கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 6 21

“அப்ப தோணும் ஒண்ணுமில்லாதவளை கட்டிக்கிட்டு என்ன சுகத்தை கண்டோம்ன்னு?”
“சுகன்யாவுக்கு ஜானகியே மேலுன்னு உன் மனசு அலைபாயும், மனசு ஒருத்தியை இன்னொருத்தி கூட ஒப்பிட்டு பாக்கும்.” ஆம்பிளை மனசுக்கு எப்பவும் திருப்தி வராதுடா.
“யாரோ பத்துல ஒருத்தி ரெண்டு புள்ளை பெத்ததுக்கு அப்புறமும் பாக்கறதுக்கு சிக்குன்னு இருப்பா, நீ எவ கூட சுத்தறியோ அவளுக்கும் நான் சொன்ன இதே கதிதாண்டா; அவளுக்கும் உடம்பு தளர்ந்து போகும். அவளுக்கு அப்பன் இல்லை; அம்மா வாழ்க்கையில அடி பட்டு நொந்து போனவங்கறே; வாழ்ந்து கெட்ட குடும்பங்கறே; அவகிட்ட என்ன இருக்கும்; சொத்து இல்ல; சுற்றத்தார் யாரும் இல்ல; நான் சொல்ற ஜானகிக்கு எல்லாம் இருக்குடா; என் புள்ளை நல்லா இருக்கணும்ன்னு நான் நினைக்கறது தப்பா? சாவித்திரி தன் பொண்ணு நல்லா இருக்கணும்ன்னு நினைக்க கூடாதா? எங்க ரெண்டு பேரையும் நீங்க எல்லாரும் ஏண்டா தப்பா பாக்கறீங்க?”
“சந்தையில கத்திரிக்காய் இளசா இருந்தா யார் வேணா வெல கேக்கலாம்? சுகன்யா மட்டும்தான் விலை கேக்கணும்ன்னு அவசியம் இல்லை? சாவித்திரியும் வெல கேக்கலாம். யாருக்கு தேவையோ அவங்க விலை கேக்கலாம். விக்கறவன் தன் சரக்குக்கு யார் அதிகமா விலை குடுக்கறானோ அவனுக்குத்தான் விப்பான்? நீ என் புள்ளைடா? சாவித்திரி உனக்கு அதிகமா தறேங்கறா? நான் யாருக்குடா உன்னை குடுப்பேன்? நான் யார் வீட்டுலடா உனக்கு சம்பந்தம் பண்ணுவேன்? எங்க உனக்கு வரவு அதிகமோ, எங்க உனக்கு லாபம் அதிகமோ அங்கதாண்டா நான் போவேன். அங்கதாண்டா நான் சம்பந்தம் பண்ணுவேன். இதுல என்னடா தப்பு?” அவள் தன் தொண்டையை கணைத்துக்கொண்டாள்.
“உங்களை மாதிரில்லாம் நான் நெறைய படிச்சவ இல்ல. உங்கப்பாவை கட்டிகிட்டு, இந்த வீட்டுக்கு வந்ததுலேருந்து இந்த நாலு சுவத்துக்குள்ளத்தான் நான் முடங்கிக் கிடக்கிறேன். ஆரம்பத்துல உங்கப்பாவுக்கு நான் ரொம்ப ஒல்லியா இருக்கேன்னு மனசுக்குள்ள ஒரு ஆதங்கம். நாளாவ ஆவ அவரு கண்ணுக்கு நான்தாண்டா இன்னமும் அழகி. மனசால நாங்க ரெண்டு பேரும் ஒண்ணாயிட்டோம். மனசுல திருப்தி வந்துட்டா, உடம்பு அழகு ஒரு பெரிய விஷயம் இல்ல. நாங்க இன்னமும் சந்தோஷமாத்தான் இருக்கோம்.
“எம்மா, நான் என்ன நீ சொல்ற மாதிரி காய் கறியா, இல்ல மளிகை கடையில கொட்டி கிடக்கிற அரிசி பருப்பா? என்னை ஏம்மா அந்த சாவித்திரி கிட்ட விக்கப் பாக்கிறே? அவ எங்க ஆபீசுலய ஒரு லொள்ளு பார்ட்டி, இப்ப நான் அவ பொண்ணை கட்டிக்கிட்டு, வீட்டுலயும் நான் அவகிட்ட படணுமா? நான் இரத்தம், சதை, எலும்புன்னு, உயிருள்ள, உணர்ச்சிகள் உள்ள ஒரு மனுஷன்ம்மா. எனக்குன்னு ஒரு மனசு இருக்கும்மா, அதுலயும் ஆசைகள், கனவுகள்ன்னு இருக்குதுமா? அவன் முனகினான்.
