கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 21 7

“சுகன்யா எத்தனை பேரை கல்யாணம் பண்ணிக்கப் போறான்னு நெனைச்சேன்! … சிரிப்பை அடக்க முடியலை! … அதான் சிரிச்சேன்! …” சம்பத் தன் ஆப்பை மெதுவாக கூராக்க ஆரம்பித்தான்.

“மிஸ்டர் … நீங்க என்னப் பேசறீங்க? இது சிவதாணுப்பிள்ளையோட நெம்பர்தானே? ராங்க் நம்பர் ஒண்ணுமில்லேயே? சுகன்யாவோட தாத்தா வீட்டுல யாரு இப்படி சுகன்யாவைப் பத்தி தப்பா பேசுவாங்க? செல்வாவால் தன் காதுகளை நம்ப முடியவில்லை.

“தமிழ் செல்வா … நீங்க சரியான நெம்பர்லதான் .. அதுவும் சரியான ஆள் கிட்டதான் பேசறீங்க … என் பேரு சம்பத்குமார் … என்னை ஆசையா எல்லாரும் சம்பத்துன்னு கூப்பிடுவாங்க; சுகன்யாவோட அத்தைப் பையன் நான் … சுகன்யாவோட முறை மாப்பிள்ளை கிட்டத்தான் பேசிகிட்டு இருக்கீங்க..” கூராக்கிய ஆப்பில் சிறிது தேங்காய் எண்ணையையும் பூச ஆரம்பித்தான்.

“சார் … ஆனா நீங்க சுகன்யாவைப் பத்தி தப்பா பேசற மாதிரி எனக்கு தோணுது?”

“என்னா நான் தப்பா பேசிட்டேன் இப்ப? கேக்கற உனக்கே கோவம் வருதுல்லே? சுகன்யாவை அவ ஸ்கூல் டேஸ்லேருந்தே என் மனசுக்குள்ள வெச்சிக்கிட்டு மருகிக்கிட்டு இருக்கேனே? அது தப்பாய்யா?”

“ம்ம்ம்…” செல்வா முனகினான்.

“என்னப் பண்றது? நான் கொஞ்சம் கருப்பா பொறந்துட்டேன் … தமிழ் நாட்டுல கருப்பா இருக்கறவன் தாய்யா பெரிய மனுஷனா, வெள்ளையும் சள்ளையுமா உலாவறான். சுகன்யாகிட்ட செத்த நேரம் முன்னாடிதான் கிளாட் டு மீட் யூன்னு கை நீட்டினேன். சுகன்யாவுக்கு என் கருப்பு கையை புடிச்சு குலுக்கறதுக்கு இஷ்டமில்லே?

“சார் … நீங்க சுகன்யாவை கூப்பிடுங்க ப்ளீஸ் …”

“கண்டிப்பா கூப்பிடறேன் … நீங்க தாராளமா உங்க லவ்வர் கிட்ட பேசுங்க … நான் சொல்றதை கொஞ்சம் ஒரு பத்து செகண்ட் கேளுங்க..”

“ம்ம்ம் ..” செல்வா இது என்னடா இது ஒரு பைத்தியக்காரன் கிட்ட மாட்டிக்கிட்டேன் போல இருக்கே … என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தான்.

“நடுவுல என் தங்கம் … காலேஜ் அது இதுன்னு வெளியூர்லல்லாம் போய் படிச்சாளா? மெட்றாஸ்ல்ல வேலை வேற கிடைச்சிடுத்து … இப்ப நம்பளைப் பாத்தா பாக்காத மாதிரி ஒதுங்கறா … சார்… நீங்களே சொல்லுங்க இது ஞாயமா? நான் எதாவது தப்பா சொல்றேனா? எல்லாத்துக்கும் மேல, என் கிட்டயே, நீங்க என் மாமன் பொண்ணை கட்டிக்கப்போறேன்னு நோட்டீஸ் குடுக்கறீங்க … இது ரைட்டா?

“அயாம் சாரி மிஸ்டர் சம்பத் … ஆனா இதுல நான் என்னப் பண்றது? … சுகன்யா விருப்பம் தானே இதுல முக்கியம்? இப்ப உங்க கிட்ட என்ன சொல்றதுன்னு எனக்கு புரியலை?”

