கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 28 11

இது வரையில் எந்தப் பக்கமும் சாயமால், பட்சபாதமில்லாமல் பிரச்சனையை கேட்டுக்கொண்டிருந்தவள் மனதில், தன் மகன் சொல்லுவது சரிதானோ என்ற ஒரு ஐயம் எழுந்தது? ராணி தெளிவாக சிந்திக்கும் தன் திறனை இழந்தாள். ஒரு தலைப்பட்சமாக தன் மகன் பக்கம் சாய ஆரம்பித்தாள். ஒரு தாயின் இயல்பான மனஉணர்ச்சிகளுக்கு அடிமையானாள். பெத்தவளுக்கு அவள் மகன் பேசுவதுதானே கரும்பாய் இனிக்கும்..?! மகனுக்கு அப்புறம் தானே மணளான்?

“சுகன்யாகிட்ட, அப்பா சொன்னமாதிரி நான் தப்பா எதுவும் பேசலைம்மா… சுகன்யா! உங்களுக்கு என்னைத் தெரியாது! ஆனா உங்களை எனக்குத் தெரியும்… கதவைத் தொறங்கன்னு மரியாதையாத்தான் நான் பேசினேம்மா…”

“ம்ம்ம் ….”

“அதுக்கப்புறமும்… அவ கதவைத் தொறக்காம….
“பாட்டி” யாரோ வந்திருக்காங்கன்னு உள்ளப்பாத்து குரல் குடுத்தாம்மா… அழகிப் போட்டியில நடக்கறவ மாதிரி தன் தோளை குலுக்கிக்கிட்டு, இடுப்பை ஆட்டி ஆட்டிக்கிட்டு நடந்து உள்ளே போறாம்மா… நாயி…

ராணிக்கு தன் மகனின் ஆதங்கம் புரிந்தது. தன் மகனும் ஒரு ஆண்தானே. தன் கணவன் தன்னை முதல் முறை பார்த்தவுடன் தன் அழகில் விழுந்தது போல், சம்பத்தும் சுகன்யாவின் அழகில் விழுந்துவிட்டான் எனத் தெளிவாக அவளுக்குப் புரிந்தது. மகனுடைய மனதின் தாபம் முழுசாக புரிந்தது. தன் மகனின் கலங்கும் கண்களைக் கண்டதும், அவள் புத்திரப்பாசத்தால் புறம் பேசினாள். எப்படியாவது சுகன்யாவை தன் மகனுடன் சேர்த்துவிட அவள் மனது துடிக்க ஆரம்பித்தது.

“டேய் நீ சொல்றது சரிதாண்டா… சுகன்யா கொஞ்சம் திமிர் பிடிச்சவளாத்தான் இருக்கணும்!”

“இப்ப புரியுதாம்மா உனக்கு…? திமிரான ஒரு பெண்ணைப் பாத்தா ஒரு ஆம்பிளைக்கு எரிச்சல் வருமா? வராதா? நீயே சொல்லும்மா…?”

“…”

அம்மாவை மெதுவா நம்ம பக்கம் இழுத்தாச்சு… விடாதேடா அம்மாவை… டேய் சம்பத்து! டெம்போவை அப்படியே மெய்ன்டென் பண்ணுடா… அம்மா எப்பவும் உன் பக்கம்தான் நிப்பா. உன் அப்பனை நம்பாதே! நீ தெரியாம தப்பு பண்ணாக்கூட உன்னை அவரு சப்போர்ட் பண்ணமாட்டாரு… இதை நீ எப்பவும் ஞாபகம் வெச்சுக்க.

“நான் சுந்தரி வீட்டுக்கு, சுகன்யா இருக்கும் போது, நாலுதரம் போயிருக்கேன்… எங்கிட்டவும் எப்பவும் அந்த சுகன்யா முகம் கொடுத்துப் பேசினதே கிடையாதுடா…!” ராணி குதர்க்கமாகப் பேச ஆரம்பித்தாள்.

“பாத்தியா… பாத்தியா… சம்பத் உற்சாகமடைந்தான். நான் சொல்றதுல தப்பு ஓண்ணும் இல்லியே? உன்னையே அவ மதிச்சது இல்லே பாத்தியா…? அவ எங்க என்னை மதிப்பா?” சம்பத் வேகமாக கொம்பு சீவினான்.

“பிச்சைக்காரிக்கு, பழம் பொடவை போடற மாதிரி, இந்த சிறுக்கி சுகன்யா, என்னைப் பாத்து சின்னதா ஒரு நமுட்டு சிரிப்பு சிரிச்சுட்டு, ஒவ்வொரு தரமும் எழுந்து மாடிக்கு போயிடுவா… அப்பவே இது எனக்கு வித்தியாசமா பட்டது.” ராணி வேகமாக முழங்க ஆரம்பித்தாள்.

“ம்ம்ம்…”

“சுகன்யா, சின்னப் பொண்ணு, நாம ஆரம்பத்துலேருந்து பாம்பேயில இருந்துட்டோம்… சுகன்யா என்னைப் பாத்ததேயில்லே… நான் அவளுக்கு அத்தை உறவுன்னு, அவளுக்குத் தெரிஞ்சிருக்காதுன்னு நான் அப்பெல்லாம் நெனைச்சுப்பேன்…”

“நீ நெனச்சதுலே தப்பேயில்லை…ஆனா சுகன்யா அப்படியில்லே…”

“புது ஆளுங்ககிட்ட பேச கூச்சப்படறான்னு எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கிட்டேன். நீ சொன்னதுக்கு அப்புறம்தான் இப்ப எனக்கு எல்லாமே நல்லாப் புரியுது?” ராணி தன் மகன் பக்கம் மொத்தமாக சாய்ந்துவிட்டாள்.

“அப்புறம்..?”

“நான் ஹால்லே உக்காந்து இருக்கேன்.. அந்த கெழவி கனகா என்னை அவளுக்கு அறிமுகப்படுத்தறா, சுகன்யா … இந்த சம்பத்து உனக்கு அத்தைப் பிள்ளை…பெங்களூர்ல இஞ்சினீயரா இருக்கான்;”

“கெழவிக்காவது உறவு மொறை தெரிஞ்சுருக்குதே?” ராணிக்கு தன் மனதில் ஒரு அசட்டுத்தனமான திருப்தி எழுந்தது.