கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 28 11

இவங்க ரெண்டு பேருக்குள்ள, இந்த வயசுல, இப்ப என்ன தீவிரமான ஒரு புகைச்சல்? இவங்க ரெண்டு பேரும் இப்படி சண்டைப் போட்டு நான் பாத்தது இல்லையே? இதுல ஏதோ விஷயமிருக்கு?! இதுக்கு காரணம் யாரு? நானா? இல்லை வேற யாராவதா? பொறுத்துத்தான் பாக்கணும்…. கோபத்துடன் நிற்கும் தன் தாயையும், கண் மூடி உட்கார்ந்திருக்கும் தன் தந்தையையும் மாறி மாறிப் பார்த்தான் அவன்.
“டேய் சொல்லேண்டா சிவதாணு வீட்டுல அப்படி என்னதான் நடந்தது?”

“நான் அவமானப்பட்ட கதையை நீ தெரிஞ்சிக்கிட்டே ஆவணுமா?” சம்பத்தின் குரலில் சிறிதே வன்மம் தொனித்தது.

“சம்பத்து… உனக்கு ஒரு அவமானம்ன்னா அது எனக்கு இல்லையாடா?” ராணி தன் மகனை சமாதானப்படுத்த முயன்றாள்.

“சுருக்கமா சொன்னா சுகன்யா ஒரு தரம் கூட என் மூஞ்சை ஏறெடுத்துப் பாக்கலைம்மா…”

“அப்படி எதுலடா நீ கொறைஞ்சுப் போயிட்டே அவளை விட?”

“இந்த ஒரு வார்த்தையை சொல்லி சொல்லித்தான் நீ என்னை ரொம்பவே ஏத்திவிட்டுட்டே.. உன்னாலத்தான் இன்னைக்கு நான் அந்த நாய் கிட்ட அவமானப்பட்டேன்…”

“என்னப்பா சொல்றே நீ?”

“அம்மா… சும்மா டயம் பாஸுக்கு பசங்களோட ஜாலியா சுத்தற பொண்ணுங்க, அவனுங்க ஃப்ர்சைத்தான் குறி வெப்பாளுங்க..”

“ம்ம்ம்…”

“அம்மா! சுகன்யாகிட்ட பணம் இருக்கு. அவ என் ட்ரஸ்க்கு மசியலை; என் படிப்புக்கு மசியலை; என் அந்தஸ்துக்கு மசியலை; என் கட்டான உடம்புக்கு மசியலை; இவ்வளவு ஏன்? நான் அவளுக்கு முறைப்பிள்ளைன்னு தெரிஞ்சதுக்கு அப்புறமும், சொந்தத்துக்கும் மசியலே.. அவ எதுக்குமே மசியலை!”

“ம்ம்ம்…”

“நான் என் கையை நீட்டி ஹாய்ன்னு சொன்னேன்; சுகன்யா என் கையைக்கூட புடிச்சு குலுக்கலை; அசால்டா வணக்கம்ன்னு சொல்லி கையை கூப்பிட்டா. அப்படீன்னா என்ன அர்த்தம்?”

“நீயே சொல்லுடா”

“அவ செவப்பு; நான் கருப்புன்னு அவளுக்கு திமிர்; ஆணவம்; அகங்காரம்; வேறென்னா?”

“அடி செருப்பாலே!” ராணி மனதுக்குள் கொதித்தாள். சம்பத் தன் தாயின் காயத்தை, ஆறிய புண்ணை, அதன் தழும்பை சரியாக வருடி கிள்ளிவிட்டான்.

“இன்னைய தேதியில ஆணும், பெண்ணும் ஹாய்ன்னு சொல்லி, கையை குலுக்கறது ரொம்ப சாதாரண விஷயம்மா….”

“புரியுதுடா எனக்கு..”

“சுகன்யாவுக்கு என் கையை குலுக்க பிடிக்கலையா? ரொம்ப நார்மலான ஒரு காரியத்தை அவ செய்யாததால, என்னுடைய ஆர்வத்தை புரிஞ்சுக்காததாலே, அவ மகாத்திமிர் புடிச்சவன்னுதான் அந்த சமயத்துல எனக்குப் பட்டுது.”

“ம்ம்ம்….சரிப்பா… அவ கைகுலுக்கலைன்னா என்ன? இதை நீ ஏன் இவ்வளவு சீரியஸா எடுத்துக்கறே?”

“எம்மா … இந்த எண்ணம் சரியோ தப்போ இந்தப் மனப்போக்கை என்னால மாத்திக்கமுடியலை.”

“இது தப்புடா சம்பத்து… எல்லா பொண்ணுங்களும் அப்படி இல்லடா” ராணி தன்னால் முடிந்தவரை, தன் மகனை அவனுடைய வழக்கமான, இயல்பான மனநிலைமைக்கு கொண்டு வர முயன்றாள்.

“எம்ம்மா… நீ செவப்பா, அழகா இருக்கியே! என்னை மட்டும் ஏம்மா கருப்பா பெத்தே?” அவன் குரலில் அழுகை பீறிட்டுக்கொண்டு வந்தது.