கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 28 11

“ஆனாம்மா… சுகன்யா வாயில அன்பா ஒரு வார்த்தையில்லே; அவ மூஞ்சில ஒரு சிரிப்பு இல்லே; சொந்தக்காரன்ங்கற ஒரு சலுகையில்லே; ஆம்பளைங்கற ஒரு மதிப்பு இல்லே. அப்படியா பாட்டீன்னு கேட்டுட்டு, திரும்பி என்னைப் பாத்து, ஒரு சின்ன முறுவல், ஒரு தலையாட்டல், ஒரு ஆமோதிப்பு, இப்படி எதுவுமே அவகிட்டருந்து வரலை.”

கோவிலில் பிரசாத வரிசையில் கையில் தொன்னையுடன் காத்திருந்து, தன் முறை வரும் போது, குண்டானில் சக்கரைப் பொங்கல் தீர்ந்துபோக, காலியான தொன்னையுடன், முகத்தில் வரட்டு சிரிப்பும், மனதில் ஏமாற்றத்துடன் திரும்பி வரும் பக்தனின், மனநிலையில் சம்பத் அன்று இருந்தான். ஒரு சின்னக் குழந்தையைப் போல் ஒரு வினாடி பேசுவதை நிறுத்தி தன் தாயின் ஆதரவான அங்கீகாரத்துக்காக, ஒரு புன்னகைக்காக, அவள் முகத்தை கூர்ந்து நோக்கினான்.

“அப்புறம்…”

“அப்புறம் என்னா? சுகன்யா, பெரிய பத்தினி மாதிரி என்னைப் பாத்து கையை கூப்பிட்டு, மிஸ்டர் சம்பத், நீங்க பாட்டிக்கிட்ட பேசிக்கிட்டு இருங்க;
“பீ கம்பர்டபிள்”ன்னு என் கிட்ட இங்லீஷ் பேசிட்டு, அடுத்த செகண்ட், கூடத்து ரூமுக்குள்ள நுழைஞ்சு, கதவை என் மூஞ்சிலே அடிக்கற மாதிரி சாத்திக்கிட்டாம்மா…?

“அவ்வளக் கொழுப்பா அவளுக்கு..? நல்லப்பொண்ணுன்னு நெனைச்சுக்கிட்டு இருக்கேனே?” ராணி தன்னையும் அறியாமல் தன் பற்களைக் கடித்தாள். அழகான அவள் முகம் கோபத்தில் கருக்க ஆரம்பித்தது.

திருதராஷ்டிரன், துரியோதனன் மேலிருந்த புத்திரப் பாசத்தால், இப்படித்தான் தன் மகன் சொன்னதை கேட்டு கேட்டு, அதன் படியே நடந்து, தன் குலத்தையே அழித்து தானும் அழிந்தான் என்பது ராணியின் நினைவுக்கு அன்று வரவில்லை.

“கொழுப்பா … அவ்வளவும் நடிப்பும்ம்மா…”

“என்னடா சொல்றே?”

“சுகன்யா மெட்ராஸ்ல அவ வேலைச்செய்யற எடத்துல ஏற்கனவே ஒருத்தன் கூட ஜாலியா மஜா பண்ணிக்கிட்டு இருக்கா!”

“ஆச்சரியமா இருக்கே…! அப்பவே நான் நெனைச்சேன்…! இதனாலத்தான் சுகன்யாவை உனக்கு குடுக்கமாட்டேன்னு, சுந்தரி சாக்கு போக்கு சொல்லிக்கிட்டு இருக்கிறாளா!!??

“வேற என்னா காரணம் இருக்க முடியும்?”

“சுகன்யா ஒருத்தன் கூட கூடி குலாவிக்கிட்டு இருக்கறது உனக்கு எப்படிடா தெரிஞ்சுது…?”

“எவன் கூட இவ குஜாலா சுத்தறாளோ… அவன் பேரு தமிழ்செல்வனாம்… அந்த நேரம் பாத்து… சிவதாணு கிழவன் நம்பர்ல… அவன் போன் பண்ணி சுகன்யாவை கூப்பிடுன்னான்?

“வாவ்…என்ன டிவிஸ்ட்டுடா ஸ்டோரியில” தாய், சின்னக்குழந்தையாக அசட்டுத்தனமாக சிரித்தாள்.

சீட்டைக் குலுக்கி போடும் போதே கையில ஆட்டம் ஆயிருக்கணும்ம்மா எனக்கு; ரெண்டு மொக்கை, ஒரு ஜோக்கர், ரெம்மிதான் இல்லை; செட்டா கையில கார்டை வெச்சிக்கிட்டு இருக்கேன்; ஸ்ட்ரெய்ட்டா ரம்மி அண்ட் டிக் ஆவுது….இந்த செல்வாதான் என் ரெம்மி கார்ட்டும்மா… பாரும்மா இதான் லக்குங்கறது…என்ன சொல்றே நீ?” சம்பத் தன் பற்கள் பளீரென மின்ன சிரித்தான்.

“ம்ம்ம்ம்…அப்படியா … அப்ப அங்க சிவதாணு மாமா இல்லையா?”

“போன் அடிச்சப்ப கூடத்துல யாருமில்லே! சிவதாணு கக்கூஸ் போய் வர்றேன்னு என்னைத் தனியா வுட்டுட்டு போயிட்டார்; நான்தான் போனை எடுத்தேன்… அவன் என்னடான்னா, ரொம்ப உரிமையா சுகன்யாவை கூப்பிடுன்னான்..”

“ம்ம்ம… நல்லா போவுதுடா கதை…”

“என்னா நயினா…? சுகன்யாவை
“அவ இவ” ன்னு ரொம்ப உரிமையா பேசறே…? நீ யார்ரான்னேன்?

“அவன் பயந்துப் போயி, சாரி சார்… சுகன்யா நம்பர் வேலை செய்யலை; சுகன்யாவும் நானும் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்… அர்ஜண்டா ஒரு மேட்டர், அவகிட்ட பேசணும்… அவளைக் கூப்பிடுங்க சார்ன்னு கெஞ்சினான்.”

“சரி…சரி … மேல சொல்லுடா”

“தோஸ்த்… நீ பேசறதைப் பாத்தா நீங்க ரெண்டு பேரும் வெறும் ஃப்ரெண்ட்ஸ்ன்னு தோனலையேன்னு, பட்டுன்னு ஒரு தூண்டிலைப் போட்டேன்.. மீனு சிக்கிடிச்சி!”

“புத்திசாலிடா நீ” தாய் தன் தனயனைப் பார்த்து பெருமைப்பட்டுக்கொண்டாள்.

“அம்மா… அந்த தமிழ்செல்வன் ஒரு கேணப்பயலாத்தான் இருக்கணும்… நான் யாருன்னு முழுசா கூட தெரிஞ்சுக்காம, சார்… நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்றோம்… கூடிய சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கப் போறோம்ன்னு என் கிட்ட ஆசீர்வாதம் கேக்கறான்..?”