கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 21 7

சம்பத் சுகன்யாவை எட்டு வருஷமா காதலிக்கற கதை அவங்களுக்கு தெரிஞ்சா, இந்த வீடு குருஷேத்திரமா ஆயிடும். அது மட்டுமா, பழைய குருடி கதவை தொறடிங்கற மாதிரி, உன் அம்மா சுகன்யாவை எடுபட்டவ, கூறு கெட்ட சிறுக்கின்னு, கூப்பாடு போடுவாங்க. அதை உன்னால் நிஜமா தாங்கிக்க முடியுமா? அம்மா கிட்டவும் இந்த விஷயத்தை பேசமுடியாது.

ம்ம்ம் … எல்லாத்துக்கும் மேல, முந்திரிகொட்டை மாதிரி, நானே என் வாயாலே, சுகன்யா மாமன் ரகுகிட்டே, என் அம்மா எங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்கண்ணு டமுக்கு அடிச்சிட்டேன். அத்தோட வுட்டனா? அந்தாளுக்கிட்டவே சுகன்யா கிட்ட பேசறேன்னு நெம்பரை வாங்கி, சம்பத் பேச்சைக் கேட்டுக்கிட்டு, சுகன்யாகிட்ட இதுவரைக்கும் பேசாம, பொட்டைப் பயலாட்டாம் பதுங்கி கிடக்கிறேன்? அந்தாளு சுகன்யா கிட்ட பேசி, கல்யாணத்துக்கு என் அம்மா சம்மதம் சொன்னதை இன்னேரம் சொல்லிக் கூட இருக்கலாம். அப்படி அவரு சுகன்யா கிட்ட சொல்லியிருந்தால், இன்னேரம் சுகன்யா எனக்கு போன் பண்ணி இருக்க மாட்டாளா?

நான் ஒரு முண்டம். சுகன்யா போன் பண்ணுவான்னு நெனைச்சுக்கிட்டு இருக்கேன்? அவதான் பிடிவாதமா, ஒரு வாரமா என் கிட்ட பேசறதை நிறுத்தி வெச்சிருக்காளே? எல்லாத்துக்கும் மேலே ஏற்கனவே நான் வீட்டுக்கு வந்தது அவளுக்கு தெரிஞ்சும் வீம்பா பேசாமலே இருக்கா.

ம்ம்ம்… சத்தியமா சுகன்யாகிட்ட இந்த விஷயத்தை கேக்கறதுக்கு எனக்கு மனசுல தைரியமில்லே? தைரியம் என்ன? இஷ்டமும் இல்லே? ஆனா இந்த பாழும் மனசு என்னை அலைக்கழிக்குதே? இப்ப நான் என்னப் பண்றது? இந்த வேதனையை வெளியில சொல்லாம மனசுக்குள்ள வெச்சுக்கவும் என்னால முடியலையே? யார்கிட்டவாவது இதை சொல்லித்தான் ஆகணும். இல்லேன்னா எனக்கு பைத்தியம் பிடிச்சிடும்? இதை யார் கிட்ட சொல்றது?

சுகன்யாவோட ரகுவிடமோ அல்லது அவ அம்மா கிட்ட இந்த மாதிரி ஒரு விஷயம் எனக்கு தெரியவருதுன்னு … நோ … நோ … என்னால என் சுகன்யா கிட்டவே பேச தைரியமில்லாம இருக்கப்ப அவங்க வீட்டுல யாருகிட்ட பேசறது? வேற வினையே வேணாம்.

எனக்காக இப்ப என் அப்பா முழுசா கல்யாண வேலையில இறங்கியாச்சு? இப்ப கல்யாணத்தை கொஞ்ச நாள் தள்ளிப் போடுங்கன்னோ, இல்லை வேண்டாம்ன்னோ, எப்படி நான் சொல்லப் போறேன்? என்னக் காரணத்தை சொல்லுவேன்? பேசாம சுகன்யாவை நேரா போய் பாத்துடலாமா?

என்னன்னு சொல்லிட்டு வீட்டை விட்டு வெளியில போறது? சுகன்யாவை பாக்கப் போறேன்னா … எல்லாம் துணியை வழிச்சுக்கிட்டு சிரிப்பாங்க … நாலு நாளுலே கும்பகோணம் போகத்தான் போறோம்பாங்க… அய்யோ! என் மனசுல இருக்கறதை யாருகிட்டவாவது சொல்லாட்டா எனக்கு தலை வெடிச்சுடும் போல இருக்கே! என் மன வேதனையை இப்ப நான் யார்கிட்ட சொல்லுவேன்? ஒரே ஒருத்தன் கிட்ட நான் நம்பிக்கையா பேசலாம். இப்ப அவன் எங்கே இருக்கானோ?காலம் சென்ற, நிலக்கிழார், ஸ்ரீமான் கீழப்பந்தல் வெங்கிடேசவரதரங்கன் சீனுவாசன், தன் சீமந்த பேரனுக்கு, தன் தாத்தாவின் பெயரான, பாற்கடலில் பள்ளிக்கொண்டவன் திருநாமத்தை

“சீனிவாசன்” என ஆசையுடன் சூட்டி, தன் மார்பின் மேல் புரண்டு வளர்ந்த குழந்தைக்கு, அவனுடைய இரண்டு வயதிலேயே ஆண்டாள் அருளிய திருப்பாவையை அறிமுகம் செய்து வைத்தார். அவருடைய முன்னோர்கள், தன் காலால் மூவுலகையும் அளந்தவனுக்கு, கோவில் எழுப்பி சேவகம் செய்த பெருமையை உடையவர்கள். பரம்பரை பரம்பரையாக காஞ்சி வரதராசனுக்கு கருட சேவை உற்சவத்தை வெகு காலம் உபயதாரர்களாக இருந்து நடத்தியவர்கள்.

சீனு என்கிற
“கீழப்பந்தல் நாராயணன் சீனுவாசன்” தன் வலக்கையில் விஸ்கி கிளாசும், இடக்கையில் புகையும் சிகரெட்டுமாக, தன்னை மறந்து, தன் சுற்றுப்புறத்தை மறந்து, பிரம்மாண்டமான ஆனந்தஜோதியில் தன்னை ஐக்கியமாக்கிக் கொண்டிருந்தான் (கட்டிங் விட்டதுக்கு பிறகு தனக்கு கிடைப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் போலியான மன நிம்மதியை
“ஆனந்த ஜோதி” என சொல்லுவது சீனுவின் வழக்கம்). சீனு எப்படி கட்டிங்குக்கு அடிமையானான்? ஏன் அடிமையானான் என்பது இந்த கதைக்கு தற்போது அவசியமில்லாத ஒன்று.