கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 6 21

“இப்ப என்னாடி ஆச்சு, நீ எதுக்கு இப்ப அழுது ஊரை கூட்டறே? நடராஜன் குறுக்கில் வந்தார்.
“நீங்க சும்மா இருங்க கொஞ்ச நேரம், இவன் அவ கூட படுத்து புள்ளைதான் பெத்துக்கலை, மத்த எல்லாத்தையும் பண்ணிட்டு வந்து வெக்கமில்லாம, ஒண்ணு ஓண்ணா எங்கிட்ட சொல்றான்.” நடராஜன் அவள் ஆவேசத்தைக் கண்டு சற்று ஒதுங்கி அவள் பேசுவதை கவனித்தார்.
“கல்யாணத்துக்கு முன்னாடி, பாதி உடம்புல துணியில்லாம உன் கூட தனியா அவ கிடந்திருக்கிறா?அந்த தெனவெடுத்தவளுக்கு மனசுல என்ன துணிச்சல் இருந்திருக்கணும்? உடம்புல என்னா திமிர் இருக்கணும்? உடம்பு கொழுத்து, அரிப்பெடுத்து போனவளா இருப்பா போல இருக்கே அவ? சாவித்திரி சரியாத்தான் சொன்னா அவளைப்பத்தி, அப்பன் இல்லாத வளந்த பொண்ணுன்னு; என் பொண்ணு மட்டும் இந்த காரியத்தை பண்ணியிருந்தா அவளை இந்த நேரத்துக்கு வெட்டிப் பொலி போட்டு இருப்பேன்? அடியே மீனா நீயும் நல்லா கேட்டுக்க, நீ எவன் கூடவாவது எக்குத்தப்பா எதையாவது இந்த தறுதலை மாதிரி பண்ண, நான் மனுஷியா இருக்க மாட்டேன் … ஜாக்கிரதை.”
“அம்மா, இப்ப நீ என்னை என்னதான் செய்ய சொல்றே, சுகன்யா மட்டுமா இந்த தப்பை பண்ணா? நாங்க பண்ணது தப்புன்னா, இதுல பாதி தப்பு நானும் தான் பண்ணியிருக்கேன். அவங்க வீட்டுக்கு இது தெரிஞ்சு, அவங்க வந்து என்னை வெட்டி பொலி போட்டா? அதனாலதான் சொல்றேன் நான் அவளை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு” மனதில் சற்றே துணிவு வந்தவனாக, அம்மாவிடம் தன்னை வெட்டுவாங்கங்கற இந்த பிட்டை போட்டு, கொஞ்சம் கொஞ்சமாக தன் வழிக்கு அவளை கொண்டு வந்துவிடலாம் என மனசுக்குள் எண்ணி செல்வா பேசினான்.

“இந்த கதையை நீ ஏண்டா இப்ப எங்கிட்ட சொல்றே? அந்த சுகன்யாவோட ரவிக்கையை நீ அவுக்கறதுக்கு முன்னாடி இதைப்பத்தி யோசிச்சு இருக்கணும்டா, நமக்கும் ஒரு தங்கச்சி இருக்காளே? அவகிட்ட இப்படி எவனாவது நடந்தா நாம சும்மா இருப்பமா? இது உனக்கு தோணி இருக்கணும்டா. நம்பளை எவனாவது நாளைக்கு வெட்ட வந்தா நம்ம கதி என்னான்னு அவ ரூமுக்கு போறதுக்கு முன்ன நினைச்சு இருக்கணும்? என் மனசை உடைச்சிட்டியேடா? பாவிப்பயலே … அந்த சுகன்யா பின்னாடி நீ தாராளமா போடா; அவளையே நீ கட்டிக்க; ஆனா அப்படி நீ பண்ணிட்டு, இந்த வீட்டுக்குள்ள என்னைப் பாக்கறதுக்கு திரும்பி வராதே, அப்படியே நீ எங்கயாவது அவளோட போய் ஒழி; எனக்கு பொறந்தது ஒண்ணு இல்லைன்னு நினைச்சுக்கிறேன். மல்லிகா தன் தலையிலடித்துக் கொண்டு ஆக்ரோஷமாக கூச்சலிட்டாள்.
