28 வயது அழகுப் புயல் – பாகம் 26 209

உங்களை இப்படி தனியா விட்டுட்டுப் போனா அவரே கோவிச்சுக்குவார் மேம்

ஏய்.. நான் தனியால்லாம் இல்ல. யாருக்கும் சிரமம் கொடுக்கவேண்டாம்னு சொல்லல. அவர்தான் இப்படி கண்டிப்பா சொல்லிட்டார்.

சரி உங்களுக்கு ஏதாவது வாங்கிட்டு வர்றேன். – அவளைக் கேட்காமலேயே உள்ளே போய் பிளாஸ்க்கை எடுத்துக்கொண்டு போனான். அவன் ஸ்டைலாக பேண்ட் பாக்கெட்டுக்குள் ஒரு கையை விட்டுக்கொண்டு, வேகமாக நடக்க…. காமினிக்கு அவனது செயல்கள் ஆச்சரியமாக இருந்தது. சிறிது நேரத்தில் டீ, ஸ்நாக்ஸோடு வந்தான். விக்னேஷ்க்கு சாத்துக்குடி ஜூஸ்.

அவள் பட்டும் படாமலும், சத்தமில்லாமல் குடிப்பதை ரசித்தான். எனக்கு ப்ரோமோஷன் கொடுக்கப்போகிறாள் போல. நன்றியுள்ளவள். இவளுக்கு நன்றியோடு நடந்துகொள்வதில் தவறில்லை.

நீங்க வேணும்னா வீட்டுக்குப் போய் குழந்தையைப் பாத்துக்கோங்க மேம். நான் ஸாரை பாத்துக்கறேன்.

இல்ல. இருக்கட்டும் சீனிவாசன்

அட ஏன் தயங்குறீங்க. ஆபிஸ்ல மாதிரியே இங்கயும் எங்கிட்ட நீங்க உரிமையா வேலை வாங்கணும். சரியா?

அவன் கண்டிப்பாகச் சொல்ல… காமினி எதுவும் பேசாமல் இருந்தாள். வீட்டுக்குப் போய்ட்டு வந்தால் நல்லாயிருக்கும்தான். ரேவதி வேறு இல்லை. ஹைதராபாத்துக்கு குடி போய் விட்டாள். விக்னேஷின் நண்பர்களுக்கு தகவல் கொடுக்கவில்லை. இப்போது சீனுவின் உதவி தேவைதான்.

யோசிக்காதீங்க மேம். கிளம்புங்க. தமிழரசி அழுதிட்டிருப்பா. எழுந்திருங்க

விக்னேஷ்க்கு அவனைப் பிடித்துவிட்டது. விட்டா காமினியை தூக்கிட்டுப் போய் கார்ல உட்கார வச்சிருவான் போலிருக்கே..

சரி சரி கிளம்புறேன். நீ அவர் பக்கத்துலேயே இருந்துக்கோ. அப்புறம்… வார்த்தைக்கு வார்த்தை மேம் மேம்னு சொல்லி இம்சை பண்ணாதே

நீங்க என்னை எப்பவும் சீனுன்னு கூப்பிடறதா இருந்தா இதை ஒத்துக்கறேன்

அவள் பார்க்கிங்கை நோக்கி நடக்க… இவன் அவள்கூடவே வந்தான்.

நாளைக்கு நீ டைமுக்கு ஆபிஸ் போகணும். ஞாபகம் வச்சுக்கோ

டைமுக்கு ஆபிஸ் போனா உங்ககிட்ட திட்டுவாங்க முடியாதே

உதை வாங்குவ

அவள் ரிமோட் கீயால் காரை ஆன் பண்ண… இவன் ஓடிப்போய் கதவை திறந்துவிட்டான். அவள் உள்ளே உட்கார்ந்ததும், பை சொல்லிவிட்டு வேகமாக ஹாஸ்பிடலுக்குள் போனான். காமினி மிர்ரரில் அவனைப் பார்த்துக்கொண்டே காரை கிளம்பினாள். ஏனோ அவளுக்கு காலேஜ் ஞாபகங்கள் வந்தன. பசங்க இப்படித்தான் சுத்தி சுத்தி வருவானுங்க. கேட்காமலேயே உதவி செய்வானுங்க. அவர்களிடம் கெட்ட எண்ணம் எதுவும் இருந்ததில்லை. ஆனால் அவள்கூடவே இருக்க ஆசைப்படுவார்கள்.

காமினி திரும்ப வரும்போது வந்தனாவோடும் சுந்தரோடும் வந்தாள். இவன் அவர்கள் எல்லோருக்கும் குட்நைட் சொல்லிவிட்டு சந்தோசமாக வீட்டுக்கு வந்து சேர்ந்தான். நிஷாவுக்கு போன் போட்டு நடந்ததை எல்லாம் சொல்லிவிட்டு கடைசியில் கேட்டான்.

நிஷா உன்னோட அப்பா அம்மா எல்லோரும் சகஜமாகிட்டாங்களா?

ரொம்ப கஷ்டப்பட்டுதான் அவங்களை கன்வின்ஸ் பண்ணியிருக்கேன் சீனு. இப்போதான் வீட்டுல பழையமாதிரி சந்தோசம் கொஞ்சம் கொஞ்சமா வர ஆரம்பிச்சிருக்கு.

ராஜ்க்கு நம்ம விஷயம் தெரிஞ்சா என்னாகுமோன்னு பயமா இருக்குடி

எனக்கும்தான். நேத்துகூட கண்ணன்கிட்ட பேசியிருக்கான். அவர் பிடிகொடுத்து பேசலையாம். ஆனா இவன் தொல்லை தாங்காம அவர் என்னைக்கு நம்மளைப் பற்றி சொல்லப்போறாரோ தெரியல. அதுக்குள்ள நானே சொல்லிடனும். நீ காமினிக்கு ஹெல்ப் பண்ணது சூப்பர். இப்படியே மெயின்டைன் பண்ணு. நான் தக்க சமயம் பார்த்து இங்க பேசுறேன்.

9 Comments

  1. அதிக காமம் இல்லாமல் கதை நன்றாகவே போகிறது இப்படியே கண்டின்யு பண்ணுங்க நெக்ஸ்ட் பார்ட்

  2. 27 Next please Quikr podunga

  3. Wow… what a nice moving story.. congrats to Author. He is a very good story writer.. unbelievable about his thoughts and style..

  4. கதாசிரியரின் கற்பனை திறன் அபாரம்… காமத்தை அழகாகவும், ரசிக்கும்படியும் கொண்டு செல்கிறார்.. அவரது நடையழகு வசியபடுத்துகிறது… வாழ்த்துக்கள்…
    என்ன ஒரு சங்கடமெனில், நிஷாவை குடும்ப குத்துவிளக்காக அறிமுகப்படுத்தி இருந்தால் கூட மனது சங்கடபடாது.. பத்தினிப்பெண்ணாக அறிமுகப்படுத்தி, அவள் ஸ்லட்டாக மாறினால் என்பதை ஏற்க மனம் படாத பாடு படுகிறது.. இது காமக்கதைதான்.. அபாரமாக கதை சென்று கொண்டிருக்கிறது… காமினி… காமி நீ…

  5. 27 அடுத்த கதை போடுங்க ப்ளீஸ் ரிக்வெஸ்ட்

  6. Bro story nalla irukku. Next part update soon

  7. அடுத்த கதை சீக்கிரம் போடுங்க ப்ளீஸ் என் ரிக்வெஸ்ட் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள்

  8. அடுத்த கதை சீக்கிரம் போடுங்க ப்ளீஸ்

Comments are closed.