வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் ஒன்பது 56

என் மனம் குழப்பத்திலும், வருத்தத்திலும் இருந்தது! இதையா நான் எதிர்பார்த்தேன். என் மனதுக்கு பிடித்தவள், ஏறக்குறைய நிர்வாணமாக என் முன்னே இருக்கிறாள், ஆனால் அதையும் விட, அவள் அழுகை என்னை பாதிக்கிறதே?!

இவளது வலியில் நான் சந்தோஷத்தை அடைந்து விட முடியுமா? இவள் செய்தது தவறு என்றால், நான் இப்போது செய்வது?! நான் கொஞ்சம் மாறிவிட்டேன் என்று நினைத்துக் கொண்டது எல்லாம் பொய்யா? இன்னமும் அதே முரடனாக, மற்றவர்களைப் புரிந்து கொள்ளாதவனாகத்தான் இருக்கிறேனா?

என்னுடைய கோபம் இருந்த இடம் தெரியவில்லை! எப்படியெல்லாம் இவளை காதலிக்க நினைத்திருந்தேன்! கடைசியில், நான் எப்படி இப்படி இவளை?

பின் முடிவு செய்தேன்!

லாவண்யா… என்று அவளை நெருங்கினேன்.

இன்னும் அழுது கொண்டிருந்தாள்!

நான் டேபிளில் இருந்த அவளது நைட் டிரஸ்ஸை எடுத்து அவள் கையில் கொடுத்தேன். பின் திரும்பி நின்றேன். முதல்ல இதைப் போடு!

நீ வெளிய போ!

முதல்ல போடு! நாந்தான் திரும்பியிருக்கேன்ல?

அவள் அணிந்தாள். திரும்பி அவளைப் பார்த்தேன். அவள் கண்களில் இன்னும் கண்ணீர். என் மனது வலித்தது!

அழாத லாவண்யா ப்ளீஸ்!

நான் சாரில்லாம் சொல்லப் போறதில்லை! உன்கிட்ட நடந்துகிட்ட முறை தப்பா இருக்கலாம். ஆனா, இப்பியும் என் வருத்தம், இதனால கஷ்டப்படுறியேன்னு மட்டுந்தான். மத்தபடி, நான் செய்யக் கூடாத எதையும் செஞ்சதால்லாம் நான் நினைக்கலை!

இப்பச் சொல்றேன் கேட்டுக்க. இனி நீ என் சொந்தம்! இனியும் கண்டவன்கிட்ட உன்னை இழக்க நான் தயாரா இல்ல. அதுக்கு எதிரா யார் வந்தாலும் சரி! நீயே வந்தாலும் சரி! உனக்கு என் மேல லவ் இல்லைங்கிற கதையை இனியும் நான் நம்பத் தயாரா இல்லை! என்னை விட்டு இன்னொருத்தனைக் கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைச்ச, நான் மனுஷனா இருக்க மாட்டேன்…..

உனக்கு என் மேல, என்னமோ கோபம்னு மட்டும் புரியுது! ஆனா அது என்ன, நான் என்ன தப்பு பண்ணேன்னு நெஜமா எனக்குத் தெரியல. தெரிஞ்சு உனக்கு எந்த கஷ்டத்தையும் கொடுத்திருக்க மாட்டேன்னு உனக்கே தெரியும்.

எவ்ளோ கோவம் இருந்தாலும், என் கூட இருந்து, என்னை எவ்ளோ வேணா கஷ்டப்படுத்திக்கோ! ஆனா, இப்படி தள்ளி நின்னு, நீயும் கஷ்டப்பட்டு, என்னையும் கஷ்டப்படுத்தாத!

சொல்லிக் கொண்டிருந்தவன், அவளை இழுத்து வேகமாக நெற்றியில் முத்தமிட்டேன். பின் அவளை விட்டு விலகினேன்! திரும்பி வேகமாகச் சென்றவன், இடையில் நின்றேன்! அவளைப் பார்க்காமலேயே சொன்னேன்.

எனக்கு யாரும் இல்லைங்கிறப்ப கூட இவ்ளோ ஃபீல் பண்ணலைடி! ஆனா, நீ எனக்கு இல்லங்கிறப்பதான், அதைத் தாங்க முடியலை!

கேவலம், ஒரு குடிகாரனைக் கட்டிக்கிட்டப்ப, என்கிட்ட வரலை. இப்ப, ஒரு கிழவனுக்கு ரெண்டாந்தாரமா போக ரெடியா இருக்க. ஆனா, நான் மட்டும் வேண்டாம் இல்ல? அதுக்கு கூட நான் தகுதியில்லைன்னு சொல்ற இல்ல? நீ என்னை எப்படி வேணா நினைச்சிக்கோ! ஆனா, இனி, நீ என் சொந்தம்! அது நீ விரும்புனாலியும் சரி, விரும்பாட்டியும் சரி! அதை, இனி விட்டுக் கொடுக்க முடியாது.

மனசு வலிக்குதுடி!

நான் நல்லவந்தான். ஆனா ஒரு கையாலாகதவனா இருந்துதான், நான் நல்லவன்னு ப்ரூவ் பண்ணனும்னா, நான் கெட்டவனாகவே இருந்துட்டுப் போறேன்!

இனி கதை, லாவண்யாவின் பார்வையில்.

மெல்ல பெரு மூச்சு விட்டு எழுந்தேன். நான் கொஞ்சம் யோசிக்க வேண்டும்! தனியாக! அதனால் வீட்டின் வெளியே வந்து, வீட்டுக்கு ஒரு ஓரமாக போட்டிருந்த சேரில் வந்து அமர்ந்தேன்.

அன்று காலை, மதனின் அக்கா என்னிடம் ஃபோன் பண்ணி, ஒரு ப்ராமிஸ் கேட்டாள். அது, ஒரு வேளை மதன் வந்து, நீ இதைப் பண்ணியான்னு ஏதாச்சும் கேட்டா, ஆமாம்னு சொல்லனும் என்று. எதைச் சொன்னாலும் என்று சொல்லியிருந்தாள்.

இப்படி ஒரு கதை ஏன் கட்டினாள் என்று எனக்கு புரியாவிட்டாலும், அவளிடம் ஓகே சொல்லியிருந்த ஒற்றைக் காரணத்துக்காகத்தான் நானும் மதன் கேட்டதற்கு ஆமாம் என்று சொல்லியிருந்தேன். ஆனால் அதன் விளைவு…..?

திரும்பிப் பார்க்காமலேயே என்னிடம் சொல்லி விட்டுச் சென்றவனைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன். அவன் வார்த்தைகளும், அதிலிருந்த உண்மையும், வேதனையும் என்னை உலுக்கியிருந்தது. என்னையே நான் கடிந்து கொண்டேன்.

அவ்வளவு கல்மனதா எனக்கு?

1 Comment

  1. Sejal mail pannu valavanmadhan gmail yen mail

Comments are closed.