கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 6 21

“இந்த போட்டோவை எடுத்ததே செல்வாதானாம்பா, நல்லா பேக்ரவுண்ட் பாத்து எடுத்திருக்கான்ல்ல. படத்துல ஒரு நல்ல டெப்த் இருக்கு” தன் தாயின் முகத்தைப் பார்க்காமல், மீனா தலையை குனிந்து கொண்டு தன் செல்லில் செல்வாவை கூப்பிட்டாள்.

“சொல்லுடி, நான் தான் பேசறேன்”, செல்வா எரிந்து விழுந்தான்.
“அப்பா உன்னை கூப்பிடாறார், வீட்டுல உன் விஷயமா ஒரே ரகளை நடக்குது, ஏண்டா உன் பக்கத்துல சுகன்யாவும் இருக்காளா, போனை அவகிட்ட குடுடா ஒரு ஹாய் சொல்றேன்?”
“என் பக்கத்துல எவளும் இல்ல, வீட்டுக்கு வெளியிலதான் பைக்கை பார்க் பண்ணிகிட்டிருக்கேன்; உள்ளே வரேன்” களையிழந்து, கருத்த முகத்துடன், உர்றென்று வீட்டுக்குள் நுழைந்தான் செல்வா.
“டேய் செல்வா, இந்த வீட்டுல நீங்கள்ளாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணா கூட்டா சதி பண்ணிகிட்டு இருக்கீங்களா? என்னை என்னா கேனச்சின்னு நெனைச்சுக்கிட்டு இருக்கியா நீ? ராத்திரி நீ என்னடா சொன்னே எங்கிட்ட; அந்த ஜானகியை ஒரு தரம் இன்னைக்குப் தனியா பாத்து பேசிட்டு முடிவு சொல்றேன்னு சொன்னியா இல்லியா? காலங்காத்தால அந்த ஊர் பேர் தெரியாத மேனா மிணுக்கியோட போட்டோவை மீனாகிட்ட குடுத்து நேரம் பாத்து உங்கப்பா கிட்ட காட்ட சொன்னியா, மீனாவை தூண்டிவிட்டுட்டு நீ போய் அவ பின்னால சுத்திகிட்டு இருக்கியா? அவ போட்டோவை பாத்துட்டு இவளும் உங்கப்பாரும் வாயெல்லாம் பல்லா பூரிச்சுப் போறாங்க? இங்க என்னடா நடக்குது?” செல்வா ஹாலில் நுழைந்தவுடன் மல்லிகா கூவத்தொடங்கினாள்.
“எம்மா எனக்கு கல்யாணமும் வேணாம் ஒரு எழவும் வேணாம். நான் உன்னை கேட்டனா, எனக்கு கல்யாணம் பண்ணி வெய்யுன்னு? என் உயிரை ஏன் எடுக்கறே நீ? என்னை நிம்மதியா இருக்கவிடு கொஞ்ச நாளைக்கு. இன்னொரு தரம் என் கல்யாணத்தைப் பத்தி பேசி பாரு, நான் இந்த வீட்டு உள்ளவே கால் வெக்க மாட்டேன்” செல்வாவும் கோபத்தில் என்ன பேசுகிறோம் என உணராமல் கத்தினான். சுகன்யா சற்று முன் அவனை பிடித்து உலுக்கிய உலுக்கலாலும், உலுக்கியப்பின் உன் உறவே எனக்கு வேண்டாம் என நிர்த்தாட்சண்யாமக அவனை உதறித் தள்ளிவிட்டு, அவன் பதிலுக்கும் காத்திராமல் திரும்பி போனதாலும், போனவளின் மேல் எழுந்த மொத்த கோபத்தையும் யாரிடம் காட்டுவது என்று தெரியாமல் தன் அம்மாவின் மேல் திருப்பினான் செல்வா.
“டேய் உங்க எல்லாருக்கும், ஊருக்கு இளைச்சவன் புள்ளையார் கோயில் ஆண்டின்னு, இந்த வீட்டுல நான் ஒருத்திதான் கிடைச்சனா? அந்த எடுபட்ட சிறுக்கி உனக்கு ஏதாவது வேப்பிலை கீப்பலை அடிச்சு அனுப்பினாளா? இங்க வந்து எங்கிட்ட குதிக்கறே?”
