28 வயது அழகுப் புயல் – பாகம் 29 184

கான்பரன்ஸ் ஹாலுக்குள்… காமினிதான் சென்டர் ஆப் அட்ராக்ஷன் ஆக இருந்தாள். நிறைய பேர் அவளோடு வலிய போய் கைகுலுக்கி பேசிக்கொண்டிருந்தனர். நிறைய பேர் அவளோடு பேச ஆசைப்பட்டு… ஈகோவால் தவித்துக்கொண்டிருந்தனர். அவள் நிம்ரிந்தால், திரும்பினால், எழுந்து நடந்தால்…. அனைவரின் பார்வையும் அவள்மேல் விழுந்தது. எத்தனை பொண்ணுங்க இங்க இருந்தாலும், காமினி மேம்க்கு இருக்கற க்ரேஸ் தனிதான்… என்று பெருமிதத்தோடு சீனு நின்றுகொண்டிருந்தான்.

சீனு எதிர்பார்த்துக் காத்திருந்த presentation moment வந்தது. அவன் அவளை கண்கொட்டாமல் ரசித்துக்கொண்டிருந்தான். காமினி க்ரே கலரில் ஆபிஸ் கோட் மற்றும் ஸ்கர்ட் அணிந்திருந்தாள். செம அழகாக ஸ்டைலாக இருந்தாள். அவளுக்கு கைதட்டல் அதிகமாகவே இருந்தது.

கான்பரன்ஸ் முடிந்து நடந்து வரும்போது, அவர்களில் சிலர் அவளோடு ஒட்டிக்கொள்ள… சீனு தவிப்பதை அவள் ரசித்தாள். அதில் ஒருவன் லிப்ட் கதவை அவளுக்காக உடைத்துவிடுவதுபோல் ஷோ காட்டிக்கொண்டிருக்க… இவனுக்கு பொறாமையாக இருந்தது. லிப்டுக்குள் காமினி இவனோடு நின்றுகொள்ள… அவனுக்குப் பெருமையாக இருந்தது.

காரிடாரில் நடந்துபோகும்போதுதான் தனிமை கிடைத்தது.

ரொம்ப சூப்பரா present பண்ணீங்க மேம். – கண்கள் விரிய… சொன்னான் சீனு.

இந்த ட்ரெஸ் எப்படியிருந்ததுடா. ஒண்ணுமே சொல்லல?

அள்ளுது மேம். அந்த ஹால்ல உங்களை அடிச்சிக்க ஆளே இல்ல.

காமினி மெலிதாக சிரித்தாள். அவளுக்கு அவனோடு பேசிக்கொண்டு நடப்பது பிடித்திருந்தது. பரபரப்பு, கேள்விகள், பதில்கள், ஆர்டர்கள். லாபம், நஷ்டம் எல்லாம் மறந்து ரிலாக்ஸாக இருக்க ஆசைப்பட்டாள்.

சும்மா சொல்லாத

ஹாலிவுட் ஹீரோயின் மாதிரி இருந்தீங்க.

டேய் ஏதாவது நம்புற மாதிரி சொல்லு

VTV தெலுகு ரீமேக்ல கடைசில சமந்தா நடந்து வருவாங்கல்ல… அதைவிட அழகா இருந்தீங்க

காமினிக்கு சந்தோஷமாக இருந்தது. எத்தனையோபேர் க்யூட்டா இருக்கீங்க என்று சொல்லிவிட்டார்கள். இவன் சொல்வதுதான் பூரிப்படைய வைக்கிறது.

7 Comments

  1. Gud story bro update next part soon

  2. Next please Quikr podunga

  3. ஹூம்… கண்கெட்டபின் சூர்யநமஸ்காரம்… தனக்கு பின் ஒரு தங்கையிருக்கிறாள்… அவளுக்கும் திருமணம் நடைபெற வேண்டும் என்பது கூடவா மறக்கடிக்கும்!!!.

    சீனு காமினியை இன்னும் முமுமையாக விளையாட விட்டிருக்கலாம்… கசக்கி பிழிந்திருந்தால் , காமினியும் சீனுவிடம் சரணாகதி அடைந்துருப்பாள்.. பார்க்கலாம்..

  4. கதை டெய்லி காலைல ஆறு மணிக்கு போடுங்க ப்ளீஸ் அண்ட் வெஸ்ட் இன்று காலையில் போட்ட மாதிரி டெய்லியும் போடுங்கள் கதையை supr

  5. அடுத்த கதை சீக்கிரம் போடுங்க ப்ளீஸ் என்று போஸ்ட் 30

Comments are closed.