“நான் தெளிவா சொல்றேன் நைனா.. நீ நல்லா கேட்டுக்கோ … காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் அடிச்சுட்டு போனானாம் … இந்த கதை உனக்குத் தெரியுமா? எட்டு வருசமா நான் அவளை காதலிக்கறேன்! .. நேத்து வந்த நீ என் சுகன்யாவை கல்யாணம் பண்ணிக்கிட்டு சீர் வரிசை வாங்கிக்கிட்டு போவே? நான் என்னா உன் பஸ்ட் நைட்ல பக்கத்துல நின்னு வெளக்கு புடிக்கவா?” சம்பத் தன் ஆப்பை அழுத்தமாக செருகினான்.

“ம்ம்ம் ….”

“என்னம்ம்மா கண்ணு … சத்தத்தையே காணோம் …? ஹார்ட் அட்டாக்கா? போய் கீய் தொலைச்சுடாதே? சுகன்யா அப்புறம் ரொம்ப வருத்தப்படப் போறா?”

“மிஸ்டர் சம்பத் …” செல்வாவின் குரல் நிஜமாகவே அவன் தொண்டையிலிருந்து எழவில்லை..

“கடைசியா ஒரே ஒரு வார்த்தை … உன் தோலு என்னா செவப்பா? … இல்லே கருப்பா? சுகன்யாவோட அப்பனும் ஆத்தாளும் அவளை எனக்கு கட்டி குடுக்க மாட்டேன்னு சொல்றாங்களே? அதுக்கு காரணம் நீதானா?

“பிளீஸ் .. உங்களால சுகன்யாவை கூப்பிட முடியுமா …. முடியாதா?”

“டேய் … செல்வா … நான் என்னா மாமா வேலையை பாக்கறேன்? சுகன்யாவை கூப்பிட்டு உன் கையில தாரை வாத்து குடுக்கறதுக்கு? மாசம் முழுசா சொளையா ஒரு லட்சம் சம்பாதிக்கற எஞ்சினீயர்டா! அமெரிக்காவுலேருந்து வாடா வாடான்னு நாலு கம்பெனிக்காரன் கூவுறான்! இப்ப லைனை கட் பண்ணு … ரெண்டு நிமிஷம் கழிச்சி திருப்பியும் போடு! கிழவன் சிவதாணு கக்கூஸுக்கு போயிருக்கான்! வந்து சுகன்யாவை உனக்கு கூட்டி குடுப்பான் … வெச்சிட்டா” சம்பத் செல்வாவின் பதிலுக்கு காத்திராமல் லைனை கட் பண்ணி … ஞாபகமாக செல்வாவின் நம்பரை நோட் பண்ணிக்கொண்டு, செல்லை செண்டர் டேபிளின் மேல் வைத்தான்.

ஆப்பு அழகா எறங்கிடுச்சு … வெச்ச எனக்கும் வலிக்கல … வெச்சிக்கிட்டவனுக்கும் வலிக்கலை. நேரம் போவ போவ நான் போட்ட பிட்டை திருப்பி திருப்பி அந்த பைத்தியக்கார செல்வா மனசுக்குள்ளவே ரீவைண்ட் பண்ணிப் பாப்பான்… அப்ப வலிக்கும் … சம்பத் தன் மனசுக்குள் திருப்தியுடன் சிரித்துக்கொண்டான்.

“டேய் செல்வா … நீ வந்து சாப்ட்டீனா என் வேலை முடியும். மணி எட்டாச்சு. எனக்கு நேரத்துல தூங்கணும்…” மல்லிகாவுக்கு அவனை கூப்பிட்டு கூப்பிட்டு அலுத்துப் போயிற்று.

“அம்மா … எனக்கு பசிக்கும் போது நான் சாப்பிட்டுக்கிறேன் … நீ போய் நிம்மதியா தூங்கு … தூங்கறதை விட்டா உனக்கு வேற என்ன கவலை?” மதியமே அவனுக்கு சாப்பிட பிடிக்கவில்லை. வேண்டா வெறுப்பாக மல்லிகா போட்டதை, எதுவும் பேசாமல் அவசர அவசரமாக விழுங்கியிருந்தான்.