கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 6 21

“சந்தையில கத்திரிக்காய் இளசா இருந்தா யார் வேணா வெல கேக்கலாம்? சுகன்யா மட்டும்தான் விலை கேக்கணும்ன்னு அவசியம் இல்லை? சாவித்திரியும் வெல கேக்கலாம். யாருக்கு தேவையோ அவங்க விலை கேக்கலாம். விக்கறவன் தன் சரக்குக்கு யார் அதிகமா விலை குடுக்கறானோ அவனுக்குத்தான் விப்பான்? நீ என் புள்ளைடா? சாவித்திரி உனக்கு அதிகமா தறேங்கறா? நான் யாருக்குடா உன்னை குடுப்பேன்? நான் யார் வீட்டுலடா உனக்கு சம்பந்தம் பண்ணுவேன்? எங்க உனக்கு வரவு அதிகமோ, எங்க உனக்கு லாபம் அதிகமோ அங்கதாண்டா நான் போவேன். அங்கதாண்டா நான் சம்பந்தம் பண்ணுவேன். இதுல என்னடா தப்பு?” அவள் தன் தொண்டையை கணைத்துக்கொண்டாள்.
“உங்களை மாதிரில்லாம் நான் நெறைய படிச்சவ இல்ல. உங்கப்பாவை கட்டிகிட்டு, இந்த வீட்டுக்கு வந்ததுலேருந்து இந்த நாலு சுவத்துக்குள்ளத்தான் நான் முடங்கிக் கிடக்கிறேன். ஆரம்பத்துல உங்கப்பாவுக்கு நான் ரொம்ப ஒல்லியா இருக்கேன்னு மனசுக்குள்ள ஒரு ஆதங்கம். நாளாவ ஆவ அவரு கண்ணுக்கு நான்தாண்டா இன்னமும் அழகி. மனசால நாங்க ரெண்டு பேரும் ஒண்ணாயிட்டோம். மனசுல திருப்தி வந்துட்டா, உடம்பு அழகு ஒரு பெரிய விஷயம் இல்ல. நாங்க இன்னமும் சந்தோஷமாத்தான் இருக்கோம்.
“எம்மா, நான் என்ன நீ சொல்ற மாதிரி காய் கறியா, இல்ல மளிகை கடையில கொட்டி கிடக்கிற அரிசி பருப்பா? என்னை ஏம்மா அந்த சாவித்திரி கிட்ட விக்கப் பாக்கிறே? அவ எங்க ஆபீசுலய ஒரு லொள்ளு பார்ட்டி, இப்ப நான் அவ பொண்ணை கட்டிக்கிட்டு, வீட்டுலயும் நான் அவகிட்ட படணுமா? நான் இரத்தம், சதை, எலும்புன்னு, உயிருள்ள, உணர்ச்சிகள் உள்ள ஒரு மனுஷன்ம்மா. எனக்குன்னு ஒரு மனசு இருக்கும்மா, அதுலயும் ஆசைகள், கனவுகள்ன்னு இருக்குதுமா? அவன் முனகினான்.
“எனக்கு இதெல்லாம் புரியுதுடா. யார் மனசையும் நான் வேணும்ன்னு புண்படுத்தலடா. நீ சொன்ன மாதிரி நானும் ஒரு மனுஷிடா. எனக்கும் என் புள்ளைக்கு நல்ல எடத்துல ஒரு பொண்ணைப் பாத்து, எல்லா வசதிகளோடும் அவன் வாழறதை பாக்கணும் அப்படின்னு ஆசை இருக்காதா? நான் ஒரு நடுத்தர குடும்பத்துல பொறந்து, ஒரு நடுத்தர குடும்பத்துல வாழறவட; என் மனசு குறுகலானதுடா; என் மனசு இப்படித்தான் வேலை செய்யும். என் புள்ளை சந்தோஷமா இருக்கணும். எனக்கு புடிச்ச பொண்ணு என் வீட்டுகுள்ள வர மருமக அவ புருஷனோட மனமொத்து சந்தோஷமா இருக்கணும், அதை நான் பாக்கணும். ஒரு தாயா எனக்கு இதுதான் முக்கியம் இல்லயாடா?”
“அம்மா நீ சொல்றது எல்லாம் சரிம்மா. ஆனா நான் சுகன்யாவை, அவ இடுப்புக்கு மேல துணியில்லாம அவளை தொட்டு பாத்துட்டேன்ம்மா. அவ என் மடியிலயும், என் மடியில அவளுமா இருந்துட்டோம்மா, அவளை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சத்தியம் பண்ணியிருக்கேம்மா, இதுக்கு அப்புறம் நான் அவளை எப்படிம்மா நடு ரோடுல வுட்டுட்டு வரமுடியும்? இன்னைக்கு அவ அழுது கலங்கனதை பாத்து என் உடம்பு ஆடிப் போச்சும்மா.” அவன் குரலில் தான் சுகன்யாவுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்ற உண்மையான துடிப்பிருந்தது.
