கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 6 21

“இந்த ஒரு செகண்ட், என் அப்பனை நினைச்சு என் வாழ்க்கையில முதல் தடவையா நான் கர்வப்படறேன். அவன் குடிகாரனா இருந்திருக்கலாம். என் அம்மாவை அடிச்சு துன்புறுத்தியிருக்கலாம். ஆனா கடைசிவரைக்கும், அவன் காதல் வாழ்க்கையில வந்த பிரச்சனைகளை தைரியமா எதிர்த்து நின்னு, அவங்க பெற்றோர்களை விட்டுட்டு வந்து, எங்க அம்மா கழுத்துல தாலியைக்கட்டி, ஆசையா ஒரு பிள்ளையையும் பெத்துக்கிட்டான்.” உங்களை மாதிரி ஒரு
“வழவழா கொழகொழ” ஆளை, நான் கெஞ்சி கூத்தாடி, நீங்க என்னைத் தொட்டுட்டீங்கன்ற ஒரு காரணத்துக்காக, உங்களை வற்புறுத்தி நான் கல்யாணம் பண்ணிக்கணுமான்னு உண்மையிலேயே இப்ப எனக்குத் தோணுது” ஒரு வினாடிக்குப்பின் இதை சொல்லி அவன் மனதை தெரிந்தே புண்படுத்தியிருக்க வேண்டாமோ என அவள் நினைத்தாள். நான் என்ன பொய்யா சொல்றேன்? இருக்கிற உண்மையைத்தானே சொல்லுகிறேன். அவள் முகம் இப்போது அமைதியாக இருந்தது. பின்தலையில் கையை கோர்த்துக்கொண்டு கண்ணை மூடி உட்க்கார்ந்திருந்த செல்வா, தன் கண்ணைத் திறந்தபோது, சுகன்யா, நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையுமாக நிதானமாக எதிர் திசையில் நடந்து கொண்டிருந்தாள்.

“எங்கடி போனான் உன் புள்ளை? ஆபீசுக்கு லீவைப் போட்டுட்டு நான் வீட்டுல மெனக்கெட்டு உக்காந்துகிட்டு இருக்கேன், நீ என்னமோ அவன் கிட்ட பேசி முடிவு எடுக்கணும்ன்னே?” நடராஜன் சலித்துக்கொண்டார்.
“அப்பா, செல்வா சுகன்யாவை பாக்கப் போயிருக்கான். இப்ப அவன் பீச்சுல அவ கிட்டத்தான் ஜொள்ளு விட்டுக்கிட்டு இருப்பான்; நீ சொன்னா அவனை நான் செல்லுல கூப்பிடறேன்” மீனா தன் அண்ணனை போட்டுக் குடுத்த குஷியில் சிரித்தாள்.
“நீ சும்மா கிடடி, வெட்டி பேச்சு பேசிகிட்டு” ஜானகியை எனக்கு புடிச்சிருக்குங்க, அவளுக்குன்னு ஒரு வீடு இருக்கு, சொத்தோட வர்றா, கை நிறையவும் சம்பாதிக்கறா, மூக்கும் முழியுமா சிவப்பா, லட்சணமா இருக்கா; என்ன … கொஞ்சம் குண்டாயிருக்கா, நல்லா பாலும் தயிருமா, வஞ்சனையில்லாமா சாப்பிட்டு வளந்து இருக்கா. கொஞ்ச நாள் ஜிம்முக்கு போய்ட்டு வந்தா, வில்லு மாதிரி ஆயிடமாட்டாளா? இந்த காலத்துல பசங்களும் கொழுக்கு மொழுக்குன்னு இருக்கற குட்டிங்களா பாத்துதானே நூல் வுடறானுங்க,
“நேத்து நாம பாத்தமே அந்த படத்துல அவ பேரு என்னாடி மீனா?” தன் பெண்ணைப் பார்த்தாள் மல்லிகா.
“யாரு ஹன்ஷிகாவை சொல்றியாமா” மீனா புன்னகைத்தாள்.

“உனக்கு ஜானகியை புடிச்சி ஆவப் போறது என்னாடி? உன் புள்ளைக்கு பிடிக்கணுமே, அவன் தானே அவ கூட குப்பை கொட்டப் போறவன். ஆனாலும் அவ கொஞ்சமில்லடி, நிறையவே குண்டாயிருக்காடி, சொத்து இருந்தா போதுமாடி” நடராஜன் அலுத்துக்கொண்டார்.
“அம்மா, செல்வாவுக்கு ஜானகியை விட அந்த சுகன்யா நல்ல பொருத்தமா இருப்பாம்மா, அவளும் தான் சம்பாதிக்கறா, அவளும் ஒரே பொண்ணுதானே அவ வீட்டுல, நீ நினைக்கற மாதிரி அவளுக்குன்னு ஏதோ கொஞ்சம் சொத்து பத்து இல்லாமலா இருக்கும்? அப்படியே சொத்தே இல்லன்னாலும் என்னம்மா, அண்ணன் அவளை ஆசைப்படறான். உன் புள்ளை சந்தோஷம்தான் உனக்கு முக்கியம்ங்கறே; நீ இன்னும் அவளை பாக்கவே இல்லையே, அவளையும் ஒரு தரம் பாத்துட்டு முடிவு பண்ணும்மா, எனக்கு அவளை ரொம்ப பிடிச்சிருக்கும்மா?
“மீனு, நீ அந்த பொண்ணை பாத்திருக்கியாம்மா?” நடராஜன் தன் புருவங்களை சுருக்கி தன் மகளை அன்புடன் பார்த்தார். நடராஜனுக்கும் ஜானகியை தன் பையனுக்கு கட்டிக்கொள்வதில் அவ்வளவாக விருப்பமில்லை.
“அப்பா, செல்வா காலையில சுகன்யாவோட ஃபுல் சைஸ் ஃபோட்டோவை எனக்கு காட்டினாம்பா, சும்மா சொல்லக்கூடாது; அண்ணன் ஆளு சூப்பரா இருக்கா; நீ இப்ப பாக்கணும்ன்னா சொல்லு காட்டறேன்.”
“ஏய் மீனா, நீ பொத்திகிட்டு கிடடி, பெரியவங்க பேசறப்ப குறுக்க குறுக்க பூந்து ரவுசு பண்றே? நீ என்னா அவனுக்கு வக்காலத்து வாங்கிக்கிட்டு திரியறே? என் புள்ளைக்கு எவளைக் கட்டணும்ன்னு எனக்குத் தெரியும்.” மல்லிகா பதறினாள்.
“எம்ம்மா, நீ உன் புள்ளை தலையில எவளை வேணா கட்டி வை; செல்வாவை நீ உன் அடிமையா ஆக்கி வெச்சிருக்க; இப்போதைக்கு அவன் உன் பேச்சைத் தட்டமாட்டான். ஆனா, எவ உனக்கு மருகளா வந்தாலும் அவ கையில நீ ஒரு பாடு படத்தான் போறே; எது எப்படியானாலும், என் கல்யாணத்தப்ப நீ குறுக்க பூந்து குட்டையை குழப்பக்கூடாது; எனக்கு புடிச்சவனைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்குவேன். ஆமாம், இப்பவே சொல்லிட்டேன்” அவள் டீபாயின் மேலிருந்த புத்தகத்தில் செருகியிருந்த சுகன்யாவின் படத்தை நடராஜனிடம் உருவிக் கொடுத்தாள்.