கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 21 7

எனக்கு ஆக்ஸிடெண்ட் ஆச்சு; அடிபட்டுக்கிட்டவன் அப்படியே போயிருக்கக் கூடாதா? நடு ரோடுல செத்திருந்தா கூட பரவாயில்லே? நான் எதுக்காக பொழைச்சு வந்தேன்? என்னை சந்திக்கறதுக்கு முன்னாடியே, சுகன்யாவுக்கும் இன்னொருத்தனுக்கும் பழக்கம் இருந்தது; நடுவுல அவங்க பிரிஞ்சிட்டங்கான்னு தெரிஞ்சுக்கறதுக்கா? எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகப் போற நேரத்துல, சம்பத்துக்கு சுகன்யா மேல இன்னும் காதல் இருக்குன்னு அவனே எங்கிட்ட சொல்லி, அதை நெனைச்சு நெனைச்சு நான் இப்படி மனசுக்குள்ளவே புழுங்கறதுக்கா பொழைச்சுக்கிட்டேன்?

சுகன்யா ஒருத்தன் கூட நட்பா பழகியிருந்திருக்கலாம். அது தப்பில்லே? ஆனால் அதை என் கிட்ட எப்பவும் சொன்னதேயில்லையே? அவர்களுடைய நட்பு எது வரைக்கும் போயிருந்திருக்கும்? எதனால அவர்கள் நட்பு நடுவில் நின்று போனது? சம்பத் அந்த நட்ப்பை மீண்டும் ஏன் புதுப்பிக்க விரும்புகிறான்? இதில் சுகன்யாவுக்கு எந்த அளவுக்கு உடன்பாடு? டேய், செல்வா, போதும் நிறுத்துடா. உன் மனசை அலைய விடாதே! இதுக்கு மேல இதை நோண்டாதே…. இப்போதைக்கு சும்மா இரு. சும்மாவா சொல்றாங்க? அம்பட்டன் குப்பையை கிளறினா மசுருதாண்டா மிஞ்சும்ன்னு?

சுகன்யாவும்தான் எதுக்காக என்னைப் பொழைக்க வச்சா! எதுக்காக? இப்படி என்னை கொல்லாம கொல்றதுக்கா? டேய் பைத்தியக்காரா! சும்மா சும்மா ஏண்டா சாவைப் பத்தியே நினைக்கிறே? இப்ப என்னடா ஆயிடிச்சி? இன்னும் நிச்சயதார்த்தம் கூட நடக்கலை. உன் அப்பாவும், இந்த கல்யாணத்துல எங்களுக்கு முழு சம்மதமுன்னு சுகன்யா வீட்டுக்கு இன்னும் கன்ஃபார்ம் பண்ணலை. அப்புறம் என்னடா? எத்தனை எடத்துல, தாலி கட்டறதுக்கு அரை மணி நேரத்துக்கு முன்னே கல்யாணம் நின்னுப் போயிருக்கு. அவங்கல்லாம் திரும்பவும் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழலையா? ஆசைப்பட்ட ஒரு பொண்ணு உனக்கு கிடைக்கலன்னா, உன் வாழ்க்கையே முடிஞ்சுப் போச்சா? நீ எதுக்கு சாவைப் பத்தி இப்ப நினைக்கணும்?
டேய் செல்வா! நில்லுடா … நில்லுடா! காலையிலத்தான் கன்யாவை விட்டா வேற எவளையும் திரும்பிப் பாக்கமாட்டேன்னு நடுக்கூடத்துல உக்காந்து சத்தியம் பண்ணே? சபதமெடுத்து இன்னும் முழுசா எட்டு மணி நேரம் கூட முடியலை. கல்யாணம் நின்னா என்னன்னு எப்படிடா உன்னால நினைக்க முடியுது?