“அடப்பாவி, நான் பெத்து வளத்த புள்ளையாடா நீ? இதெல்லாம் எங்கடா, எப்படா நடந்தது, சனியன் புடிச்சவனே; நீ என்னமோ வெறும் முத்தம் குடுத்துகிட்டோம்ன்னு தானடா சொன்னே? அன்னைக்கு இட்லியும் வடைகறியும் மூட்டை கட்டிக்கிட்டு போனியே, அது இவளுக்குத்தானா? இட்லி வடைகறியிலேயே அவ மயங்கிட்டாளா?” மல்லிகா கோபத்துடன் அவன் முதுகில் குத்தி அவன் தலையை பிடித்து உலுக்கினாள். எம்மா முடியை விடும்ம்மா. எனக்கு வலிக்குதும்மா, செல்வாவும் கத்த, மீனாவும் நடராஜனும், அங்கு எழும்பிய கூச்சலை கேட்டு ஹாலுக்குள் ஓடி வந்தனர்.
“அப்ப மீனா இருந்தா, அப்பா பக்கத்துல இருந்தாரு, எனக்கு அவங்க எதிர்ல எங்களுக்குள்ள நடந்ததைப்பத்தி முழுசா சொல்ல வாய் வரல்லம்மா. போனவாரம் ஊருக்கு போறதுக்கு முன்னாடி, அவ ரூம்ல நானும் அவளும் ஒண்ணா கொஞ்ச நேரம் இருந்தோம்மா. சுகன்யாவுக்கு நீ பண்ண வடைகறி ரொம்ப பிடிச்சிருந்தது. உனக்கு தேங்க்ஸ்ன்னு சொல்ல சொன்னாம்மா.” வெகுளியாக பேசிய செல்வாவின் தலை குனிந்திருந்தது.

“அறிவு கெட்டவனே, அவ தேங்க்ஸ் சொன்னதா இப்ப எனக்கு முக்கியம்? பெரியவங்க சொல்றது எல்லா காலத்துலயும் சரியாத்தாண்டா இருக்கு; ஊசி இடம் கொடுத்தாத்தான், நூல் உள்ள நுழைய முடியும்ன்னு; அவங்க சொன்னது இந்த மாதிரி நடந்ததை பாத்து பாத்துதாண்டா; சாதாரண சூழ்நிலையில ஒரு பொம்பளை விருப்பமில்லாம ஒரு ஆம்பிளை அவளைத் தொடமுடியாதுடா, அந்த வெக்கம் கெட்ட சுகன்யாவும், நீயும் பொறுப்பில்லாம பண்ணக் காரியத்துக்கு நான் என்னடா பண்ண முடியும், ஆனா அவ எல்லாம் திட்டம் போட்டுத்தான் உன்னை வளைச்சிருக்கா? உன் அறிவு எங்கடா போச்சு; நீ தான் புத்தியில்லாம அவ வலையில போய் விழுந்திருக்கே, நான் வளத்த புள்ளையாடா நீ? உங்க அப்பா சொல்ற மாதிரி எவனவாது நம்ம வீட்டுக்கு வெளியில வந்து நின்னு கத்தினா நம்ம குடும்ப மானம் காத்துல பறக்குமேடா? என் மானத்தை ஏண்டா இப்படி வாங்கறே?” மல்லிகா விசும்ப ஆரம்பித்தாள்.
“இப்ப என்னாடி ஆச்சு, நீ எதுக்கு இப்ப அழுது ஊரை கூட்டறே? நடராஜன் குறுக்கில் வந்தார்.
“நீங்க சும்மா இருங்க கொஞ்ச நேரம், இவன் அவ கூட படுத்து புள்ளைதான் பெத்துக்கலை, மத்த எல்லாத்தையும் பண்ணிட்டு வந்து வெக்கமில்லாம, ஒண்ணு ஓண்ணா எங்கிட்ட சொல்றான்.” நடராஜன் அவள் ஆவேசத்தைக் கண்டு சற்று ஒதுங்கி அவள் பேசுவதை கவனித்தார்.
“கல்யாணத்துக்கு முன்னாடி, பாதி உடம்புல துணியில்லாம உன் கூட தனியா அவ கிடந்திருக்கிறா?அந்த தெனவெடுத்தவளுக்கு மனசுல என்ன துணிச்சல் இருந்திருக்கணும்? உடம்புல என்னா திமிர் இருக்கணும்? உடம்பு கொழுத்து, அரிப்பெடுத்து போனவளா இருப்பா போல இருக்கே அவ? சாவித்திரி சரியாத்தான் சொன்னா அவளைப்பத்தி, அப்பன் இல்லாத வளந்த பொண்ணுன்னு; என் பொண்ணு மட்டும் இந்த காரியத்தை பண்ணியிருந்தா அவளை இந்த நேரத்துக்கு வெட்டிப் பொலி போட்டு இருப்பேன்? அடியே மீனா நீயும் நல்லா கேட்டுக்க, நீ எவன் கூடவாவது எக்குத்தப்பா எதையாவது இந்த தறுதலை மாதிரி பண்ண, நான் மனுஷியா இருக்க மாட்டேன் … ஜாக்கிரதை.”
