28 வயது அழகுப் புயல் – பாகம் 29 184

கட்டிக்கப்போற பொண்ணு மடில படுக்கிறது குத்தமா தங்கச்சி?

பார்த்து பார்த்து. கல்யாண தேதியை மறந்துடப் போறீங்க. சீக்கிரமா வந்து சேருங்க

போனை அம்மாவிடம் கொடுத்துவிட்டு, டைனிங்க் டேபிளுக்கு வந்தாள். அப்போதுதான் கதிர் அங்கே உட்கார்ந்திருப்பதையே கவனித்தாள். அவன் அப்போதுதான் முகத்தை கழுவிவிட்டு மோகனுக்கு எதிரே வந்து உட்கார்ந்திருந்தான். இவளைப் பார்த்ததும் எழுந்து நின்றான்.

உட்காருப்பா… ஏன் எழுந்து நிக்குற? அவளுக்கும் உன் வயசுதான்… என்று கதிரை அதட்டினார் மோகன். அவன் உட்கார்ந்துவிட்டு அவளைப்பார்த்து தயக்கத்தோடு… லேசாக சிரிப்பை வரவழைத்துக்கொண்டு கேட்டான்.

நல்லாயிருக்கீங்களா நிஷா?

ம்.. நல்லாயிருக்கேன். நீங்க எப்போ வந்தீங்க? ஊர்ல அத்தை மாமால்லாம் எப்படி இருக்காங்க?

கேட்டுக்கொண்டே நிஷாவும் அவர்களோடு ஒரு டேபிளில் உட்கார்ந்தாள். பத்மாவதி வந்து இட்லி வைத்தாள். நிஷா எதிர்பார்த்ததுபோலவே அவள் முகம் கடுகடு என்றிருந்தது. நிஷாவுக்கு அது பிடிக்கவில்லை. எழுந்து, நானே பரிமாறுறேன் என்று அவளிடம் முறைப்பாக சொல்லிவிட்டு சட்னியையும் சாம்பாரையும் தானே கொண்டுவந்து இருவருக்கும் ஊற்றினாள்.

சாப்பிடுங்க கதிர்… தூரத்திலிருந்து வந்திருக்கீங்க. சொல்லிட்டு வந்திருக்கலாம்ல. உங்களுக்கு சாப்பிடுறதுக்கு ஸ்பெஷலா ஏதாவது ரெடிபண்ணி வச்சிருப்பேன்ல? தங்குறதுக்கும் ரூமை செட் பண்ணியிருப்பேன்ல

ஐயோ அதுலாம் வேணாம். நான் இப்போ கிளம்பிடுவேன். அம்மாதான் இந்த கோழியையும், ஆட்டுக்கறியையும் கொண்டு போய் கொடுத்துட்டு வந்திருய்யா மாமா விரும்பி சாப்பிடுவார்னு சொல்லிட்டே இருந்தாங்க. நான் உடனே கிளம்பிடுவேன்

அவன் எனக்கு போன் பண்ணியிருக்கான். நான்தான் யாரோன்னு எடுக்காம விட்டுட்டேன் என்று நிஷாவிடம் சொல்லிவிட்டு, ஸாரி கதிர்… என்றார் மோகன். அவள் அவரை முறைத்தாள். பின் கதிரிடம் கண்டிப்பாக சொன்னாள்.

7 Comments

  1. Gud story bro update next part soon

  2. Next please Quikr podunga

  3. ஹூம்… கண்கெட்டபின் சூர்யநமஸ்காரம்… தனக்கு பின் ஒரு தங்கையிருக்கிறாள்… அவளுக்கும் திருமணம் நடைபெற வேண்டும் என்பது கூடவா மறக்கடிக்கும்!!!.

    சீனு காமினியை இன்னும் முமுமையாக விளையாட விட்டிருக்கலாம்… கசக்கி பிழிந்திருந்தால் , காமினியும் சீனுவிடம் சரணாகதி அடைந்துருப்பாள்.. பார்க்கலாம்..

  4. கதை டெய்லி காலைல ஆறு மணிக்கு போடுங்க ப்ளீஸ் அண்ட் வெஸ்ட் இன்று காலையில் போட்ட மாதிரி டெய்லியும் போடுங்கள் கதையை supr

  5. அடுத்த கதை சீக்கிரம் போடுங்க ப்ளீஸ் என்று போஸ்ட் 30

Comments are closed.