கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 21 7

அவனருகில் இந்திரா நகரின் இளைய தளபதிகளாக தங்களை நினைத்துக்கொண்டிருக்கும், இரண்டு மூன்று பேர்,
“வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு…” என எம்பி3 ப்ளேயரிலிருந்து வந்து கொண்டிருந்த இன்னிசை மழையில் குளிர குளிர நனைந்து கொண்டிருந்தார்கள். ஒருவன் இடுப்பிலிருந்த லுங்கி நழுவி பட்டை போட்ட அண்டிராயர் பளிச்சிட, பாட்டுக்கு, நடனமாடுவதாக நினைத்து தன் உடலை வருத்திக்கொண்டிருந்தான். மற்றவர்கள் மட்டையாக போய்க் கொண்டிருந்தார்கள்.

வேலாயுதம் குடியிருந்த வீட்டுக்காரரும், அவர் மனைவியும் தங்கள் பெண்ணின் பிரசவத்திற்காக பத்து நாட்களுக்கு வெளியூர் சென்றிருந்த காரணத்தால், அவன் தங்கியிருந்த மாடியறையில் கசப்புத் தண்ணீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஆறாக ஓடிக்கொண்டிருந்தது.

சரக்கில் மிக்ஸ் செய்வதற்காக வாங்கி வைத்திருந்த பெப்ஸி பாட்டில் ஒன்று கவிழ்ந்து விழுந்து, கருமை நிறத்தில் வழிந்து ஓடிக்கொண்டிருப்பதை கூட லட்சியம் செய்யாமல், வெண்ணையில் பளபளக்கும் சிக்கன் மசாலாவில் மிதந்து கொண்டிருந்த லெக் ஃபீஸ் ஆணுடையதா இல்லை பெண்ணுடையதா என அன்றைய சோம பானக் கச்சேரியின் உபயதாரர் திருவாளர் வேலாயுதம் தன் மனதுக்குள் ஒரு தீவிரமான ஆராய்ச்சியில் மூழ்கியிருந்தான். கடைசியில் விவேக் தின்ற காக்கா காலா இல்லாம இருந்தா சரிதான் என்று தன் ரிசர்ச்சை தற்காலிகமாக நிறுத்தினான்.

ஏறக்குறைய, மூன்றாவது லார்ஜ் உள்ளே இறங்கியபின், இதோடு நிறுத்திக்கலாமா இல்லை இன்னோரு சின்ன ரவுண்டு போகலாமா, என மனதுக்குள் வாத பிரதி வாதம் செய்து கொண்டே, சீனு தன் பிரத்யேகமான ஜோதியில் ஐக்கியமாகியிருந்த வேளையில், உடுக்கை இழந்தவனுக்கு கையாக மாறி இடுக்கண் களைபவன் நண்பன் என்ற முதுமொழிக்கிணங்க, நமது கதாநாயகன் செல்வா, தன் மனக்கவலையை போக்கி, தனக்கு ஒரு வழி காட்ட வல்லவன் இந்த வையகத்தில் ஒருவன் இருக்கிறானென்றால அது தன்னுடைய அத்தியந்த நண்பன் சீனு ஒருவனே என ஏக மனதாக முடிவெடுத்து, அலைபேசியில் அவனை அழைத்தான்.

“டிங்க் …டிடிட்ட் ..டிங்க் …. டிங்க் …டிடிட்ட் ..டிங்க் ….”

“சீனு … உன் போன் அடிக்குது மாப்ளே…”

“யார்ரா அவன் பூஜை வேளையில கரடி வுடறான்…” சீனு போனை எடுத்து வேலாயுதத்திடம் எறிந்தான் … என் ஆபீசா இருந்தா நான் செத்துட்டேன்னு சொல்லு …”

“மாப்ளே … யாரோ செல்வின்னு கூப்பிடறா மாப்ளே …வேலாயுதம் போதையில் தன் வாயெல்லாம் பல்லாக மாற, பக்கத்திலிருந்தவன் அவன் கையிலிருந்து போனை பிடுங்கி
“ஹெல்லொ … நீங்க யார் பேசறது” என வடிவேல் ஸ்டைலில் தன் வாயை கோணினான்.

“டேய் தறுதலை வெல்லாயுதம் … இது நம்ம செல்வாடா …செல்வாவை ஒரே நாள்லே செல்வியாக்கிட்டியேடா?
“ஹோ … ஹூ” என அவர்கள் கொக்கரித்தார்கள்.

“டேய் … சீனு … செல்வா பேசறேன்…”

“சொல்லுடா மச்சி … எப்படியிழுக்கே” சீனுவின் குரலில் உற்சாகம் மிதமிஞ்சியிருந்தது. அவனுடைய நாக்கு இலேசாக குழற ஆரம்பித்திருந்தது.

“மாப்ளே! எங்கடா இருக்கே?” சீனுவின் உளறலை கேட்டவுடனேயே, அவன் இன்றைக்கு வெற்றிகரமாக எவனுடைய பாக்கெட்டுக்கோ ப்ளேடு போட்டு
“கட்டிங்” உற்சவம் நடத்திக் கொண்டிருக்கிறானென்று செல்வாவுக்கு புரிந்துவிட்டது