கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 21 7

“எல்லாம் உன் இஷ்ட்டம்ன்னு சொல்லியாச்சு … அப்புறம் ஏண்டா நீ என் கிட்ட வீண் பேச்சு பேசறே?”

“அம்மா … நீங்க ரெண்டு பேரும் திருப்பியும் ஆரம்பிச்சிடாதீங்க … என்னை கொஞ்ச நேரம் படிக்க விடுங்க; அவன் கேக்கும் போது அவனுக்கு நான் ரெண்டு தோசை ஊத்திக் குடுக்கறேன்; நீ போய் படும்மா…
“ மீனா ஒரு வாரத்துக்கு பிறகு அன்றுதான் தன் கல்லூரிப் புத்தகத்தை கையில் எடுத்திருந்தாள்.

மல்லிகா, கிச்சனை சுத்தம் செய்துவிட்டு, முகத்தையும், பின் கழுத்தையும், நன்றாக சோப்பு போட்டுக் கழுவிக்கொண்டவள், தன் சேலை முந்தானையால் முகத்தைத் துடைத்தவாறே, மறு கையில் பால் சொம்புடன் படுக்கையறைக்குள் நுழைந்தாள்.

***

செல்வா மனதுக்குள் சுண்ணாம்பாய் வெந்து கொண்டிருந்தான். நெலமை புரியாம அம்மா இப்பத்தான் சாப்பிடு சாப்பிடுன்னு என் உயிரை எடுக்கிறா? நேரத்துக்கு புள்ளை சாப்பிடலேயேன்னு அம்மா மனசு கஷ்டப்படுது. அது எனக்கு புரியலையா? என் மனசு கனத்துப் போயிருக்குது. மனசுல இருக்கற பாரத்தை எறக்கற வரைக்கும் எனக்கு எப்படி பசிக்கும்? என் பாரத்தை நான் யார் தோள்ல எறக்கி வெப்பேன்?

மதியம் சுகன்யாவிடம் சந்தோஷமாக கல்யாண விஷயத்தை சிக்ஸர் அடிக்க முயற்சி பண்ண எனக்கு, என் கல்யாண நாடகத்துல புதுசா சீனுக்குள் வந்த பௌலர் சம்பத் போட்ட கூக்ளியில், என் நடு ஸ்டம்ப் எகிறி க்ளீன் போல்ட் ஆகி, பெவிலியனுக்கு திரும்ப வந்திருக்கிற என் மன வேதனையை நான் யார்கிட்ட சொல்லி அழறது?

சம்பத் சொன்ன கதையை கேட்டதுலேருந்து, மொத்தமா என் மனசு குழம்பி சேறாகிப் போயிருக்கேன்? இப்ப எனக்கு சோறு ஓண்ணுதான் கேடா? ஒரு வேளை தின்னலன்னா செத்தா போயிடுவேன்?

செல்வா தன் மனதுக்குள் எரியாமல் புகைந்து கொண்டிருந்தான். மெதுவாக எழுந்து வெரண்டாவிற்கு வந்த செல்வா, தன் முகத்தில் அடித்த இதமான குளிர் காற்றை நீளமாக இழுத்து, மார்பை முழுமையாக நிறைத்துக்கொண்டான். குளிர்ந்த காற்று நெஞ்சுக்குள் பரவியதும், மனம் ஓரளவிற்கு இலேசாகியதாக உணர்ந்தவன் அங்கேயே வெறும் தரையில் நீளமாக படுத்துக் கொண்டான். உஷ்ணமான உடம்புடன், ஜில்லென்ற தரையில் கிடந்தவன் மனதின் எண்ணப் பறவைகள் மீண்டும் சிறகடிக்க ஆரம்பித்தன.

முதல்லே வித்யா, சுகன்யாவை எவனோ ஒரு சம்பத் பொண்ணு பாக்க போறான்னு ஒரு சின்ன கல்லைத் தூக்கி என் தலையில போட்டா; நான் சொல்றது உண்மையா இல்லையா? அதான் முக்கியம்; யார் சொன்னதுங்கறது முக்கியமில்லேன்னு புதிரா பேசினா; அப்ப அது அவ்வள பெரிய விஷயமா எனக்குத் தோணலை.

எப்படியோ இங்க அங்க அலைஞ்சு அவ இருக்கற எடத்தை கண்டுபிடிச்சி போனைப் போட்டா … வித்யா சொன்ன அந்த சம்பத்தே, சிவதாணு வீட்டுல போனை எடுத்து … என் தலை மேல பெட்ரோலை ஊத்தி நெருப்பை அள்ளிக் கொட்டி, மொத்தமா என் கரண்ட்டை புடுங்கிட்டான். அப்ப வித்யா சொன்னது முழு உண்மைதானே?

சுகன்யாவா? என் சுகன்யாவா இப்படி பண்ணியிருக்கா? சுகன்யா என்னை காதலிக்கறதுக்கு முன்னாடி, அவளுக்கு இன்னொரு ஆணுடன் பழக்கம் இருந்திருக்கிறதா? ஒருத்தன் அவளை எட்டு வருஷமா காதலிச்சிருக்கான். இந்த விஷயத்தை முழுசா மறைச்சு என் கிட்ட அவ பழகியிருக்காளே? என்னால இதை நம்பவும் முடியவில்லை. நம்பாம இருக்கவும் முடியலையே?

செல்வா … அப்படியே சுகன்யா யார்கூடவாது பழகியிருந்தா உனக்கு என்னடா? அது முடிஞ்சுப் போன விஷயம். இப்ப அவ உன் மேல உயிரையே வெச்சிருக்கா? அதுதானேடா முக்கியம்? அவளோட பழசை நினைச்சு நீ ஏண்டா அர்த்தமில்லாம கவலைப் படறே?

சுகன்யா ஒருத்தன்கூட பழகினதிலே எனக்கு எந்த பிரச்சனையும் இல்லே? அவ அதை என் கிட்ட ஏன் மறைச்சா? அதுதான் இப்ப என் மனசுக்குள்ள முள்ளா இருந்துகிட்டு குத்துது? கடைசியிலே என் சுகன்யாவும், சராசரி பெண்களில் ஒருத்திதானா? அவ மேல நான் என் உயிரையே வெச்சிருக்கேனே?