிட்டு யாரென்று பார்த்தேன்!

அங்கு கோபத்துடன் மதன் நின்றிருந்தான்! அவன் தலையும், சட்டையும் கலைந்திருந்தது. முகத்தில் கடுப்பும், தவிப்பும்!

என்ன ஆச்சு? ஏன் இப்படி இருக்கான்?

எ… என்ன மதன்?

என்னை கோபமாக முறைத்தவன், என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வீட்டினுள் சென்றான்!

நான் மெல்ல, அவனுடன் சென்றேன்.

உள்ளே அவனது அறைக்கு இழுத்துச் சென்றவன், பின் வேகமாக கையை உதறிவிட்டு, என்னை முறைத்தான்.

எதுக்கு இப்படி முறைக்கிறான்? இவனும், இவன் கோபமும்! சரியான அவசரக் குடுக்கை!

என்னுள் நான் எடுத்திருந்த எனது முடிவு, எனக்குள் ஒரு தெளிவைத் தந்திருந்ததால், இனி அவனுக்கு அன்பைத் தர முடிவு செய்துவிட்டதால், அவனது கோபம் எனக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. முன்பே அவனது கோபம் பொருட்டல்ல. இப்பொழுதோ, சொல்லவே வேண்டாம்!

எங்கடி போன? சொல்லித் தொலைஞ்சிருக்கலாம்ல?

ஏன், என்னாச்சு?

மண்ணாங்கட்டி! உன்னைத் தேடி எங்கல்லாம் அலையுறது?

நான் இங்கத்தானே இருந்தேன்? எதுக்கு எங்கெங்கியோ தேடுன?

ஆமா நல்லா பேசு. நீ இருந்த இடம், ஒரு ஓரமா, மறைவா இருக்கு! நீ அங்க இருப்பன்னு எனக்கு ஜோசியமா தெரியும்? ஃபோன் பண்ணாலும் எடுக்கலை. டிரஸ்ஸு பேக், எல்லாம் இங்க இருக்கு! நான் என்னான்னு நினைக்கிறது? எங்கல்லாம் தேடுறது? ஏண்டி, இப்படி தவிக்க விடுற மனுஷனை?

நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஃபோன் சைலண்ட் மோடில் போட்டிருப்பேன். இன்னமும் என் உதடுகளில் புன்னகை!

சரி சொல்லு! எதுக்கு என்னைத் தேடுன? என்ன விஷயம்!

அவனிடம் மெல்லிய தடுமாற்றம்! விஷயம்லாம் இல்லை. சும்மாதான் தேடுனேன்!

இப்பொழுது என் முகத்தில் ஆச்சரியம்.

விஷயமில்லாமியா இவ்ளோ கோவம்? எங்க போயிருக்கப் போறேன்? கொஞ்ச நேரத்துல வந்துடப் போரேன்! அதுக்கு எதுக்கு எங்கெங்கியோ தேடி அலையனும்? ம்ம்?

என் கேள்விக்கு அவனால் பதில் சொல்ல முடியவில்லை…

சொல்லு!

இல்லை… அது வந்து. கொஞ்சம் தடுமாறியவன், பின் சொன்னான், நான் உன்கிட்ட நடந்துகிட்ட முறைக்கு அப்புறம், கொஞ்ச நேரம் கழிச்சு பாத்தா, உன்னைக் காணோம். ஃபோன் பண்ணா எடுக்க மாட்டேங்குற!

சரி, வந்துடுவன்னு பாத்தா, இருட்டாகிட்டே இருக்கு, ஆனாலும் உன்னைக் காணோம்! நான் என்னான்னு நினைக்கிறது?

நீ கோவிச்சிகிட்டு எங்கியாவது போயிட்டியா? எங்க இருக்க? கையில காசு இருக்கா? எல்லாத்துக்கும் மேல இந்த இருட்டுல நீ எங்கியாவுது மாட்டிகிட்டன்னா? உனக்கு வேற குளிர் தாங்காது! ஸ்வெட்டர் எடுத்துகிட்டியா என்னான்னு கூடத் தெரியலை. தவிர, நான் பண்ணதுக்கு, நீ ரொம்ப வருந்தி, எந்த மாதிரி மனநிலையில இருக்கன்னு கூட தெரியலை!

1 Comment

  1. Sejal mail pannu valavanmadhan gmail yen mail

Comments are closed.