“அம்மா, இப்ப நீ என்னை என்னதான் செய்ய சொல்றே, சுகன்யா மட்டுமா இந்த தப்பை பண்ணா? நாங்க பண்ணது தப்புன்னா, இதுல பாதி தப்பு நானும் தான் பண்ணியிருக்கேன். அவங்க வீட்டுக்கு இது தெரிஞ்சு, அவங்க வந்து என்னை வெட்டி பொலி போட்டா? அதனாலதான் சொல்றேன் நான் அவளை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு” மனதில் சற்றே துணிவு வந்தவனாக, அம்மாவிடம் தன்னை வெட்டுவாங்கங்கற இந்த பிட்டை போட்டு, கொஞ்சம் கொஞ்சமாக தன் வழிக்கு அவளை கொண்டு வந்துவிடலாம் என மனசுக்குள் எண்ணி செல்வா பேசினான்.
“இந்த கதையை நீ ஏண்டா இப்ப எங்கிட்ட சொல்றே? அந்த சுகன்யாவோட ரவிக்கையை நீ அவுக்கறதுக்கு முன்னாடி இதைப்பத்தி யோசிச்சு இருக்கணும்டா, நமக்கும் ஒரு தங்கச்சி இருக்காளே? அவகிட்ட இப்படி எவனாவது நடந்தா நாம சும்மா இருப்பமா? இது உனக்கு தோணி இருக்கணும்டா. நம்பளை எவனாவது நாளைக்கு வெட்ட வந்தா நம்ம கதி என்னான்னு அவ ரூமுக்கு போறதுக்கு முன்ன நினைச்சு இருக்கணும்? என் மனசை உடைச்சிட்டியேடா? பாவிப்பயலே … அந்த சுகன்யா பின்னாடி நீ தாராளமா போடா; அவளையே நீ கட்டிக்க; ஆனா அப்படி நீ பண்ணிட்டு, இந்த வீட்டுக்குள்ள என்னைப் பாக்கறதுக்கு திரும்பி வராதே, அப்படியே நீ எங்கயாவது அவளோட போய் ஒழி; எனக்கு பொறந்தது ஒண்ணு இல்லைன்னு நினைச்சுக்கிறேன். மல்லிகா தன் தலையிலடித்துக் கொண்டு ஆக்ரோஷமாக கூச்சலிட்டாள்.
“சாவித்திரிக்கு அவ மாப்பிள்ளையா உன்னைப் பாக்கணும்ன்னு ரொம்பா ஆசை படறாடா, அவளோட வீட்டுகாரர் உன்னை உன் ஆபிசுல, உனக்குத் தெரியாம பாத்துட்டு போய் இருக்காருடா; ஜானகிக்கும் உன்னை பிடிச்சிருக்குடா, அவ மட்டும் உன்னை இதுவரைக்கும் நேர்ல பாத்தது இல்லையாம். எனக்கும் அவளை பிடிச்சிருக்குடா, நீ ஒரு தரம் அவளை நேரா பாத்துட்டு வாடா, அப்புறம் உன் இஷ்டப்படி நீ என்ன வேணா பண்ணுடா … ஆனா ஒண்ணு மட்டும் நல்லா கேட்டுக்க … அந்த உடம்பு கொழுத்துப் போன சிறுக்கி சுகன்யாவை எந்த காலத்துலயும் நான் என் மருமகளா முழு மனசோட ஏத்துக்க மாட்டேன். அவ இந்த வீட்டுக்குள்ள வந்தா, நான் இந்த வீட்டை விட்டு வெளியில போயிடுவேன். எங்கப்பன் எனக்குன்னு ஒரு சின்ன ரூம் என் அண்ணன் வீட்டுல பின்னாடி கொல்லையில எழுதி வெச்சுட்டுத்தான் செத்தான்” மல்லிகா கோபத்துடன் மூச்சிறைக்க கத்தினாள். செல்வா அழுது கொண்டிருக்கும் தன் தாயை எப்படி சமாதானம் செய்வது என புரியாமல் திகைத்து தன் அப்பாவை திரும்பி பார்த்தான். அவர் தன் தலையை சொறிந்து கொண்டு வீட்டின் மேற்கூரையை பார்த்துக்கொண்டிருந்தார். நாம போட்ட பிட்டு வொர்க் அவுட் ஆகலே? அது மட்டுமா, கிணறு வெட்ட போய் பூதம் கிளம்பின கதையா ஆகி போயிடுச்சு” செல்வா தன் மனம் தளர்ந்து போனான்.