“அம்மா நான் தான் சொல்றனே, எல்லாம் உன்னால வந்த வினைன்னு; நீ சொன்னேன்னு சுகன்யா கிட்ட அவங்க அப்பாவை பத்தி நான் கேக்க, என்னை காதலிக்கறதுக்கு முன்னாடி, எங்கப்பன் யாருன்னு கேட்டுட்டா காதலிச்சே? எங்கப்பனை பத்தி பேசினா, நீயும் வேணாம், உன் கூட எனக்கு கல்யாணமும் வேணாம்ன்னு, மூஞ்சியில அடிக்காத குறையா புடவையை தட்டிகிட்டு எழுந்து போயிட்டா; அவ எழுந்து போனதும் எனக்கு மனசே வெறிச்சுன்னு ஆயிப்போச்சும்மா; நானே வெறுத்துப் போய் வந்திருக்கேன். அவளை சிறுக்கி கிறுக்கின்னு தப்பா பேசாதம்மா, அவ ரொம்ப நல்லப் பொண்ணும்மா” அவன் தலை நிமிராமல் பேசினான். நடராஜன் அவன் பேசுவதை கவனமாக கேட்டுக்கொண்டிருந்தார். என்ன சொல்றான் இவன். என்ன பிரச்சனை இவங்களுக்குள்ள?
“அவளே உன்னை உதறிட்டு போயிட்டாளா? நல்லாதா போச்சு, விட்டுது சனியன்னு, தலையை முழுவிட்டு போ. அடுத்த முகூர்த்தத்துல ராணி மாதிரி இருக்கற அந்த மகராசி ஜானகியை உனக்கு கட்டி வெக்கிறேன்.” மல்லிகா சற்று நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
“அப்படில்லாம் என்னால சுகன்யாவை சட்டுன்னு கை கழுவி விட்டுடமுடியாதும்மா. அம்மா, அந்தப் பொண்ணும், அவங்க குடும்பமும், அவ அப்பனால வாழ்க்கையில ரொம்ப அடிபட்டு போயிருக்காங்கம்மா. சுகன்யாவோட அம்மா ரொம்ப நொந்து போயிருக்காங்களாம். வாழ்ந்து கெட்ட குடும்பம்மா அவங்க குடும்பம். சுகன்யா கதையை மொத்தமா நீ கேட்டின்னா, அவ மேல உனக்கு இருக்கற கோபம் போய், நீயே அய்யோன்னு அவளைப் பாத்து பரிதாப படுவே; சுகன்யா ரொம்ப நல்லவம்மா. அவளை கல்யாணம் பண்ணிக்கறேன்னு நான் வாக்கு குடுத்து இருக்கம்மா; நான் அவ மேல உயிரையே வெச்சிருக்கம்மா. என் நிலைமையையும் கொஞ்சம் புரிஞ்சுக்கம்மா.” விட்டால் அவன் அழுதுவிடுவான் போலிருந்தது.
“என்னடா, மந்திரம் சொல்லி கண்ணுல மை வுட்டுட்டாளா உனக்கு அவ?
“செய் வினை” ஏதாவது வெச்சுட்டாளா? நல்லா தானடா காலையில எழுந்து போனே? நல்ல குடும்பத்து பையன், பாக்க வாட்ட சாட்டமா இருக்கான், செலவு கிலவு இல்லாம ஃப்ரியா கிடைப்பானான்னு, பொண்ணுங்க உன்னைப்பாத்து சிரிக்கத்தாண்டா செய்வாளுங்க; ஆஃபீசுல உக்காரும் போது எழுந்திருக்கும் போது லேசா உரசித்தான் பாப்பாளுங்க. ஒரு லிப்ட் குடுன்னு உன் பைக்ல ஏறி உன் முதுகுல மார் உரச உக்காருவாளுங்க. நாமதான் ஜாக்கிரதையா இருக்கணும். இப்பல்லாம் பொண்ணுங்களை வளக்கறது சுலபம்; ஆனா ஆம்பளை புள்ளையை பெத்து வளக்கறது கஷ்டமாப் போச்சு; என்னாடி உலகம் இது?