“சாவித்திரிக்கு அவ மாப்பிள்ளையா உன்னைப் பாக்கணும்ன்னு ரொம்பா ஆசை படறாடா, அவளோட வீட்டுகாரர் உன்னை உன் ஆபிசுல, உனக்குத் தெரியாம பாத்துட்டு போய் இருக்காருடா; ஜானகிக்கும் உன்னை பிடிச்சிருக்குடா, அவ மட்டும் உன்னை இதுவரைக்கும் நேர்ல பாத்தது இல்லையாம். எனக்கும் அவளை பிடிச்சிருக்குடா, நீ ஒரு தரம் அவளை நேரா பாத்துட்டு வாடா, அப்புறம் உன் இஷ்டப்படி நீ என்ன வேணா பண்ணுடா … ஆனா ஒண்ணு மட்டும் நல்லா கேட்டுக்க … அந்த உடம்பு கொழுத்துப் போன சிறுக்கி சுகன்யாவை எந்த காலத்துலயும் நான் என் மருமகளா முழு மனசோட ஏத்துக்க மாட்டேன். அவ இந்த வீட்டுக்குள்ள வந்தா, நான் இந்த வீட்டை விட்டு வெளியில போயிடுவேன். எங்கப்பன் எனக்குன்னு ஒரு சின்ன ரூம் என் அண்ணன் வீட்டுல பின்னாடி கொல்லையில எழுதி வெச்சுட்டுத்தான் செத்தான்” மல்லிகா கோபத்துடன் மூச்சிறைக்க கத்தினாள். செல்வா அழுது கொண்டிருக்கும் தன் தாயை எப்படி சமாதானம் செய்வது என புரியாமல் திகைத்து தன் அப்பாவை திரும்பி பார்த்தான். அவர் தன் தலையை சொறிந்து கொண்டு வீட்டின் மேற்கூரையை பார்த்துக்கொண்டிருந்தார். நாம போட்ட பிட்டு வொர்க் அவுட் ஆகலே? அது மட்டுமா, கிணறு வெட்ட போய் பூதம் கிளம்பின கதையா ஆகி போயிடுச்சு” செல்வா தன் மனம் தளர்ந்து போனான். சுகன்யாதான் நம்பளை குற்றவாளி கூண்டுல ஏத்தி நிறுத்தினான்னு வீட்டுக்கு வந்தா, நம்ப அம்மா அவளுக்கு மேல ஒரு படி போயி நம்பளையே திட்டி அடிக்க ஆரம்பிச்சுட்டா; நம்ம அம்மாவே நம்பளை வீட்டை விட்டு வெளியில போடாங்கறா; அப்பா ஏற்கனவே அவருக்கு தெரிஞ்ச ஞாயத்தை சொல்லி என்னை கைகழுவி விட்டுட்டார். ஆனாலும் மறைமுகமா அவருக்கு சுகன்யாவை பிடிச்சிருக்குன்னு ஹிண்ட் குடுத்துட்டார். மீனா நம்ப பக்கம். சுகன்யாவை அவளுக்கு புடிச்சு போச்சு. சுகன்யா என்னை உயிருக்கு உயிரா நேசிக்கறா. அப்பா சொன்ன மாதிரி நாலு நாள் கழிச்சு சுகன்யா முன்னாடி போய் நின்னு, அவளுக்கு புடிச்ச வாழைக்காய் பஜ்ஜியை வாங்கி குடுத்துட்டு, கொஞ்சம் மூஞ்சை தூக்கி வெச்சுக்கிட்டு சாரிம்மான்னு சொன்னா, அவ மனசு கரைஞ்சு, கோபம் கொறைஞ்சு, வழக்கம் போல நம்ப கையை கோத்துக்குவா. ஆனா இந்த அழுவற அம்மாவை பாத்தாலும் என்னால தாங்க முடியலை. பொட்டைச்சிங்க எல்லாரும் அழுதே காரியத்தை சாதிக்கப் பாக்கறாங்க. அம்மாவுக்காக அந்த ஜானகியை போய் பாக்கறதுல மேல் கொண்டு என்னப் பிரச்சனை வருமோ? சும்மா ஒரு தரம் போய் அந்த ஜானகியை பாத்துட்டு எனக்கு அவளை பிடிக்கலைன்னு சொல்லிட வேண்டியதுதான். பிடிக்கலைன்னு சொன்னா அந்த சாவித்திரி இந்த ஆட்டத்தை நிறுத்திடுவாளா? சாவித்திரி ஒரு பொம்பளை ரவுடி. அவ என்ன பிளான்ல இருக்காளோ? இந்த நேரத்துல நம்ம நண்பன் சீனு தடியன் வேற ஊர்ல இல்ல. இருந்தா அவனை கேக்கலாம் மேல என்னப் பண்ணலாம்ன்னு? அவன் ஜானகி தங்கச்சியை ரூட் போடறான். அவனை இந்த விஷயத்துல நம்ப முடியாது. நான் இருக்கற நிலைமையில நான் யாரை குத்தம் சொல்றது? உன்னை சொல்லி குற்றமில்லை, என்னை சொல்லி குற்றமில்லை, காலம் செய்த கோலமடி, கடவுள் செய்த குற்றமடி, இந்த பாட்டுதான் அவன் மனதுக்குள் காரணமில்லாமல் திரும்ப திரும்ப ஒலித்தது. செல்வா மனதுக்குள் புழுங்கியபடியே, கண் மூடி தலைக்கு கீழ் தன் கைகளை தலையணயாக வைத்து வெறும் தரையில் படுத்திருந்தான். திடிரென அவன் மனதில் மின்னலாக எழுந்த ஒரு கேள்வி அவனை ஆட்டியது.