“எனக்கு இதெல்லாம் புரியுதுடா. யார் மனசையும் நான் வேணும்ன்னு புண்படுத்தலடா. நீ சொன்ன மாதிரி நானும் ஒரு மனுஷிடா. எனக்கும் என் புள்ளைக்கு நல்ல எடத்துல ஒரு பொண்ணைப் பாத்து, எல்லா வசதிகளோடும் அவன் வாழறதை பாக்கணும் அப்படின்னு ஆசை இருக்காதா? நான் ஒரு நடுத்தர குடும்பத்துல பொறந்து, ஒரு நடுத்தர குடும்பத்துல வாழறவட; என் மனசு குறுகலானதுடா; என் மனசு இப்படித்தான் வேலை செய்யும். என் புள்ளை சந்தோஷமா இருக்கணும். எனக்கு புடிச்ச பொண்ணு என் வீட்டுகுள்ள வர மருமக அவ புருஷனோட மனமொத்து சந்தோஷமா இருக்கணும், அதை நான் பாக்கணும். ஒரு தாயா எனக்கு இதுதான் முக்கியம் இல்லயாடா?”
“அம்மா நீ சொல்றது எல்லாம் சரிம்மா. ஆனா நான் சுகன்யாவை, அவ இடுப்புக்கு மேல துணியில்லாம அவளை தொட்டு பாத்துட்டேன்ம்மா. அவ என் மடியிலயும், என் மடியில அவளுமா இருந்துட்டோம்மா, அவளை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சத்தியம் பண்ணியிருக்கேம்மா, இதுக்கு அப்புறம் நான் அவளை எப்படிம்மா நடு ரோடுல வுட்டுட்டு வரமுடியும்? இன்னைக்கு அவ அழுது கலங்கனதை பாத்து என் உடம்பு ஆடிப் போச்சும்மா.” அவன் குரலில் தான் சுகன்யாவுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்ற உண்மையான துடிப்பிருந்தது.
“அடப்பாவி, நான் பெத்து வளத்த புள்ளையாடா நீ? இதெல்லாம் எங்கடா, எப்படா நடந்தது, சனியன் புடிச்சவனே; நீ என்னமோ வெறும் முத்தம் குடுத்துகிட்டோம்ன்னு தானடா சொன்னே? அன்னைக்கு இட்லியும் வடைகறியும் மூட்டை கட்டிக்கிட்டு போனியே, அது இவளுக்குத்தானா? இட்லி வடைகறியிலேயே அவ மயங்கிட்டாளா?” மல்லிகா கோபத்துடன் அவன் முதுகில் குத்தி அவன் தலையை பிடித்து உலுக்கினாள். எம்மா முடியை விடும்ம்மா. எனக்கு வலிக்குதும்மா, செல்வாவும் கத்த, மீனாவும் நடராஜனும், அங்கு எழும்பிய கூச்சலை கேட்டு ஹாலுக்குள் ஓடி வந்தனர்.
“அப்ப மீனா இருந்தா, அப்பா பக்கத்துல இருந்தாரு, எனக்கு அவங்க எதிர்ல எங்களுக்குள்ள நடந்ததைப்பத்தி முழுசா சொல்ல வாய் வரல்லம்மா. போனவாரம் ஊருக்கு போறதுக்கு முன்னாடி, அவ ரூம்ல நானும் அவளும் ஒண்ணா கொஞ்ச நேரம் இருந்தோம்மா. சுகன்யாவுக்கு நீ பண்ண வடைகறி ரொம்ப பிடிச்சிருந்தது. உனக்கு தேங்க்ஸ்ன்னு சொல்ல சொன்னாம்மா.” வெகுளியாக பேசிய செல்வாவின் தலை குனிந்திருந்தது.
“அறிவு கெட்டவனே, அவ தேங்க்ஸ் சொன்னதா இப்ப எனக்கு முக்கியம்? பெரியவங்க சொல்றது எல்லா காலத்துலயும் சரியாத்தாண்டா இருக்கு; ஊசி இடம் கொடுத்தாத்தான், நூல் உள்ள நுழைய முடியும்ன்னு; அவங்க சொன்னது இந்த மாதிரி நடந்ததை பாத்து பாத்துதாண்டா; சாதாரண சூழ்நிலையில ஒரு பொம்பளை விருப்பமில்லாம ஒரு ஆம்பிளை அவளைத் தொடமுடியாதுடா, அந்த வெக்கம் கெட்ட சுகன்யாவும், நீயும் பொறுப்பில்லாம பண்ணக் காரியத்துக்கு நான் என்னடா பண்ண முடியும், ஆனா அவ எல்லாம் திட்டம் போட்டுத்தான் உன்னை வளைச்சிருக்கா? உன் அறிவு எங்கடா போச்சு; நீ தான் புத்தியில்லாம அவ வலையில போய் விழுந்திருக்கே, நான் வளத்த புள்ளையாடா நீ? உங்க அப்பா சொல்ற மாதிரி எவனவாது நம்ம வீட்டுக்கு வெளியில வந்து நின்னு கத்தினா நம்ம குடும்ப மானம் காத்துல பறக்குமேடா? என் மானத்தை ஏண்டா இப்படி வாங்கறே?” மல்லிகா விசும்ப ஆரம்பித்தாள்.