கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 28 11

சர்வர் ஸ்வீட்டை கொண்டு வந்து இருவர் எதிரிலும் வைத்தான். இனிப்பை ரசித்து, சுவைத்து சாப்பிடும் மனநிலையில் நல்லசிவம் இல்லை. தன் வீட்டில் சொந்த மகனிடம் குற்றமிருந்ததால், அவர் உள்ளம் குறுகுறுவென்றிருந்தது. நடந்த விஷயம் இவனுக்கு தெரிந்து விட்டாதா? மனதுக்குள் நிம்மதியில்லாமல் தவித்தார்.

“மாமா… நம்ம சுகன்யாவுக்கு வர்ற வெள்ளிக்கிழமை, அவகூட வேலை செய்யற பையன், தமிழ்செல்வன்னு பேரு… நல்ல குடும்பம் அவனோடது, கண்ணுக்கு நெறைவா இருக்கான்; பெத்தவங்களும் தங்கமானவங்க; பசங்க ஒருத்தரை ஒருத்தர் விரும்பங்கறாங்க; சுகன்யாவும் அவனையே பண்ணிக்கறேங்கறா; சட்டு புட்டுன்னு நிச்சயம் பண்ணிடலாம்ன்னு நெனைக்கறோம்… பெரியவங்க நீங்களும், ராணி அக்காவும், சம்பத்தோட, விசேஷத்துக்கு அவசியமா வரணும்.” ரகு நிதானமாக பேசினான்.

“ம்ம்ம்….” நல்லசிவம் வாயில் வார்த்தை முழுசா வரவில்லை.

“எங்க வீட்டு மாப்பிள்ளை குமாரும், என் அக்காவும் நாளைக்கு உங்க வீட்டுக்கே நேரா வந்து அழைப்பாங்க… தாய் மாமன் நான், உங்களுக்குத் தித்திப்பு கொடுத்து விஷயத்தைச் சொல்லிட்டேன்… என்னடா நம்ப ஃப்ரெண்டு இப்படி ரோட்டுல வெச்சு அழைக்கறானே நீங்க நெனைக்கக்கூடாது…” ரகுவின் முகத்தில் ஒரு திருப்தி இழையோடிக் கொண்டிருந்தது.

“ரொம்ப சந்தோஷம் ரகு… உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா… நோ ஃபார்மாலிட்டீஸ் ப்ளீஸ்…”

“மாமா… நீங்க ஏதோ சொல்ல வந்தீங்க .. நான் குறுக்குல பேசிக்கிட்டேப் போறேன்.. நீங்க கொஞ்சம் டல்லா இருக்கற மாதிரி தெரியுது… உடம்புக்கு ஒண்ணுமில்லயே?” கரிசனத்துடன் பேசிய ரகு போண்டாவை தேங்காய் சட்டினியில் அழுத்தி மென்று தின்றுக்கொண்டிருந்தான்.

“ரகு ஒரு முக்கியமான விஷயம்… உன் கிட்ட கொஞ்சம் தனியாப் பேசணும்.” நல்லசிவம் தணிந்த குரலில் இழுத்தார்.

“சொல்லுங்க…நாமத் தனியாத்தானே இருக்கோம்…”அவன் புன்னகைத்தான்.

“என் புள்ளை சம்பத் புத்திக்கெட்டுப் போய் ஒரு சின்னத் தப்பு பண்ணிட்டான் ரகு… அவன் தரப்புல நான் உன் கிட்ட மொதல்ல மன்னிப்பு கேட்டுக்கறேன்…” நல்லசிவத்தின் குரல் தழுதழுத்து கண்கள் கலங்க ஆரம்பித்தது.

“மாமா… என்னப் பேசறீங்க… என் கிட்ட நீங்க மன்னிப்பு கேக்கறதா?” ரகு சட்டென எழுந்து அவர் பக்கத்தில் உட்கார்ந்தான்.

“ஆமாம்பா ரகு… நான் சொல்ற விஷயத்தை உன் மனசோட வெச்சுக்கோ.. உன் குடும்பத்துல வேற யாருக்கும், எப்பவும் இது தெரியவேணாம்… ப்ளீஸ்… இது என் ரெக்வெஸ்ட்… உன் உறவா நான் இதைக் கேக்கலை. நண்பனா கேக்கிறேன். இந்த விஷயம் உன் மாப்பிளை குமாருக்கோ அல்லது சுந்தரிக்கோ தெரிஞ்சா.. நம்ம உறவுகாரங்க யார் மூஞ்சிலேயும் என்னால இனிமே முழிக்கவே முடியாது…” சொல்லிக் கொண்டே அவன் முகத்தை அதைரியமாக நிமிர்ந்து பார்த்தார்.

“மாமா … ஏன் பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசறீங்க… நான் இருக்கேன்ல்லா… முதல்ல விஷயத்தைச் சொல்லுங்க..” ரகுவின் முகத்தில் குழப்பம் திரையிட்டிருந்தது.

சம்பத், சுகன்யாவை காலையில் சந்திக்க சென்றதிலிருந்து, தன் வீட்டில் அதனால் நடந்த பெரிய சண்டையையும், ரகளையையும், சுகன்யாவை தன் மருகளாக்கி கொள்ளவேண்டும் என்ற தன் மனைவியின் ஆசையையும், கோபத்தில் தான் தன் மகனையும், மனைவியையும், வீட்டை விட்டே வெளியேற சொன்ன விஷயம் வரை, அவனிடம் விவரமாக சொன்னார்.

“ப்ச்ச்ச்… ம்ம்ம்ம்… நம்ம சம்பத்தா இப்படி பண்ணிட்டான்… என்னால நம்ப முடியலியே?”

ரகு தன் தாடையை சொறிந்து கொண்டிருந்தான். உள்ளுக்குள் அவனுக்கு கோபம் கனன்று கொண்டிருந்தது. ஆனாலும் பொறுமை… பொறுமை என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டான். இந்த பக்கம் பழைய உறவு; அந்தப் பக்கம் புது உறவு… எதை விடுவது? … எதை சேர்த்துக்கொள்வது…?

“ரகு, இந்த பிரச்சனையை நீதான் காதும் காதும் வெச்ச மாதிரி ஒரு முடிவுக்கு கொண்டு வரணும்… எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலை… என் பிள்ளையால, அவன் பண்ண முட்டாள்தனமான காரியத்தால, வெள்ளிக்கிழமை நடக்க இருக்கற நிச்சயத்தார்த்தமோ, சுகன்யா கல்யாணமோ எந்தவிதத்திலேயும் பாதிக்கப்படக்கூடாது…”