கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 21 7

அம்மா எங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட சந்தோஷமான சமாசாரத்தை சுகன்யா கிட்ட சொல்லனுமுன்னு நான் துடிக்கிறேன். என்னைத்தான் சனி புடிச்சு ஆட்டறானே? என் சனியன் புடிச்ச நேரம், நான் எங்க போனாலும் எனக்கு முன்னே அது போய் நிக்குது? சுகன்யாவை லைன்ல புடிக்கறதே பெரிய பாடா இருக்கே?

லீவுல இருக்கற அவளை, அவ பாஸ் சாவித்திரி, அஃபிஷியல் வேலை எதுக்காவது தொந்தரவு பண்ணப் போறான்னு, செல்லை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வெச்சிருக்காளா? அவ ஆஃபீஸ் வேலைக்கு எப்பவுமே பயப்பட்டதே கிடையாதே? லீவு நாள்ல கூப்பிட்டா கூட முகம் சுளிக்காம ஆஃபீஸுக்கு போறவளாச்சே? அவ செல்லு கெட்டு கிட்டு போயிடுச்சா? ம்ம்ம்… அப்படித்தான் எதாவது ஆயிருக்கணும். ஆனா எனக்கு இப்ப அவ கிட்ட எப்படியாவது பேசியே ஆகணும்.

எரிச்சலுடன் தன் தலையை சொறிந்து கொண்டிருந்த செல்வாவுக்கு, திடிரென சுகன்யாவின், மாமா ரகுவின் செல் நெம்பர் தன்னிடம் இருப்பது நினைவுக்கு வந்தது. நான் கையில வெண்ணையை வெச்சுக்கிட்டு நெய்யுக்கு அலையறேன்; ரகுராமன் கிட்ட பேசினா அவர் கும்பகோணத்து நெம்பர் ஏதாவது கொடுக்க மாட்டாரா? காலையிலேருந்து எனக்கு இது தோணவே இல்லையே? எப்பேர் பட்ட மாங்கா மடையன் நான்?

“சார் … நான் செல்வா பேசறேன்” தயங்கி தயங்கி ரகுவிடம் பேசினான்.

“சொல்லுங்க தம்பி … எப்படியிருக்கீங்க… வீட்டுக்கு வந்துட்டீங்கன்னு உங்கப்பா சொன்னார் ..”

“ஆமாங்க …”

அப்பாவும் இவரும் ஒருத்தரோட ஒருத்தர் பேசிக்கிறாங்களா என்ன? அப்பா என் கல்யாணத்தை கிடப்புல போட்டு வெச்சிருக்காருன்னுல்ல நான் நினைச்சுக்கிட்டிருக்கேன்? அவன் மனதுக்குள் மகிழ்ச்சி மத்தாப்பொன்று மின்னியது.