கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 21 7

நான் துரியோதனன். துரியோதனன் இளவரசன்டி. மகாபாரதம் தெரியுமா உனக்கு? நானும் ஒரு ராஜகுமாரன்தாண்டி. திரௌபதி துரியோதனனை அலட்சியமா பாத்து சிரிச்சா. நீ என்னைப் பாத்து கிண்டலா சிரிச்சுட்டுப் போறே? நெறைஞ்ச சபையில அவ துணியை அவன் அவுத்தான். அதுக்கப்புறம் பதினெட்டு நாள்ல ஊரே அழிஞ்சுது. அதெல்லாம் சரிதான்!

நான் ஒரு ரோஷமான ஆம்பிளை. என் ஆம்பிளை ஈகோவை நீ குத்திப் பாத்துட்டே? அந்த குத்தலை என்னால இப்ப தாங்கிக்க முடியலை. என் மனசு தவிக்குது. அந்த மாதிரி நீயும் தவிக்கணும். தவிச்சு தவிச்சு அந்த வலியை நீயும் என்னை மாதிரி அனுபவிக்கனும்.

நான் நினைச்சா … பத்து நிமிஷத்துல என்னால உன் அழகை அழிச்சு உன் திமிரை அடக்க முடியும். ஆனா ஆயிரம் இருந்தாலும் நானும் படிச்சவன். சமூகத்துல நல்ல அந்தஸ்துல இருக்கற குடும்பத்தை சேர்ந்தவன். உன்னை அவமானப்படுத்தறதுக்காக பயித்தியக்காரன் மாதிரி ஒண்ணு கிடக்க ஒண்ணு புத்திக்கெட்டுப் போய் பண்ணிட மாட்டேன். நான் புத்திசாலி. உன் உடம்புக்கு எந்த தீங்கும் நான் பண்ணப் போறதில்லே. நீ உன் மனசால துக்கப்படணும். நீ உன் மனசுக்குள்ளவே வெளியில சொல்ல முடியாம அழுவணும்.

நான் நல்லவனுக்கு நல்லவன். கெட்டவனுக்கு கெட்டவன். நான் ஒரு விதத்துல கயவாளிதான். என் கயவாளித்தனத்தை நீயும் பாக்கணும். அடியே சுகன்யா, உன்னை என்னால தொட்டுப்பாக்க முடியலை; பரவாயில்லை. என்ன ஆனாலும் சரி… உன்னை அழவைக்காம நான் விடப்போறதில்லை… என்னாலத்தான் நீ அழறேன்னும் உனக்குப் புரியணும். என்னச் செய்யலாம்? சம்பத்தின் மனம் சக்ர வீயூகம் வகுக்க ஆரம்பித்தது.

காப்பி கொண்டாறேன்னு உள்ளப் போனக் கிழவியை காணோம்? எவ்வளவு நேரம் இன்னும் நான் மோட்டு வளையைப் பாத்துக்கிட்டு உக்காந்து இருக்கறது? இங்க இருக்கற ஒவ்வொரு நிமிஷமும் என் இரத்தம் அழுத்தம்தான் அதிகமாகுது? ஒரு தம்மாவது அடிச்சுட்டு வரலாமா? சம்பத் யோசித்துக்கொண்டிருந்தான்.

“என்னடா சம்பத்து … கனகா எங்கடா?” சிவதாணு தன் கோழித் தூக்கத்திலிருந்து விழித்தார்.

“கிச்சன்ல இருக்காங்க; காஃபி போட போயிருக்காங்க தாத்தா..”

“உக்காரு நீ ஏன் எழுந்துட்டே? இதோ நான் ஒரு நிமிஷம் பாத்ரூம் போயிட்டு வந்துடறேன்..”

“ம்ம்ம் …”

சிவதாணு கூடத்திலிருந்து நகர்ந்ததும், செண்டர் டேபிளின் மேலிருந்த கேலக்ஸி மெல்ல சிணுங்கியது. சிணுங்கி அடங்கியது. மீண்டும் சிணுங்கத் தொடங்கியது. கிழவன் – கிழவிக்கும் போன் வருது? லேடஸ்ட் மாடல் வெச்சிருக்கான் … பணம் கொழுத்துப் போயிருக்குது கிழவன் கிட்ட! பேத்தி துள்ளி விளையாடறா? எடுத்துப் பாக்கலாமா? வந்த எடத்துல நமக்கு எதுக்கு வீண் வம்பு?

வேலிப் பக்கம் ஒண்ணுக்கு அடிக்கப் போய்தான் ஒரு ஓணாணை நம்ம ஜீன்ஸூக்குள்ள வுட்டுக்குட்டு அவஸ்தை படறேன்? இப்ப இந்த செல்லை எடுத்துட்டு இன்னொரு ஓணாணையும் உள்ள் ஏன் வுட்டுக்குவானே? செல் விடாமல் மீண்டும் மீண்டும் சிணுங்கவே … சம்பத் தயக்கத்துடன் செல்லை எடுத்து பேசினான்.

“ஹெலோ …”

“மிஸ்டர் சிவதாணு சாரோட நெம்பர் தானே?”

“ஆமாம் நீங்க யாரு? சம்பத் அலட்சியமாகப் பேசினான்.

“ரகு …சார்கிட்டேயிருந்து இந்த நம்பர் கிடைச்சுது …

“அது சரிய்யா … நம்பர் நீங்க யாருக்கிட்ட வாங்கினீங்கன்னா நான் கேக்கிறேன்? … உங்களுக்கு என்ன வேணும்?”

“சார் … நீங்க என்னை தப்பா புரிஞ்சிக்கிட்டீங்கன்னு நெனைக்கிறேன்?”

“யோவ் இங்க யாருக்கும் இன்ஸூரன்ஸ் பாலிஸில்லாம் தேவையில்லை … ஒருத்தன் மாத்தி ஒருத்தன் சும்மா தொந்தரவு பண்ணாதீங்க ..”

“சார் … நான் சொல்றதை கொஞ்சம் முழுசா கேளுங்களேன் …”

“சொல்லுயா … உனக்கு யாருகிட்டே பேசணும்?” சுகன்யா மீது இருந்த எரிச்சலை அவன் இவனிடம் காண்பித்தான்.

“சுகன்யா அங்க வந்திருக்கறாதா ரகு சொன்னார். சுகன்யா இருந்தா அவளை … இல்லே அவங்களை கூப்பிடுங்களேன்…எனக்கு அவங்க கிட்டத்தான் பேசணும்..”

“சுகன்யா இங்கதான் இருக்கா … நீங்க…?” சுகன்யாவின் பேரைக் கேட்டதும், சம்பத்தின் காதுகள் சிலிர்த்துக் கொண்டன. சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்துக்கொண்டான். குரலை தாழ்த்தி பேசினான்.