கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 6 21

புகையை ஆழமாக நெஞ்சு முழுவதுமாக இழுத்து வெளியில் நிதானமாக விட்டவர், அடுத்து என்ன செய்வது என யோசிக்க ஆரம்பித்தார். சுந்தரி எழுந்து கட்டிலில் உட்க்கார்ந்திருந்த தன் மகளின் பக்கத்தில் உட்கார்ந்து தன் மடியில் அவளைச் சாய்த்துக்கொண்டாள். அவள் முகத்தை ஆசையுடன் வருடி குனிந்து அன்று தான் அவள் பிறந்தது போல் சுகன்யாவை அள்ளி எடுத்து ஒரு குழந்தையை முத்தமிடுவது போல் முத்தமிட்டாள். நாளைக்கு ஞாயித்துக்கிழமை உன்னை சுத்தி போடணும்டி, பெத்தவ கண்ணே குழந்தைங்களுக்கு ஆவாதுன்னு சொல்லுவாங்க. தன் கைகளால் மீண்டும் ஒரு முறை அவள் முகத்தை வருடி தன் விரல்களை நெட்டி முறித்தாள்.
“அம்மா என் மேல உனக்கு இவ்வளவு ஆசையா?”
“என்னாடி கேக்கற நீ, என் இதயம் லப் டப் ன்னு அடிக்கலடி, அது சுகன்யா சுகன்யான்னுதான் அடிக்குதுடி” சுந்தரியின் குரல் தழுதழுத்தது.
“சுகா இந்த மாதிரி மெல்லிசா இருக்கற நைட்டியை இனிமே போட்டுக்காதடி, உன் முழு உடம்பும் அப்படியே படம் புடிச்ச மாதிரி வெளிய தெரியுது, கீழ் வீட்டுல ரெண்டு ஆம்பளைங்க இருக்காங்க, ஆம்பளைங்க மனசு எப்பவும் ஒரு மாதிரி இருக்காதுடி கண்ணு … இதெல்லாம் உனக்கே புரியணும்டா தங்கம்” சுந்தரி தன் பெண்ணின் காதில் முணுமுணுத்தாள்.
“சரிம்மா”
“அம்மாவும் பொண்ணும் ஒருத்தரை ஒருத்தர் கொஞ்சினது போதும்; என்னம்மா சுகா, அந்த பையனை நீ கூப்பிடறியா; இல்லை நான் கூப்பிட்டு பேசட்டுமா?”
“மாமா, செல்வா கிட்ட நீங்களே பேசுங்க; இன்னைக்கு நான் அவன் கிட்ட சண்டை போட்டுட்டு வந்ததும், செல்வாவோட தங்கை மீனா, எங்கிட்ட பேசினா; அவங்க வீட்டுல செல்வாவுக்கும் அவங்க அம்மாவுக்குமிடையிலே ஒரே ரகளைன்னு சொன்னா. எங்களுக்குள்ள நடந்ததை அவன் அவங்க வீட்டுல போய் சொல்லி இருக்கான். காலையில நான் அவன் கிட்ட கோபப்பட்டேன்; அப்புறம் அவங்க அம்மா கோபபட்டு இருக்காங்க; மீனா கிட்டவும் நான் கொஞ்சம் வேகமாக அதிர்ந்து பேசிட்டேன். நிஜமாவே எனக்கு அவன் கிட்ட பேச கொஞ்சம் தயக்கமா இருக்கு; ப்ளீஸ் நீங்களே பேசுங்க மாமா” அவள் தலை நிமிராமல் பேசினாள். ***
“ஹலோ,”
“ஹலோ,”
“ நீங்க செல்வா தானே பேசறீங்க?”
“ஆமாம், நீங்க யாருன்னு தெரியலியே?”
“வணக்கம் தம்பி, என்னை உங்களுக்கு தெரியாது. உங்களைப் பத்தி எனக்குத் தெரியும். என் பேரு ரகுராமன்; நான் சுகன்யாவோட தாய் மாமா பேசறேன்; உங்களை நேர்ல பாத்து பேசணும்ன்னு சென்னைக்கு வந்திருக்கேன்; நாளைக்கு நீங்க ஃப்ரீன்னா நாம ஒரு பத்து நிமிஷம் சந்திச்சு பேசலாம். … அவர் மெதுவாக இழுத்தார்.”
“வணக்கம், நீங்க சொல்றதெல்லாம் சரிங்க; ஆனா எனக்கு சுகன்யான்னு யாரையும் தெரியாதுங்களே?”
“அப்படியா தம்பி! ரொம்ப நல்லது … தம்பி ஒரு நிமிஷம் நான் சொல்றதை கொஞ்சம் கவனமா கேளுங்க; இன்னைக்கு ராத்திரி பூரா நிதானமா நீங்க யோசனைப் பண்ணிப்பாருங்க, உங்களுக்கு சுகன்யா யாருன்னு ஞாபகம் வரல்லன்னா, என் நம்பர் உங்க செல்லுல பதிவாகியிருக்கும், அந்த நம்பருக்கு, நீங்க தயவு பண்ணி நாளைக்கு காலையில ஒரு மிஸ் கால் குடுங்க; நான் சுகன்யாவோட அடுத்த அரை மணி நேரத்துல உங்க வீட்டுக்கு வரேன். நேர்ல அவளைப் பாத்தா உங்களுக்கு கண்டிப்பா ஞாபகம் வரும்ன்னு நினைக்கிறேன் … தம்பி எங்க பொண்ணு சகுந்தலையும் இல்லை; நீங்க துஷ்யந்த மகாராஜாவும் இல்லை … குட் நைட் தம்பி … நாளைக்கு பாக்கலாம்.” ரகு தன் முகத்தை துடைத்துக்கொண்டார்.