மீனா உனக்காக அம்மாகிட்ட எவ்வளவு தூரம் ஆர்க்யூ பண்ணா? மீனா கிட்ட சம்பத்து சொன்னதை சொல்லுவியா? சுகன்யாவை இன்னொருத்தனும் கல்யாணம் பண்ண டிரை பண்ணிக்கிட்டு இருக்கான்? அவங்களுக்குள்ள ஏற்கனவே பழக்கம் இருந்திருக்கும் போலத் தெரியுது. இது எனக்கு மனசை உறுத்தறதுன்னு உன் தங்கைக்கிட்ட உன்னால சொல்ல முடியுமா? சுகன்யா இப்ப அவளோட பெஸ்ட் ஃப்ரெண்ட் ஆயிட்டா; அவ கிட்ட அவளைப் பத்தி எடக்கு மடக்கா பேசினா, தூ … நீயும் ஒரு சராசரி ஆம்பிளைத்தானா என் மூஞ்சி மேலேயே காறித் துப்பினாலும் துப்புவா …? இந்த விஷயத்தை இவ கிட்ட பேசக்கூடாது. செல்வா தன் மனதிலிருந்து தன் தங்கை மீனாவின் பெயரை அழித்தான்.

உன் அப்பா, எப்பவும் அனாவசியமா எதுக்கும் வாயைத் தொறக்காத மனுஷன். அவரு எப்பவும் உன் அம்மா பேச்சை தட்டாம, அவ சொல்றதுக்கு அதிகமா மறுப்பு சொல்லாமா ஸ்மூத்தா லைபை ஓட்டிக்கிட்டு இருக்கறவரு. அவரே முதல் தரமா, உன் கல்யாண விஷயத்துல, தன் பொண்டாட்டிங்கறதுக்காக அவ பேச்சை கேக்காம, உன் பக்கம் இருக்கற ஞாயத்தை எடுத்துப் பேசியிருக்கார்.

உன் அப்பனுக்கு வார்த்தைதான் முக்கியம். பேசின வார்த்தைக்கு முக்கியத்துவம் குடுக்கற ஆளு அவரு. பொண்டாட்டி புள்ளை எல்லாமே கொடுத்த வார்த்தைக்கு அப்புறம்ன்னு நெனைக்கற ஆளு. அவரு ஏற்கனவே, உன் சித்தப்பா, உன் மாமா எல்லார்கிட்டவும், உன் கல்யாண விஷயத்தைப் பத்தி பேசிட்டாரு. உன் உறவு முறையில என்பது சதவீதம் பேருக்கு உன் கல்யாணம் பத்தி தெரிஞ்சு போச்சு. இப்ப போய் நீ ஏதாவது வில்லங்கம் பண்ணே; மவனே; இதுக்கு மேல உன் கிட்ட அந்தாளு பேசறதையே நிறுத்திடுவாரு. மானமுள்ள மனுஷன் அவரு; ஞாபகம் வெச்சுக்க. ஸோ … நீ இந்த விஷயத்தை அவருகிட்டவும் பேச முடியாது. நடராஜன் பெயரும் செல்வாவின் மனதிலிருந்து அடிக்கப்பட்டது.

உன் அம்மாவுக்கு, சுகன்யா தன் கல்யாணத்துக்கு முன்னயே, உடம்பு அரிப்பெடுத்து, உன் கூட தனியா இருந்தான்னு ரொம்ப மனக்குறை. அவ தன் அழகை காமிச்சி உன்னை மயக்கிட்டான்னு ரொம்பவே எரிச்சல். அம்மா அவ மேல இந்த விஷயத்துல, அவ நடத்தை மேலே கொஞ்சம் நல்ல அபிப்பிராயம் இல்லாம இருக்காங்க. நீ உன்னைத் தவிர சுகன்யா யாரையுமே திரும்பியே பாத்தது இல்லைன்னு காலையில் நடுக்கூடத்துல நாலு பேரு முன்னாடி கற்பூரம் கொளுத்தி சத்தியம் பண்ணே? உன் பேச்சைக் கேட்டுக்கிட்டு, அவங்களும் கடைசியா எக்கேடோ கெட்டுப் போடான்னு தன் முடிவுலேருந்து உனக்காக இறங்கி வந்திருக்காங்க.